முகம் பொலிவு பெற...
Page 1 of 1
முகம் பொலிவு பெற...
Share on facebookShare on twitterMore Sharing Services
எலுமிச்சை சாற்றில் பாசிப்பயிறு மாவு கலந்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவி விட்டால் முகம் நல்ல நிறம் பெறும்.
பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறப்போட்டு காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் சிவப்பாகும்.
2 ஸ்பூன் அரிசி மாவு, 2 ஸ்பூன் தயிர் கலந்து இரவில் முகத்தில் தேய்த்து பிறகு நன்றாக கழுவி விடுங்கள். இதனால் பகலில் போட்ட மேக் அப் கலைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.
கருவளையத்தைப் போக்க தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைக் கலந்து லேசாகச் சுட வைத்து தடவி வந்தால் கரு வளையம் மறையும்.
ஆப்பிள் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் கண்கள் நல்ல அழகு பெறும். ஒளி சிறப்படையும்.
வேப்பம் பட்டையை நன்றாகக் காய வைத்துத் தூள் செய்து, அதில் தினமும் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளபளப்பாக இருக்கும். பற்கள் உறுதியாகும்.
பச்சைப்பயிறை சலித்து கோதுமை தவிட்டை கலந்து குளித்தால் தோலில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
மூக்கின் அருகில் கறுமை இருந்தால் மோரில் நனைத்த பஞ்சால் அதன் மீது தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 1 மாதம் இதனை செய்து வரவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum