காவிரி - உச்சநீதிமன்றம் கைவிரிப்பு
Page 1 of 1
காவிரி - உச்சநீதிமன்றம் கைவிரிப்பு
உச்சநீதிமன்றம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென கர்நாடகாவுக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்து விட்டது.
கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி.,
நீரை காவிரியில் திறந்து விட உத்தரவிடக்கோரி, தமிழகத்தின் சார்பில்
மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது,
கர்நாடகா சார்பில் கடந்த 20 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு
குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்று
செவ்வாய்க்கிழமை கர்நாடகா அந்த அறிக்கையை தாக்கல் செய்தது.
கர்நாடக அணைகளில் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர்
உள்ளதாகவும், இதனால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது
என்றும் கர்நாடக அரசின் தரப்பில் வாதிடப்பட்டது. வறட்சிக்காலங்களில்
பகிர்ந்துகொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து காவிரி நதி நீர்
தீர்ப்பாயத்தின் உத்திரவின்படி நடக்கவேண்டும் என தமிழகத்தின் சார்பில்
கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆர்.எம்.
லோத்தா மற்றும் ஜே, சலமேஸ்வர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட முடியாது. இதனை
பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்திடம் தமிழகம் முறையிடலாம்
எனக்கூறி அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 4ம் நாளுக்கு ஒத்திவைத்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு
» காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தொழிலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில்
» ஜெய்யுடன் காதலா…? அஞ்சலி மறுப்பு! ஜெய்யும் கைவிரிப்பு!!
» காவிரி தென்கரைத்தலங்கள்
» காவிரி காவிரி காவிரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum