வடபகுதி மீனவர் நடைபயணம்
Page 1 of 1
வடபகுதி மீனவர் நடைபயணம்
இலங்கையின் வடபகுதி கடற் பரப்பினுள், அத்துமீறி பிரவேசித்து தொழில் செய்யும், இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரியும், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத இந்தப் பிரச்சினை தொடர்பில் வடபகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கடலோர நடை பேரணியொன்று, ஞாயிறன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
மன்னார் மாவட்டம் முள்ளிக்குளத்தில் ஞாயிறன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடற்கரையோரமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கிராமத்தில் சென்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருக்கின்றது.
இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கைக் கடற்பரப்பின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு இதன் மூலம் வழி செய்ய வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இதபற்றி கருத்து வெளியிட்ட போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் குருநகரில் நடத்தப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதத்தின்போது, ஒரு மாத காலத்தில் இதற்குத் தீர்வு காணப்படும் என யாழ்ப்பாணம் அரச அதிபரினால் உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆயினும் ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினாலேயே இந்தப் பேரணி நடத்தப்படுவதாகவும் கூறினார்.
இந்திய மீனவர்கள் மட்டுமல்லாமல், தென்பகுதியைச் சேர்ந்த உள்நாட்டு மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோதச் செயற்பாடுகளினாலும் வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதுவிடயத்தில் அந்தந்த மாவட்டங்களின் இராணுவ உயரதிகாரிகளுடன் உள்ளுர் மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தி பிரச்சினைகளுனுக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடபகுதி கடலாகிய பாக்குநீரிணை கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதில் எதிர்நோக்கி வருகின்ற சவால்கள் குறித்து அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் விவாதம் நடத்திய சர்வதேச கருத்துப் பட்டறையொன்று, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, பலதரப்பட்ட ஆய்வு, பல மட்ட கருத்துப் பகிர்வுகள் என்பன அவசியம் என சுட்டிக்காட்டியிருக்கின்றது.
அத்துடன், இலங்கை இந்திய அரசாங்கங்கள், கல்வியியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும், இது விடயத்தில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கருத்துப்பட்டறையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடைபயணம் பெண்களைப் பாதிப்பது ஏன்?
» மீனவர் வேடத்தில் விஷ்ணு!
» மன்னார் மீனவர் ஆர்ப்பாட்டம்
» மீனவர் தினம் கொண்டாடிய தனுஷ்
» மன்னர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு'
» மீனவர் வேடத்தில் விஷ்ணு!
» மன்னார் மீனவர் ஆர்ப்பாட்டம்
» மீனவர் தினம் கொண்டாடிய தனுஷ்
» மன்னர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum