உடற்பருமனால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு
Page 1 of 1

போஷாக்கின்மையால் இறப்பவர்களைவிட, இறப்போரின்
எண்ணிக்கை அதிகம் என்று உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான
காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய
காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
உலக அளவில் பார்க்க உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் பேர் இறந்தனர்.
போஷாக்கின்மை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கிறது.
ஆப்பிரிக்காவில் போதிய உணவு இல்லாமல், பலர் குறைந்த காலத்திலேயே இறந்துபோவது தொடர்வதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும் உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
தவிர உலக மக்களின் சராசரி ஆயுட்காலம்
அதிகரித்துள்ளது என்றாலும், அவர்கள் நோய்வாய்ப்படுகின்ற அளவு
அதிகரித்துள்ளது என்றும் இந்த ஆய்வு காண்பிக்கிறது.
மக்களிடையே நோயின் தாக்கங்கள் பற்றி உலக அளவில்
இதுவரை இல்லாத பாரிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தி
லான்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியிருக்கின்றன.
ஐந்து வருடகாலம் வேலைசெய்து தரவுகளை எல்லாம்
ஒருங்கிணைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு ஐநூறு
ஆராய்ச்சியாளர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.
கூடிய இரத்த அழுத்தம், புகைப்பழக்கம்,
மதுப்பழக்கம் போன்றவை உடல்நலப் பாதிப்புகளின் மிகப் பெரிய காரணியாக
உருவெடுத்துள்ளன என்று இந்த ஆய்வு காட்டுகிறது.
2010 நிகழ்ந்த இறப்புகளில் நான்கில் ஒன்றுக்குக்
காரணமாய் இருதயக் கோளாறும், மூளையில் இரத்தக்கசிவும் இருந்துள்ளது என இந்த
ஆய்வு கூறுகிறது. அந்த ஆண்டில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் இறப்புகளுக்கு
அந்நோய்கள் காரணமாக இருந்துள்ளன.
மக்களின் ஆயுட்காலம் பரவலாகப் பல நாடுகளிலும்
அதிகரித்துள்ளது என்றாலும், சராசரி ஆயுட்கால வயதில் செல்வந்த நாடுகளுக்கும்
ஏழை நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி என்னவோ குறையவில்லை என்று
தெரிவிக்கப்படுகிறது.
தவிர எய்ட்ஸ் நோயும் உயிரிழப்புகளுக்கான பெரிய
காரணங்களுல் ஒன்றாக இருக்கிறது. 2010ஆம் ஆண்டு மொத்தம் 15 லட்சம் பேர்
இதனால் உயிரிழந்துள்ளனர்.
இறப்புகளை ஏற்படுத்திய காரணங்களின் வரிசைப் பட்டியலில் நீரிழிவு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் மேலே சென்றுள்ளன.
ஆனால் வயிற்றோட்டம், காசநோய் போன்றவை இப்பட்டியலில் கீழிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடற்பருமனால் இறப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு
» ஹைதராபாத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு'
» விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து கூட்டம்… இங்கிலாந்தில் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
» இனி படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல! - த்ரிஷா
» மரண தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை 1455

Permissions in this forum:
You cannot reply to topics in this forum