தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல் வன்முறை: கூடுதலாக பெண் காவலர்களை நியமிக்க முடிவு

Go down

பாலியல் வன்முறை: கூடுதலாக பெண் காவலர்களை நியமிக்க முடிவு  Empty பாலியல் வன்முறை: கூடுதலாக பெண் காவலர்களை நியமிக்க முடிவு

Post  meenu Sat Mar 02, 2013 1:46 pm

டெல்லியில் 23 வயது மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நிலையில், பெண்களின் பாதுகாப்புக்காகவும்,
பாலியல் வல்லுறவுக் குற்றங்களைக் கையாள்வதற்காகவும் அரசு பல மாற்றங்களை
எடுக்கத் தயாராகியுள்ளது.

அதன் ஒரு படியாக, நாடு முழுவதும், காவல் துறையில்,
பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.




தொடர்புடைய விடயங்கள்







தண்டனை

டெல்லியில் மாநில காவல்துறை தலைவர்கள் மற்றும்
உயரதிகாரிகளின் மாநாட்டில் இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர், கடந்த 2011-ம்
ஆண்டில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும்
மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 78 ஆயிரம்
வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஆனால் 30
ஆயிரம் வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டினார்.

தண்டனை வீதம் மிகக்குறைவாக இருப்பதை காவல்துறை
தலைவர்களிடம் சுட்டிக்காட்டி, விசாரணைகளை விரைவுபடுத்த நடவடிக்கை
எடுக்குமாறு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பெண்களின் பாதுகாப்பை மேலும்
வலுப்படுத்த, காவல் நிலையங்களில் பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

''பெண் காவலர்கள் 2508 பேரை புதிதாக
நியமிப்பதற்காக, நேற்று நிதியமைச்சகத்துக்கு ஒரு கோப்பு
அனுப்பியிருக்கிறேன். அதில், 418 பேர் உதவி ஆய்வாளர்கள், மீதமுள்ள 2088
பேர் பெண் காவலர்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும், இரண்டு உதவி
ஆய்வாளர்களும், 10 பெண் காவலர்களும் நியமிக்கப்படுவார்கள். இந்த நியமனங்கள்
அனைத்தும் டெல்லி காவல் நிலையங்களுக்கானவை. அதே நேரத்தில், நாடு முழுவதும்
இதேபோன்று கூடுதலாக பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்’’ என்றார்
உள்துறை அமைச்சர் ஷிண்டே.

வயது வரம்பு




பாலியல் வன்முறை: கூடுதலாக பெண் காவலர்களை நியமிக்க முடிவு  120801105151_sushil_kumar_shinde304மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே



டெல்லி மாணவி பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்ட வழக்கில் கைதான 6 பேரில், ஒருவர் 18 வயதிலும் குறைந்தவர்
என்பதால், அவரை இளம்பராய- குற்றவாளிகளுக்கான சட்டப்பிரிவின் கீழ்தான்
விசாரிக்க வேண்டும். அவரை அதற்கான நீதிமன்றத்தில்தான் விசாரிக்க வேண்டும்.
அவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டாலும், 18 வயது நிரம்பாததால், அதிகபட்சமாக 3
ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும்.

வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட
குற்றப்பத்திரிக்கையில் இளம்பராய குற்றவாளி பற்றி
தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. அவர் 18
வயதுக்குக் குறைவானவர் தானா என்பதை பரிசோதிக்க, எலும்புப் பரிசோதனை
நடத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பான முடிவுகளுக்காக போலீசார்
காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இளம் குற்றவாளிகளுக்கான வயது வரம்பை
18-ல் இருந்து 16 ஆகக் குறைக்க வேண்டும் என்று இன்று காவல்துறை தலைவர்கள்
மாநாட்டில் சிலர் யோசனைகளை முன்வைத்ததாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார்
ஷிண்டே தெரிவித்தார். ஏற்கெனவே அது 16 ஆகத்தான் இருந்தது என்றும், அதை
மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள்
சுட்டிக்காட்டியதாகவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து இறுதி முடிவு
எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது, பாலியல் குற்றங்கள் தொடர்பாக இணைய
தளத்தின் மூலமாகவும் புகார் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக
அமைச்சர் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய கருத்து

இதற்கிடையில், பாலியல் வல்லுறவு தொடர்பாக
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்து புதிய
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் காரணமாக,
நகர்ப்புறங்களில் மட்டுமே இவ்வாறான பாலியல் வல்லுறவுகள் நடப்பதாகவும்
கிராமப்புறங்களில் இதுபோன்ற கூட்டு பாலியல் வல்லுறவுக் குற்றங்கள்
நடப்பதில்லை என்றும் பகவத் தெரிவித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்பட பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதேநேரத்தில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தைச்
சேர்ந்த அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, 'லஷ்மண ரேகையைத்' தாண்டியதால்தான்
சீதைக்கு கஷ்டம் வந்தது. அதேபோல, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க,
பெண்கள் 'லஷ்மண ரேகையைத்' தாண்டாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்த
கருத்தும் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது.

அந்தக் கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுாறு பாஜக தலைமை அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum