வரி அதிகரிப்பு: "சமரச ஒப்பந்தம் பிரதிநிதிகள் அவையிலும் நிறைவேற வேண்டும்"
Page 1 of 1

அமெரிக்காவில் வரி அதிகரிப்பு மற்றும் செலவுக் குறைப்பு சிக்கன நடவடிக்கை ஆகியவை தொடர்பில் நாட்டின் செனெட் மன்றத்தில் நிறைவேறியுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்ததின் கீழ் மில்லியனேர், பில்லியனேர் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் தாங்கள் நியாயமாக செலுத்த வேண்டிய வரியை இனிமேல் செலுத்த ஆரம்பிப்பார்கள் என ஒபாமா கூறியுள்ளார்.
தொடர்புடைய விடயங்கள்
ஒபாமா
அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் சரிவுப் பாதையில் தள்ளிவிடக்கூடியது என்று அஞ்சப்படும் மிகப் பெரிய வரி அதிகரிப்பும், பெருமளவான சிக்கன நடவடிக்கைகளும் நாட்டில் தானாக ஆரம்பமாவதை ஒத்திப்போடுகின்ற ஒரு சமரச ஒப்பந்தம் நாடாளுமன்ற செனெட் மன்றத்தில் நிறைவேறியுள்ளது.
இந்த சமரச ஒப்பந்தத்தில் அமெரிக்க செனெட் மன்ற உறுப்பினர்கள் வாக்களித்தபோது நள்ளிரவும் கடந்துபோய் அதிகாலை இரண்டு மணி ஆகிவிட்டது.
பல ஆயிரம் கோடி டாலர்கள் வரி அதிகரிப்பையும், பெருமளவான சிக்கன நடவடிக்கைகளும் வராமல் இருப்பதற்கான ஒப்பந்தம் பெருமளவு வாக்கு வித்தியாசத்துடன் எட்டப்பட்டது.
அமெரிக்காவில் தானாக வரவிருந்த செலவுக்குறைப்பு சிக்கன நடவடிக்கைகளை இப்போதைக்கு ஆரம்பிக்காமல் ஒத்திப்போடுவதாகவும், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் உள்ளவர்கள் வரி செலுத்துவதற்கு தற்காலிக விலக்கு அளிக்கும் புஷ் நிர்வாகத்து திட்டம் ஒன்றை நீட்டிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
அமெரிக்காவின் செல்வந்தர்கள் இதுவரை செலுத்திவந்த வரியை விட இனி கூடுதலான வரியைச் செலுத்த வேண்டும் என்ற திட்டத்துக்கு செனெட் அவையின் குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் விட்டுக்கொடுத்து ஒப்புக்கொண்டதே இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.
சிக்கன நடவடிக்கைகள் கொண்டுவரப்படுவதைப் பொறுத்தமட்டில் தானாக வரக்கூடிய இராணுவ செலவுக் குறைப்புகள் இரண்டு மாத காலத்துக்கு ஒத்திப்போடப்படும் என்பதாக இவ்வொப்பந்தம் அமைந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வேண்டுதல் உடனே நிறைவேற வேண்டுமா?
» வேண்டுதல் உடனே நிறைவேற வேண்டுமா?
» லட்சியங்கள் நிறைவேற லட்சுமி குபேர ஹோமம்
» பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆராய ஐ.நா.சிறப்பு பிரதிநிதிகள் இந்தியா பயணம்
» தம்பதிகளின் சண்டைக்கு சமரச தீர்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum