யாழ் செய்தித்தாள் விநியோகப் பணியாளர் மீது மீண்டும் தாக்குதல்
Page 1 of 1

யாழ்ப்பாணத்தில் தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் ஒருவர் மீது வியாழன் அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் கொண்டு சென்ற தினக்குரல் பத்திரிகைக் கட்டுக்களும் எரியூட்டப்பட்டிருக்கின்றன.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கோஷ்டி ஒன்று இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
தொடர்புடைய விடயங்கள்
தாக்குதல்
இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்ட 46 வயதுடைய சிவகுருநாதன் சிவக்குமார் என்ற அந்தப் பணியாளர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கையிலும் காலிலும் அடிகாயங்களுக்கு ஆளாகிய அவர், சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அதிகாலை வழமைபோல மோட்டார் சைக்கிளில் வடமராட்சி பிரதேசத்திற்கான பத்திரிகைப் பிரதிகளை எடுத்துச் சென்ற இவரை புத்தூர் பகுதியில் பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத ஆட்கள், இவரது மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று நடு வீதியில் நிறுத்தி வழி மறித்து தலையில் இரும்புக் கம்பியினால் தாக்கியிருக்கின்றனர்.
இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த சிவக்குமார் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளுக்கு பத்திரிகைக் கட்டுக்களுடன் தீமூட்டப்பட்டி விட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸில் புகார்
தாக்குதலின் பின்னர் அருகில் உள்ள இராணுவ முகாமுக்குச் சென்ற அவர், அங்கிருந்து தமது அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றார். அங்கிருந்த இராணுவத்தினர் அவரை அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்.
சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் உதவியோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
முந்தைய சம்பவம்
ஜனவரி மாதம் பத்தாம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகையின் வடமராட்சி பிரதேச விநியோகத்தரான நாகேஸ்வரன் பிரதீபன் என்பவரும், இதே பாணியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆட்களினால் தாக்கப்பட்டு, மோட்டார் சைக்கிளும் பத்திரிகைப் பிரதிகளும் எரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் பத்திரிகைகளின் சுதந்திரமான செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகவே, தமது பத்திரிகை விநியோகப் பணியாளர் மீது இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தான் கருதுவதாக தினக்குரல் பத்திரிகையின் யாழ் பிராந்திய ஆசிரியர் விநாயகம்பிள்ளை அற்புதானந்தன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ் கட்டளைத் தளபதியின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு வந்து, யாழ் பத்திரிகைகளின் விநியோகச் செயற்பாடுகளுக்கு உரிய பாதகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யாழ் அச்சுவேலியில் மகள்மார் மீது பலாத்காரம்: தந்தை கைது
» கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்
» கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்
» கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்
» இலங்கை வங்கியின் சென்னைக் கிளை மீது தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum