காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியாகுமா?
Page 1 of 1

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கெசட்
அரசிதழில் வெளியிட முடியுமா, முடியாதா என்ற முடிவை இந்த மாத இறுதிக்குள்
மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் இருந்து
கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்துள்ள
வழக்கின் விசாரணை, நீதிமன்ற விடுமுறைக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை
மீண்டும் துவங்கியது.
அப்போது,
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, மத்திய அரசு நடுவர் மன்ற
இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவில்லை என்று தமிழக அரசின் சார்பில்
ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் தெரிவித்தார்.
மேலும், கடந்த மாத இறுதிக்குள் அரசிதழில் வெளியிட
நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு
உறுதியளித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்ட பின்னரும் அரசு அதை
செயல்படுத்தாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று நீதிபதி டி.கே.
ஜெயின் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்தது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர்
ஜெனரல் ஹரின் ராவல், நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய
நீர்வளத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதுகுறித்து, சட்ட
அமைச்சகத்தின் ஆலோசனையைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.
புதிய சட்ட அமைச்சர் பொறுப்பேற்றிருப்பதால் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் ஹரின் ராவல் சுட்டிக்காட்டினார்.
அதேநேரத்தில், நீர்வளத்துறை அமைச்சகத்தின் முடிவு, சட்ட அமைச்சகத்தைக் கட்டுப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்துக்கு வெளியில் கர்நாடகா
மேலும், நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில் வெளியிட
தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கும் கர்நாடக
அரசு, ஆனால் நீதிமன்றத்துக்கு வெளியில் அதை வெளியிடக்கூடாது என்று
ஆட்சேபிப்பதாகவும் அந்த மாநில முதலமைச்சர் இதுதொடர்பாக பிரதமருக்குக்
கடிதம் எழுதியிருப்பதாகவும் ஹரின் ராவல் கூறினார்.
அப்போது, கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த
வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், அரசிதழில் வெளியிடுவதில் ஆட்சேபணை இல்லை
என்றும், ஆனால் நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கு இன்னும்
நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும்
தெரிவித்தார்.
அதையடுத்து, நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில்
வெளியிட முடியுமா, முடியாதா என்பது குறித்து மத்திய அரசு இந்த மாத
இறுதிக்குள் முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேநேரம், நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாட்டையும்,
வெளியில் ஒரு நிலைப்பாட்டையும் கர்நாடக அரசு எடுப்பது சரியல்ல என்றும்
நீதிபதிகள் எச்சரித்தனர்.
மேலும், தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தர வேண்டிய
தண்ணீரின் அளவு குறித்து வரும் 11-ம் தேதிக்குள் காவிரி கண்காணிப்பு ஆணையம்
கூடி முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு
» காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு
» காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தொழிலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில்
» மே 1-ல் 'பில்லா-2' வெளியாகுமா?
» "வன யுத்தம்' திரைப்படம் வெளியாகுமா? முத்துலட்சுமி மனு மீது இன்று விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum