முழுப்பூசணியை மறைக்கிறார் மஹிந்த சமரசிங்க"
Page 1 of 1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ள கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும், அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தெரிவித்தது.
தொடர்புடைய விடயங்கள்
மனித உரிமை
புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தரப்புவாதங்களை முன்வைத்துப் பேசிய அமைச்சர் மஹிந்த சமரசசிங்க, மனித உரிமைகள் நிலமைகள் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில் இந்தத் தீர்மானம் தமது அபிப்பிராயப்படி தேவையற்ற ஒன்று என்று கூறியிருந்தார்.
ஆனால் இலங்கையில் மனித உரிமைகள் சூழலில் முன்னேற்றமில்லை என்று உள்ளூர் சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன.
இராணுவக் கெடுபிடி
படையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் மஹிந்த சமரசிங்க தெரிவித்தது முழு பூசணியை மறைக்கும் நடவடிக்கை என்று பெண்கள் நடவடிக்கை வலையமைப்பைச் சேர்ந்த சித்தாரா ஷரீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
படையினரிடம் தமது உறவினர்களை கையளித்த பலருக்கு அவர்களின் நிலை என்னஆனது என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். "இலங்கை அரச நிர்வாகத்தில் இராணுவ குறுக்கீடு இல்லை என்று அரசு கூறுகிறது ஆனால் வடக்கே இரண்டு லட்சம் இராணுவத்தினர் இருக்கின்றனர். நிரந்தர கட்டமைப்புகளையும் இராணுவம் உருவாக்கி வருகிறது. பாலர் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தைக்கூட இராணுவம்தான் வழங்குகிறது," என்றார் அவர்.
அரசு சாரா நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் அவர்களால் செயல்பட முடியாமல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஜெனிவாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மஹிந்த சமரசிங்க உரை
» 91 சிபார்சுகளை நிராகரிக்கின்றோம், 110 ஏற்கின்றோம் ஐ.நா வில் சமரசிங்க.
» கல்லடி புதிய பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திறந்து வைத்தார்.
» அமெரிக்காவின் அறிக்கையில் உண்மைக்க புறம்பான விடயங்கள். முற்றாக நிராகரிக்கின்றோம். ஜெனிவாவில் மகிந்த சமரசிங்க.
» யுத்தத்தில் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் தர எமது அரசு தயார்-மஹிந்த ராஜபக்ஷ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum