லட்சியங்கள் நிறைவேற லட்சுமி குபேர ஹோமம்
Page 1 of 1
லட்சியங்கள் நிறைவேற லட்சுமி குபேர ஹோமம்
யாருக்குதான் குபரனைப் போன்று இந்த பூமியில் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காது அதற்குரிய பூஜை முறைகள் என்னவெல்லாம் உள்ளதோ அதைச் செய்து வருகிறோம். அவற்றுள் தீபாவளித் திருநாள் அன்று செய்யப்படுகிற லட்சுமி குபேர ஹோம பூஜை மிகவும் சக்தி வாய்ந்தது.
இதை முறையோடு பிரம்சர்ய விரதமும் நியமமாகவும் இருந்து செய்தால் அடுத்து வரும் தீபாவளி வரை வளமான சூழ்நிலையை அனுபவிக்கலாம். இதில் அக்னி பூஜையுடன் செய்வது நல்லது.
ரிக்வேதத்தில் உள்ள ஸ்துதியின்படி குபேரனும் மகாலட்சுமியும் செல்வத்திற்கு அதி தேவதைகளாக நியமிக்கப்பட்டுள்ளதால் லட்சுமி தேவியின் அஷ்டமா சக்திகளில் இருவராகிய சங்கநிதி, பதும நிதி இருவரும் குபேரனுடைய அருட் செல்வங்களாக பக்கத்தில் நிற்கின்றனர்.
லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை: பூஜையைத் தொடங்குவதற்கு முன்பாக வழிபடும் பொருட்கள், ஹோம மண்டலம், தீபங்கள், கலசம் வைக்க அரிசி நுனி வாழை, நிவேதனப் பொருட்கள், மலர்கள் ஆகியவற்றை எடுத்து பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கிழக்கு முக கலசம் வைத்து வடக்கு முகமாக அமர்ந்து - நடுவில் அக்னி மேடையை 8 பொட்டு வைத்து தர்ப்பைகளை 4 திக்குகளிலும் போட்டு கையில் பவித்திரம் அணிந்து நெய் பாத்திரமும், ஓமக்கரண்டுகள் (ஸ்டுக் ஸ்ருவம்) 2 எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குபேர கலசம் அலங்கரித்தல்...! முப்புரி நூலை கலச சொம்பில் சுற்றி, வாசனை பொருள் அவதிப்பட்டு துளசியுடன் மஞ்சள் தூள் சிறிது போட்டு நீர் நிரப்புதல் வேண்டும். சிவப்பு நிற பட்டை அணிவித்து பூ, பொட்டிட்டு, 5 பில் கூர்ச்சம் வைத்து அதை இலை மேல் கிட்ட அரிசியில் வைத்து மாவிலை சொருகி தேங்காய் வைக்க வேண்டும்.
ஐந்து பொருட்களை கலசத்தில் பக்கவாட்டில் வைத்து நிவேதன பழம், தாம்பூலம், தேங்காய் இவற்றை வைத்து பூஜை தொடங்க வேண்டும். சுபம்-லாபம் கலசத்தின் 2 புறமும் வரைக.
விநாயகர் பூஜை முதலில் செய்க.
ஓம் சுக்லாம் பரதம் விஷ்ணும் சசிவர்ணம்
சதுர்புஜம் பிரசன்னை வதனம் த்யாயேத் ச
ர்வ விக்ன உபசாந்தயே, லட்சும் குபேர
ஆரம்ப காலே விக்னேச பூஜாம் கரிஷ்யே-
என்று அரிசியை அருகில் போடுக.
மஞ்சள் விநாயகருக்கு 12 நாமத்துடன் கூடிய விநாயகர் பூஜை (சுமுகர் முதல் ஸ்கந்த பூர்வஜாய நம வரை) செய்க. பிறகு தூப தீபம் நிவேதனம் ஆரத்தி காட்டியபின்.
தியானம்- விநாயகனே வேழ முகத்தவனே
துங்கக் அரிமுகத்தவா துணையிருப்பாய்
எங்கள் இல்ல லட்சுமி குபேர பூஜைக்கே! ஓம்கம்
கணேசாய நம் என்று 3 முறை கூறுக.
அடுத்ததாக, மகா சங்ஜல்பம் அன்றைய திதி. வாரம் நட்சத்திரத்தை பஞ்சாங்கம் பார்த்து மனதில் சொல்லிக் கொண்டு அதிசீக்ர தனதான்ய விருத்தி, குபேர யக்ஞ பூஜாம் கரிஷ்யே என்ற பின் கலச பூஜை செய்யவும்.
கலச பூஜை : கங்கே யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜவேஸ்மின் சன்னிதாம் குரு குபேரம் மனுஜா சீனம் ஸ்கர்வம் கர்வ விக்ரஹம் ஸ்வரிணச் சாயம் கதா அஸ்தம் உத்தராதிபதிம் ஸ்மரேத். என்ற பின் நவக்ரஹங்களை நினைத்து
``ஓம் ஆதித்யாசய சோமாய மங்களாய புதாயச குருசுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நம்
என்று கலசத்திலேயே மலர் இருக. தேங்காய் பழம் வைத்து தூப தீப நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி காட்டி அக்னி குண்டத்தில் போடுக.
ஹோமம் தொடங்கும் முறை : அக்னி குண்டத்தில் சுற்றிலும் 8 பொட்டுகள் வைத்து 4 திக்குகளில் தர்பைகள் 4 வீதம் வைத்து நெய்யை அருகில் வைத்துக் கொண்டு தயாராகவும். ஓம் ஜ்வால கேசாய வித்ஹே கட்க அஸ்தாய தீமகி
தந்நோ அக்னி தேவ : ப்ரசோதயாத். ஓம் அக்னி யேநம : என்று இந்த குண்டத்துள் எழுந்தருள்க ஸ்வாகதம என்று 3 முறை சொல்க. யாகக் குச்சியை நடுவில் செவ்வகமாக வைக்க. பிறகு, ஓமப்பொருள், நெய் இவற்றை தயாராக வைத்து, கற்பூரத்தை நடுவில் வைத்து அக்னியே லட்சுமி குபேராய நம என்ற பின் மூல மந்திரங்களைச் சொல்லி நெய் ஓமப்பொருள் போட வேண்டும். 108 தடவைகள் ஆகுதி எனப்படும் வார்த்தல் செய்க.
ஓம் க்லீம் யஹாய குபேராய வைஸ்ரவனாய தனதான்யாதிபதயே தன தான்யாதி பதயே தனதான்ய சம்ருத்திம்மே தேகி தாபய ஸ்வாஹா. ஓம் க்லீம் குபேராய ஐஸ்வர்யாய நிதிபதயே ஹீம்பட் ஸ்வாஹா.
ஓம் க்லீம் நவநிதிரூபாய லட்சுமி ஸகாய ஸ்வாஹா.
ஓம் நம : கமய வாசின்யை ஸ்வாஹா ஓம் உனபது மாம் தேவசக கீர்த்திஸ்ச மணினா ஸக ப்ராதுர் பூதோஸ்மி ராண்ட்ரேஸ்மின் கீர்த்திம் ஸ்ருத்தம் ததாதுமே ஸ்வாஹா என்ற முக்கிய சக்திவாய்ந்த மந்திரங்களைக் கூறவும், அடுத்ததாக சிவப்பு நிற பட்டினுள் கொப்பரை தேங்காய் தாம்பூலம் பழம் நெல் பொரி வைத்து அக்னியில் இட்டு பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே-
ஸ்ரீலட்சுமி குபேராய வவுஷட் சுவாசா : என்று கூறுக. அக்னி குண்டத்தைச் சுற்றி நீர் விட்டு, தர்பைகளை சேர்த்து அக்னியில் இட்டு கருக்கி ரட்சை-மையாக இட்டுக் கொள்க. வாழ்த்துரை - கலசம் + அக்னிக்கு தூபம் தீபம், நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி செய்து எல்லோரும் விபூதி, கலசநீர், பிரசாதம் எடுத்துக் கொண்டு ஆத்ம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.
மகா பாக்யங்களை அருளக் காத்திருக்கும் குபேரப் பெருமானே எங்களுக்கு மகதைச்வர்யம் தந்து லட்சியங்களை நிறைவேற்று வீரா! ஸ்ரீலட்சுமி குபேராய மங்களம். குபேர பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் செய்ய வேண்டும். தீபாவளி அன்று அமாவாசை, சுவாதி நட்சத்திரம் கூடிய சுபநாள் வருகிறது.
அன்றே கேதார, கௌரி நோன்பு செய்து கதை படிக்க வேண்டும். நம்வீட்டு குபேர வாசலைத் திறக்கச் செய்யும் பாடல்கள் மொத்தம் 41 இருக்கின்றன. அவற்றை பக்தியுடன் இல்லத்தில் அதிகாலை ஒதுவோர்க்கு பணக் கஷ்டம் தீர்ந்து நலமே சேரும். அதன் சில முத்துக்களை இங்கே படியுங்கள்.
பொன்மகள் கடைக்கண் பார்வை புன்னகை புலர்ந்து கண்டால்
நன்மைகள் யாவும் தேடி நயம்படக் கதவைத் தட்டும்
மண்பதைப் போற்றும் செல்வம் மழையென பொழியும் வாழ்த்தும் அன்னையே அவர் மேல் தேவி அடியேனைக் கண் பாரம்மா (பாடல்01) தூய்மையின் துளசிப்பூவே, தூது நீ சென்று வாராய்
ஆய்கையில் அருகில் வாழும் அழகான தோழி நீயே வாய்மணம் கமழப்பாடு வார்த்தைகள் எடுத்துச் செல்வாய் (பாடல்-37)
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» லட்சுமி குபேர விரதம்
» லட்சுமி குபேர பூஜை ரகசியங்கள்
» லட்சுமி குபேர விரதம் இருப்பது எப்படி?
» லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்
» லட்சுமி வழிபாடு: தீபாவளி குபேர பூஜை பலன்கள்
» லட்சுமி குபேர பூஜை ரகசியங்கள்
» லட்சுமி குபேர விரதம் இருப்பது எப்படி?
» லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்
» லட்சுமி வழிபாடு: தீபாவளி குபேர பூஜை பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum