காதலர் தினம்: “ மலராத கிருஷ்ணகிரி ரோஜாக்கள் ”
Page 1 of 1

உலகெங்கும் காதலர் தின நிகழ்வுகள்
மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட
ரோஜா சாகுபடியாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ரோஜாத் தோட்டம் ஒன்று
ஐரோப்பிய
நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உற்பத்தி செலவினங்கள்
அதிகரிப்பு ஆகிய காரணங்களால், இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து
ரோஜா மலர் ஏற்றுமதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தமிழ்நாடு
விவசாயிகள் சங்கம் கூறுகிறது.
இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் நூறு கோடி
ரூபாய்கள் அளவுக்கு இம்மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படக் கூடும் என்று
மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் ராம கவுண்டர்
பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
சாகுபடி செய்யப்பட்ட ரோஜா மலர்களை பாதுகாப்பாக
வைக்க, போதிய குளிர் பதன வசதிகள் இல்லாமை, உள்ளூரில் மலர் சாகுபடி வேலைக்கு
போதிய் ஆட்கள் கிடைக்காமை, இடுபொருட்களின் விலையேற்றம் போன்ற காரணங்களால்
விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை சந்திப்பதாக அவர் கூறுகிறார்.
வெளிநாட்டிலிருந்து ரோஜா மலர்களை வாங்குபவர்கள்
தமது நாடுகளில் உள்ள பொருளாதார நிலை காரணமாக, மிகக் குறைவான விலைக்கு
மலர்களை கேட்டதால் விவசாயிகள் அதை விற்க முடியாத சூழல் ஏற்பட்டது எனவும்
அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்.
ரோஜாக்கள் ஏற்றுமதிக்கான தமிழ்நாடு அரசின் தொழில்
வளர்ச்சி நிறுவனமான டிட்கோவுடன் கூட்டாக உருவாக்கப்பட்ட டான்ஃபுளோரா
அமைப்பு செயற்படாமல் முடங்கிப் போயுள்ளமை தமது நெருக்கடிகளுக்கு ஒரு காரணம்
எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறுகிறது.
ஆனால் இதை டாஃபுளோரா மறுக்கிறது. தமது அமைப்புக்கு
சில பின்னடைவுகள் ஏற்ப்பட்டது உண்மைதான் எனவும், ஆனால் “அவை இப்போது சரி
செய்யப்பட்டுவிட்டன” எனவும் அதன் மேலாண் இயக்குநர் நஜீப் அகமது கூறுகிறார்.
ரோஜா மலர் சாகுபடி என்பது ஒரு சிக்கலான விஷயம்
எனவும், குறிப்பிட்ட அளவுக்கு நீடித்து நிற்க கூடிய பொருளாதார வசதி
இருந்தால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும் எனவும் நஜீப் அகமது
தெரிவித்தார்.
சிறு விவசாயிகள் இதில் வெற்றி பெறுவது கடினம் எனவும் அவர் கூறுகிறார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» “காதலர் தினம்” சுவையான வரலாற்று கதைகள்
» காதலர் தினம் ஒரு நாள் மட்டுமில்லை, ஒரு வாரமும் தான்!!!
» இன்று காதலர் தினம் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகள்
» என்றென்றும் காதலர்" தினம்: மணம் முடிக்கத் துடிக்கும் சீன காதல் ஜோடிகள்
» நடிகைகளின் அறுவெறுப்பான கவர்ச்சி சினிமா அசிங்கமாகி விட்டது; இனி நடிக்க மாட்டேன் “காதலர் தினம்” நாயகி சோனாலி பிந்த்ரே பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum