தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணாடி பார்க்கும் இயந்திர மனிதன்

Go down

கண்ணாடி பார்க்கும் இயந்திர மனிதன் Empty கண்ணாடி பார்க்கும் இயந்திர மனிதன்

Post  meenu Sat Mar 02, 2013 2:32 pm

தனது உருவத்தை கண்ணாடியில் பார்த்து அடையாளம் காணும் இயந்திர மனிதன் ஒன்று அதற்கான தரப்பரீட்சையை விரைவில் எதிர்கொள்ளவுள்ளது.

''நிக்கோ'' என்று அழைக்கப்படுகின்ற இந்த இயந்திர
மனிதனின் இந்த சுய அடையாளப்படுத்தல் என்பது, சிந்திக்கும் திறன் கொண்ட
இயந்திர மனிதர்களை உருவாக்குவதற்கான விஞ்ஞானிகளின் இலக்கில் அடுத்த ஒரு படி
முன்னேற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த ''நிக்கோ'' அடுத்து வரும் மாதங்களில் இதற்கான சோதனையை எதிர்கொள்ளவுள்ளது.

கார்களில் உள்ள பக்க கண்ணாடிகள் மூலம் தமக்கு
பின்னால் வருபவற்றை அடையாளம் காணும் மனிதத் திறமை போன்று, கண்ணாடிமூலம்,
சுற்றவரவுள்ள பொருட்களை அடையாளம் காணுவதுதான் இந்த நிக்கோவின் முக்கிய
பணியாக இருக்கும்.

கண்ணாடியில் தெரியும் தனது கை தன்னில்தான்
இருக்கிறது, அது கண்ணாடிக்கு அப்பால் உள்ள பொருட்களைச் சேர்ந்ததல்ல என்பதை
பகுத்து அறிவதற்கான சோதனைதான் தற்போது நடத்தப்பட இருப்பதாக, ஆய்வு மாணவரான
''ஜஸ்டின் ஹார்ட்'' பிபிசிக்கு கூறினார்.

இதுவரை தனது கையின் விம்பத் தெறிப்பை அடையாளம்
காணக்கூடியதாக இந்த இயந்திர மனிதன் புறோகிராம் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,
அது முழுமையான கண்ணாடிச் சோதனையில் தேறியாக வேண்டும் என்கிறார் ஹார்ட்.

இந்தக் கண்ணாடிச் சோதனை 1970 களில் ஆரம்பிக்கப்பட்டது. சுய விழிப்புணர்வை சோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அடிப்படைச் சோதனை இது.




கண்ணாடி பார்க்கும் இயந்திர மனிதன் 120827150600_justin_hart_304x171_bbc_nocreditநிக்கோவுடன் ஜஸ்டின் ஹார்ட்



பெரும்பாலும் இது விலங்குகளில்
பயன்படுத்தப்பட்டது. முதலில் அந்த விலங்கு கண்ணாடிக்கு பழக்கப்படும்.
பின்னர் அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அதன் முகத்தில் மணமற்ற,
பூசுப்பட்டிருக்கும் உணர்வை உடலுக்குத் தராத நிறம் அதன் முகத்தில்
பூசப்படும்.

பின்னர் அதனை மீண்டும் கண்ணாடியில் காண்பித்து, அந்த விம்பத்துக்கு இது காட்டும் பிரதிச் சமிக்ஞைகள் கண்காணிக்கப்படும்.

அது காண்பிக்கும் பிரதிபலிப்பை வைத்து அந்த விலங்கின் சுய விழிப்புணர்வு அளவு செய்யப்படும்.

தமது சொந்த உடலில் போடப்பட்டிருக்கும்
அடையாளங்களுக்கு அவை எவ்வகையான பிரதிபலிப்பை காண்பிக்கின்றன, அது தனது
விம்பம் இல்லை வேறு ஏதோ ஒன்று என்று அவை நினைக்கின்றனவா என்பதில் இருந்து
அவற்றின் சுய விழிப்புணர்வு கணிக்கப்படும்.

நிக்கோ தன்னைத் தானே அடையாளம் கண்டுகொள்வதற்கான ஒரு மென்பொருளை ஜஸ்டின் ஹார்ட் உருவாக்கியிருக்கிறார்.

சில குரங்கு வகைகள், யானைகள் மற்றும் டொல்பின்கள்
உட்பட சில உயிரினங்கள் மாத்திரமே இதுவரை இந்தச் சோதனையில்
தேறியிருக்கின்றன. மனிதக் குழந்தைகள் கூட தாம் 18 மாதங்களைக் கடக்கும் வரை
இந்த சோதனையில் தேறியது கிடையாது.

விஞ்ஞானிகள் கடந்த காலங்களில் பல இயந்திர
மனிதர்களை இந்த வகையில் சுய விழிப்புணர்வை சோதனை செய்திருக்கிறார்கள்.
ஆனால் எவரும் தோற்றத்தை மாத்திரம் வைத்து தம்மைத் தாமே முழுமையாக அடையாளம்
கண்டுகொள்ளக்கூடிய இயந்திர மனிதனை இதுவரை உருவாக்கியதில்லை.

நகர்வை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், தோற்றத்தை
வைத்து இந்தச் சோதனை நடப்பதாகவும், அதற்கான முழுமையான கண்ணாடிச் சோதனையை
தேறச் செய்ய தாம் முயலுவதாகவும் ஹார்ட் கூறினார்.

2007 இல் நகர்வுகளைக் கொண்டு வேறு பொருட்களை தன்னில் இருந்து பிரித்தறியும் சோதனையில் ஒரு இயந்திர மனிதன் வெற்றிபெற்றிருக்கிறது.

தன்னுடைய நகர்வுகளை பிரதி பண்ணவும், வேறு
றோபோக்களின் நகர்வுகளை பிரதிபண்ணவும் அவற்றை வேறுபடுத்தி அறியவும்
றோபோக்களால் தற்போது முடிகிறது.

வெவ்வேறு வகையான விம்பங்களின் வேறுபாட்டை அடையாளம்
காணக்கூடிய கியூபோ என்னும் ரோபோ, தனது விம்பம் வரும் போது ''திஸ் இஸ் யூ
கியூபோ'' என்று கூறவும் செய்கிறது.

ஹார்ட் அவர்கள் தனது மேற்பார்வையாளரான பிரைன் ஸ்காசலட்டி அவர்களுடன் சேர்ந்து சில மாதங்களில் தமது ஆய்வு அறிக்கையை வெளியிடுவார்.

இயந்திர மனிதர்களை உருவாக்குவதில் இது ஒரு முக்கிய
வெற்றிதான், ஆனால், பகுத்தறிவைக் கொண்ட இயந்திர மனிதனை உருவாக்குவதற்கான
இறுதி முயற்சி என்று இதனைக் கூறமுடியாது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum