பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை : வல்லுநர் குழு பரிந்துரை
Page 1 of 1

இந்தியாவில் பாலியல் வல்லுறவு காரணமாக ஒரு பெண் இறக்க
நேர்ந்தால், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில்
இருக்கும்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி வர்மா தலைமையிலான
குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில், ஓடும்
பேருந்துல் பலரால் பாலியல் வல்லுறவு மற்றும் தாக்குதலுக்கு ஆளாகி பின்னர்
மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ஒரு மாணவி மரணமடைந்ததை அடுத்து
இந்தியாவில் இவ்வகையான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட
வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கவும், இவ்வகையான குற்றங்களை தடுக்கவும்,
குற்றங்கள் இழைக்கப்படும் போது எப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை அளிக்கவும் இந்திய உச்சநீதிமன்றத்தின்
முன்னாள் தலைமை நீதிபதி ஜே எஸ் வர்மா தலைமையிலான குழுவை இந்திய அரசு
அமைத்தது.
இப்படியும் கோரிக்கைகள் எழுந்தன
அந்தக் குழு புதன்கிழமை(23.1.13) தமது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை வெளியிட்டது.
பாலியல் குற்றங்களுக்கு அதிகப்படியாக வாழ்நாள்
சிறை என்று பரிந்துரை செய்தாலும், அத்தையக குற்றங்களுக்கு மரண தண்டனை
அளிக்கப்பட வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளை அந்த மூவர் குழு
நிராகரித்தது.
மேலும் பாலியல் தாக்குதல் என்றால் என்ன என்பது குறித்த விளக்கத்தையும் விரிவாக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகள் மீதும் விமர்சனம்
அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களில் பங்குபெற்றனர்.
இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு அளிக்கப்படும்
தண்டனைகள் தொடர்பான சட்டங்கள் குறித்து ஆராயுமாறு நீதிபதி வர்மா
தலைமையிலான குழுவை இந்திய அரசு கேட்டுக் கொண்டது.
மோதல் நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு படைகள்
பாலியல் வன்செயல்களில் ஈடுபடும் போது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும் எனவும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதேபோல் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில்
ஈடுபடுத்துவோர் மீதும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும் எனவும்
இக்குழு தெரிவித்துள்ளது.
நீதிபதி வர்மா, ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்றத்தின்
முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத் மற்றும் இந்திய அரசின் முன்னாள் கூடுதல்
தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய இந்தக் குழவுக்கு
பொதுமக்கள், மகளிர் அமைப்புகள், பல்துறை வல்லுநர்கள் மற்றும் பிரிட்டன்,
கனடா, தென் ஆப்பிரிக்க உட்பட பல நாடுகள் ஆகிய தரப்புகளிலிருந்து 80,000
க்கும் அதிகமான ஆலோசனைகள் வந்து சேர்ந்தன.
பெண்ணியவாதி வரவேற்பு
வ. கீதா செவ்வி
'வர்மா கமிஷன் அறிக்கை வரவேற்கத்தக்கதே' - வ. கீதா
இந்தியாவில் பாலியல்
குற்றங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நீதிபதி வர்மா
தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெண்ணியவாதியான வ. கீதா அவர்கள்
வரவேற்றிருக்கிறார்.
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக எடுக்க
வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நீதிபதி வர்மா தலைமையிலான நிபுணர் குழுவின்
பரிந்துரைகளை பெண்ணியவாதியான வ. கீதா அவர்கள் வரவேற்றிருக்கிறார்.
குறிப்பாக குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல்
குற்றங்கள் மற்றும் இராணுவத்தினர் மேற்கொள்ளக்கூடிய பாலியல் குற்றங்கள்
தொடர்பில் அந்தக் குழுவின் பரிந்துரைகள் மிகவும் தேவையானவை என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பாலியல் வல்லுறவுக்கு கடுமையான தண்டனை
வழங்கப்பட வேண்டும் என்று அந்த நிபுணர்குழு பரிந்துரைத்திருக்கின்ற
போதிலும், அதற்காக மரண தண்டனை வழங்கப்படக் கூடாது என்று அது
பரிந்துரைத்திருப்பதும் வரவேற்கத்தக்கது என்றும் கீதா கூறியுள்ளார்.
அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எண்டோசல்ஃபானை 2 ஆண்டுகள் அனுமதிக்க பரிந்துரை
» பாலியல் குற்றங்களுக்கு டெல்லியில் விரைவு நீதிமன்றம்
» பாலியல் வன்கொடுமை திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் ‘கற்பழிப்பு குற்றவாளி மீண்டும் கற்பழித்தால் மரண தண்டனை’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum