தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Go down

பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்  Empty பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Post  meenu Sat Mar 02, 2013 1:47 pm

டெல்லியில், துணை மருத்துவ மாணவி ஒருவர், பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்டு 13 நாள் போராட்டத்துக்குப்பிறகு உயிரிழந்த வழக்கில்,
டெல்லி காவல்துறையினர் வியாழக்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்துள்ளனர்.




தொடர்புடைய விடயங்கள்







பாலியல் வல்லுறவுக்காகப்
பயன்படுத்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் மற்றும்
கூட்டாளிகள் உள்பட ஐந்து பேருக்கு எதிராக கொலை, கற்பழிப்பு, கடத்தல், பணம்
பறித்தல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் 6 பேர் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ள நிலையில், 6வது நபர் 18 வயதை எட்டாதவர் என்பதால், அவர்
மீது இளம் குற்றவாளிகளுக்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.
அவரது வயதை உறுதி செய்ய, எலும்பு உறுதிப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.





திலகவதி பேட்டி














"காவல்துறையில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்கவேண்டும்"

இந்தியாவில்
அதிகரித்துவரும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை காவல் துறையினர்
மேலதிக கவனத்துடன் கையாள்வதற்கு காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை
அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறார் தமிழக காவல்துறையின் முன்னாள் தலைமை
இயக்குநர் ஜி திலகவதி


கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க





33 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், இளம்
குற்றவாளியின் பங்கு குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்திய
சட்டப்படி, பாலியல் வல்லுறவு வழக்கில், இளம் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 3
ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும்.

தெற்கு டெல்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட்
முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வரும்
5-ம் தேதி பரிசீலிக்கப்படும். அதன்பிறகு, பாலியல் குற்றங்களை
விசாரிப்பதற்கென்று நேற்று துவக்கப்பட்ட விரைவு நீதிமன்றத்துக்கு
மாற்றப்படும் என்று தெரிகிறது.

இந்த வழக்கு மிக விரைவாக விசாரித்து
முடிக்கப்படும். அதிகபட்சமாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட வாய்ப்புக்கள்
உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

டிசம்பர் மாதம் 16-ம் தேதி, ஓடும் பேருந்தில்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட அந்தப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டு,
தனது நண்பருடன் வெளியே தூக்கியெறியப்பட்டார். மேல் சிகிச்சைக்காக
சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், டிசம்பர் மாதம் 29-ம் தேதி
உயிரிழந்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum