ஹெட்லியைக் ஒப்படைக்கச் சொல்லி அமெரிக்காவிடம் கேட்போம்: குர்ஷித்
Page 1 of 1

மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குத்
திட்டமிட்டதில் முக்கிய பங்காற்றியமைக்காக அமெரிக்க நீதிமன்றத்தால் 35
ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற
அமெரிக்கப் பிரஜையை இந்தியாவிடம் ஒப்படைக்கச் சொல்லி தொடர்ந்தும் தாங்கள்
வலியுறுத்தப்போவதாக இந்திய அரசு கூறுகிறது.
அமெரிக்காவில் ஹெட்லிக்கு வழங்கப்பட்ட தண்டனையின்
அளவு தமக்கு சற்றே அதிருப்தி அளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான்
குர்ஷித் கூறினார்.
குற்றத்தை
ஒப்புக்கொண்டு, அமெரிக்க அதிகாரிகளுக்கு விசாரணைகளில் ஒத்துழைத்ததன் மூலம்
52 வயது ஹெட்லி, மரண தண்டனையையும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதையும்
தவிர்த்துள்ளார்.
<blockquote>
"ஹெட்லியை ஒப்படைக்கச்சொல்லி அமெரிக்காவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்."
</blockquote>
அமைச்சர் சல்மான் குர்ஷித்
வியாழனன்று அமெரிக்க நீதிமன்றம் ஹெட்லிக்கான
தண்டனையை அறிவித்த நிலையில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கருத்து
வெளியிட்ட அமைச்சர் குர்ஷித், "இந்த தண்டனை, நீதிபதியின் தீர்ப்பு எல்லாம்
வெறும் ஆரம்பம்தான். அமெரிக்காவில் இதையெல்லாம் கையாள சட்ட நடைமுறைகள்
இருக்கின்றன என்றாலும், எங்களிடம் ஒப்படையுங்கள் என்ற எமது கோரிக்கை
தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது" என்று தெரிவித்தார்.
ஹெட்லியை இந்தியாவில் வைத்து விசாரிக்க வேண்டும்
என்று இந்தியா விரும்புகிறது என்றும், இந்த நாட்டில் அவருக்கு மேலும்
கடுமையான தண்டனை கிடைக்கலாம் என்றும் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்
ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்கச் சொல்லி இந்தியா வலியுறுத்தும் என இந்திய உள்துறைச் செயலர் ஆர் கே சிங் கூறியுள்ளார்.
டேவிட் ஹெல்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்
என்று இந்தியாவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள்
அனைவரும் விரும்புவதாக ஆர்.கே.சிங் குறிப்பிட்டார்.
வியாழனன்று ஹெட்லிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய
அமெரிக்க மாவட்ட நீதிபதி ஹேரி லெய்னென்வெய்பெர், "விசாரணைகளுக்கு ஹெட்லி
ஒட்துழைத்திருந்தார் என்றாலுங்கூட, திட்டமிடலில் அவர் பங்காற்றிய அந்த
பயங்கரவாதச் செயலால் மிகக் கொடுமையான பாதிப்புகள் விளைந்துள்ளன என்பதை
யாராலும் மறந்துவிட முடியாது" என்று தெரிவித்தார்.
திருந்திவிட்டதாக ஹெட்லி சொன்னாலும் அவரது வார்த்தைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
ஹெட்லி யார்?
லஷ்கர் இ தொய்பா என்ற பாகிஸ்தானிய பயங்கரவாத
அமைப்பைச் சேர்ந்த ஆயுதாரிகள் இந்த தாக்குதலை நடத்த உடந்தையாக இருந்தது
தொடர்பில் 12 வெவ்வேறு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால் ஹெட்லிக்கு
இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
தாவூத் ஜிலானி என்ற பாகிஸ்தானிய தந்தைக்கும்
அமெரிக்கத் தாய்க்கும் பிறந்த ஹெட்லி, தான் முஸ்லிம் என்றோ, பாகிஸ்தானி
பூர்வீகம் கொண்டவர் என்றோ தெரியப்படுத்தாமல் 2006ல் இந்தியாவுக்குள்
நுழைந்திருந்தார் என்று இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2002ஆம் ஆண்டு முதல் லஷ்கர் இ த்பா அமைப்பு வேலைப்பார்த்து வருவதாக இவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
2009ல் ஷிகாகோவில் இருந்து ஃபிலெடெல்ஃபியாவுக்கு விமானம் ஏறிய நேரத்தில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் தந்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றம்
உறுதிசெய்யப்பட்ட கனடிய பாகிஸ்தானிய வியாபாரி தாஹாவுர் ரானாவுக்கு லஷ்கர் இ
தொய்பாவுக்கு ஆதரவாய்ச் செயல்பட்டதற்காக இம்மாதத்தில் முன்னதாக 14
ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மும்பை தாக்குதல்
2006ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் ஆண்டு ஆரம்பித்து
அறுபது மணி நேரங்கள் நீடித்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது, முக்கிய
ரயில் நிலையம், சொகுசு விடுதிகள், யூத கலாச்சார மையம் உட்பட பல்வேறு
இடங்களில் துப்பாக்கிதாரிகள் சரமாரியாகச் சுட்டு 166 பேரைக்
கொன்றிருந்தனர்.
துப்பாக்கிதாரிகள் 9 பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
உயிரோடு பிடிபட்ட ஒரே துப்பாக்கிதாரியான அஜ்மல் கஸாபும் கடந்த நவம்பரில் தூக்கிலிடப்பட்டிருந்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அமைச்சர் குர்ஷித் பேச்சு : கருணாநிதி கண்டனம்
» ஐ லவ் யூ சொல்லி ரொம்ப நாளாச்சா?
» உண்மையைச் சொல்லி கடவுளை மாட்சிப்படுத்துங்கள்
» சொல்லிச் சொல்லி சிரியுங்கள்
» தூது நீ சொல்லி வாராய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum