தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உண்மையைச் சொல்லி கடவுளை மாட்சிப்படுத்துங்கள்

Go down

உண்மையைச் சொல்லி கடவுளை மாட்சிப்படுத்துங்கள் Empty உண்மையைச் சொல்லி கடவுளை மாட்சிப்படுத்துங்கள்

Post  meenu Sat Mar 09, 2013 1:09 pm

உதவியை உரியவர்களிடம் கேட்டுப் பெறுவதில் தயக்கமே வேண்டாம். அதேபோல் வலிய வந்து கேட்போருக்கு உதவுவதிலும் தயக்கம் வேண்டாம். கடவுளின் குழந்தைகளாகிய நமக்கு பிறரிடம் உதவி கோருவதும் பிறருக்கு உதவுவதும் பிறப்புரிமை என்றே சொல்லலாம். பிறருக்கு உதவுவதால் நாம் நம்மையே பரிசுத்தவான்களாக ஆக்கிக் கொள்கிறோம். அந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்தவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

பிறருக்கு ஒரு பொருளைக் கொடுப்பதாலோ அல்லது வழி நடத்திச் செல்வதாலோ நாம் குறைந்துவிடப் போவதில்லை. அதற்கு மாறாக, கொடுக்கக் கொடுக்கக் கூடுமே அல்லாது குறையவே குறையாது என்ற புனித விதிக்கு ஒப்பவே நிலைமைகள் சேரும். ‘‘இயேசு சென்று கொண்டிருந்தபோது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். இயேசுவின் சீடர்கள் அவரிடம், ‘‘இவர் பார்வையற்றவராய் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?’’ என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, ‘‘இவர் செய்த பாவமுமல்ல, இவர் பெற்றோர்கள் செய்த பாவமுமல்ல. கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது. அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி’’ என்றார். இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, ‘‘நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்’’ என்றார். சிலோவாம் என்பதற்கு ‘‘அனுப்பப்பட்டவர்’’ என்று பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.

அக்கம் பக்கத்தாரும் அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும் ‘‘இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?’’ என்று பேசிக்கொண்டார்கள். சிலர் ‘‘அவரே’’ என்றனர். வேறுசிலர் ‘‘அவரல்ல, அவரைப்போல் இவரும் இருக்கிறார்’’ என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், ‘‘நான்தான் அவன்’’ என்றார். அவர்கள், ‘‘உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?’’ என்று அவரிடம் கேட்டார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ‘‘இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி என் கண்களில் பூசி, சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும் என்றார். நானும் போய்க் கழுவினேன். பார்வை கிடைத்தது’’ என்றார். ‘‘அவர் எங்கே?’’என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், ‘‘எனக்குத் தெரியாது’’ என்றார். அவரை அவர்கள் பரிசேயர்களிடம் கூட்டி வந்தார்கள். ‘‘இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வு நாள். எனவே, எப்படிப் பார்வை பெற்றாய்?’’ என்று பரிசேயரும் கேட்டார். அதற்கு அவர், ‘‘இயேசு என் கண்களில் சேறு பூசினார். பின்பு நான் கண்களைக் கழுவினேன். இப்போது என்னால் பார்க்க முடிகிறது,’’ என்றார். பரிசேயருள் சிலர், ஓய்வு நாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது என்று பேசிக்கொண்டனர். ஆனால் வேறு சிலர், பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா எனக் கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், ‘‘உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?’’ என்று மீண்டும் கேட்டனர். ‘‘அவர் ஓர் இறைவாக்கினர்’’ என்றார், பார்வை பெற்றவர். அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை. ‘‘பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா, இவனுக்கு இப்போது எப்படிக் கண் தெரிகிறது’’ என்று கேட்டார்கள். அவருடைய பெற்றோர் மறுமொழியாக, ‘‘இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவியிலேயே பார்வையற்றவன்தான். ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ, யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன்தானே இந்த அற்புதத்தை அனுபவித்தவன்? நடந்ததை அவனே சொல்லட்டும்’’ என்றனர். யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி விடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். அதனால் அவருடைய பெற்றோர், ‘அவனிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றனர்.

பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு, ‘‘உண்மையைச் சொல்லி கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றனர்.
பார்வை பெற்றவர், ‘‘அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன். இதுதான் உண்மை’’ என்றார். அவர்கள் அவரிடம், ‘‘அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித் தான்?’’என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, ‘‘ஏற்கனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்கிறீர்கள்? ஒருவேளை நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களா?’’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பழித்து, ‘‘நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும். இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது’’ என்றார்கள். அதற்கு அவர், ‘‘இது வியப்பாக இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார். அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே! பாவிகளுக்கு கடவுள் செவி சாய்ப்பதில்லை, இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவிசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவும் செய்திருக்க இயலாது’’ என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘‘பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?’ என்று கோபித்து அவரை வெளியே தள்ளினர்.

இந்த சம்பவத்தை இயேசு கேள்விப்பட்டார். பின் அவரைக் கண்டபோது, ‘‘மானிட மகனிடம் நீர் நம்பிக்கைக் கொள்கிறீரா?’’ எனக் கேட்டார். அவர் மறுமொழியாக, ‘‘ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கைக் கொள்வேன்’’ என்றார். இயேசு அவரிடம், ‘‘நீர் அவரைப் பார்த்திருக்கிறீர். உம்மோடு பேசிக் கொண்டிருப்பவரே அவர்’’ என்றார். அவர், ‘‘ஆண்டவரே, நம்பிக்கைக் கொள்கிறேன்’’ என்று கூறி அவரை வணங்கினார். அப்போது இயேசு, ‘‘தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன். பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்’’ என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, ‘‘நாங்களுமா பார்வையற்றோர்?’’ என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், ‘‘நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால் உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் எங்களுக்குக் கண் தெரிகிறது என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்’’ என்றார். (யோவான் 9:1-41) சமூகத்தில் நிலவும் அநீதிகளையும் மக்களுடைய தவறான போக்குகளையும் எப்பொழுது பார்த்தாலும் குறை கூறிக்கொண்டே இருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தங்கள் பங்கிற்கு அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் அவர்கள் முனையவே மாட்டார்கள். பிறர் மீது குற்றம் கூறிக்கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை. என்றும் எங்கும் எப்பொழுதும் குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். குறைகளையும் குற்றங்களையும் கண்டுபிடித்து ஒரு வம்பாகச் சொல்லி, அங்கலாத்து, விட்டுவிடுவதைத் தவிர, அதைக் களைய ஓரளவாவது முயற்சிக்க வேண்டும் என்பதுதான் இயேசு உணர்த்தும் படிப்பினை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum