அமிலத் தாக்குதல் குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1

இந்திய உச்சநீதிமன்றம் அமிலத் தாக்குதல்கள் பெருகுவதைத்
தடுக்கும் வகையில் திட்டங்கள் தீட்டவென அனைத்து மாநில மற்றும் யூனியன்
பிரதேச தலைமைச் செயலாளர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டுமென மத்திய அரசிற்கு
புதன்கிழமை(6.2.13) உத்திரவிட்டது.
குறிப்பாக அமில விற்பனையினை முறைப்படுத்துவது குறித்து அம்மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.
கடந்த
2006ம் ஆண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர்,
அமில வீச்சு வழக்குகளை விசாரிக்க இந்திய குற்றவியல் சட்டத்தில் தனிப்பிரிவு
உருவாக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ
சிகிச்சையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஏற்கவேண்டும் எனவும்
கோரியிருந்தார்.
லட்சுமியின் மனு நீதிபதி ஆர்.எம்.லோத்தா
தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்த போது ஏற்கெனவே மனுதாரர்
கோரியபடி சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில்
தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமில வீச்சைத் தடுத்தல்,
பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்விற்கான குறித்த மேல்நடவடிக்கைகள் குறித்து
உச்சநீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.
மருத்துவச் செலவை யார் ஏற்பது?
உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது
என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சை குறித்து
தீர்ப்பில் ஏதும் கூறப்படவில்லை என்று இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினர் வாசுகி தமிழோசையிடம் கூறினார்.
மேலும், அடர்த்தி அமில விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் தாங்கள் கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாசுகி பேட்டி
"அமிலத் தாக்குதல் : அரசே மருத்துவச் செலவை ஏற்கவேண்டும்"
அமிலத் தாக்குதலுக்கு பாதிக்கப்படுவோருக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
தற்போது மத்திய அரசு இயற்றியுள்ள அவசர சட்டத்தில்
கூட, அமிலத் தாக்குதலுக்கான தண்டனை என்பதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது
என்றும், அதில் அபராதம் பத்து லட்சம் ரூபாய் வரை விதிக்கலாம், அத்தொகையில்
ஒரு பகுதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது
எனவும் வாசுகி கூறுகிறார்.
ஆனால் பாதிக்கப்பட்டவருக்கான மருத்துவ சிகிச்சைத்
தொகையை யார் ஏற்றுக் கொள்வது என்பது தெளிவாக்கப்படாமல் இருக்கிறது எனவும
அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
» பாக். பிரதமரை கைதுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
» ‘வனயுத்தம்’ பட வழக்கு: முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
» காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு
» சரப்ஜித் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum