மாலியில் பிரான்ஸின் குண்டு வீச்சு தொடர்கிறது
Page 1 of 1

மாலியில் மைய நகரான டியாப்லியை மாலி அரசாங்கப் படைகளிடம் இருந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் கைப்பற்றிவிட்டதாக பிரஞ்சு வெளியுறவு அமைச்சரான ழான் ஈவ் லெ திரியான் கூறியுள்ளார்.
ஆனால் நாட்டின் கிழக்குப் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தமது குண்டுத் தாக்குதல்கள் தோல்வியடையச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய விடயங்கள்
போர்
கிளர்ச்சிப் படையினர் மீது நடத்தப்பட்ட ஒரு விமானத் தாக்குதலை அடுத்த நிலைமைகளைக் காண்பிக்கும் முதலாவது படங்களை பிரஞ்சு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது.
வடக்கு நகரான கொன்னாவுக்கு அருகே ஒரு வீதியில், எரிந்துபோன பல டிரக்குகளும் ஆட்களின் சடலங்களும் காணப்பட்டன.
தமது இயக்கம் இனி பிரான்ஸில் இதயத்தின் மீது பதில் தாக்குதல் நடத்தும் என்று மாலியில் உள்ள இஸ்லாமிய குழு ஒன்றின் தலைவர் கூறியுள்ளார்.
பிரஞ்சு இராணுவ நடவடிக்கையின் வியூகம்
மாலியின் கிளர்ச்சிக்காரர்கள்
மாலியின் கிளர்ச்சிக்காரர்கள்
ஒபெராசியோன் செர்வால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இராணுவ நடவடிக்கை தனது ஆரம்ப இலக்கை எட்டிவிட்டதென்று சொல்லலாம்.
மாலியின் இஸ்லாமியவாதக் கிளர்ச்சிக்காரர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர விடாமல் தடுப்பதில் அவர்களுக்கு ஏற்கனவே வெற்றி கிடைத்துள்ளது.
தற்போது பிரஞ்சு விமானங்கள் மாலியின் வட பகுதியில் உள்ள கிளர்ச்சிக்காரர்களின் நிலைகள் மீது குண்டுவீசி வருகின்றன.
கிளர்ச்சிப் படைகளை கூடுமான அளவுக்கு அழித்துவிட வேண்டுமென்பது இத்தாக்குதலின் நோக்கம்.
கிளர்ச்சிப் படையினர் சண்டையிடும் விதம், அவர்கள் பயன்படுத்துகின்ற தளபாடங்கள் போன்றவை தம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்ளன என பிரஞ்சு இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தக் கிளர்ச்சிப் படைனுடைய போர்த்திறனில் பெரும்பங்கு லிபியாவில் கர்ணல் முஅம்மர் கடாஃபிக்கு ஆதரவளித்திருந்த சக்திகளிடம் இருந்து வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மாலியின் கிளர்ச்சிக்காரர்கள் தரப்பில் அதிக சேதங்களை உண்டு செய்யும் பிரான்ஸின் இந்த உத்தி இன்னும் சில காலத்துக்காவது நீடிக்கும் என்று சொல்லலாம்.
பிரான்ஸினுடைய திட்டத்தில் அடுத்த கட்டத்திலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால் கிளர்ச்சிக்காரர்கள் வலுவிழப்பதென்பது அவசியம்.
கூட்டுப் படை
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கூட்டுப் படை ஒன்று மாலிக்குள் வரவேண்டும் என்று பிரஞ்சு அரசாங்கம் விரும்புகிறது.
புர்கினோ ஃபாஸோ, நிஜெர், நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த படைகளாக இந்தக் கூட்டுப்படை அமையலாம்.
மாலியின் வடக்கில் கிளர்ச்சியை ஒடுக்கும் வல்லமை உள்ளூர்ப் படைகளுக்கே வர வேண்டும் என்ற நோக்கில் மாலியின் அரச படைகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் பிரான்ஸ் விரும்புகிறது.
மனிதாபிமான நெருக்கடி
இராணுவ வியூகங்கள் ஒரு புறமிருக்க இந்த தாக்குதலால் மனிதாபிமான நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளது.
பிரஞ்சுப் படைகள் குண்டிவீசிவரும் ஊர்களி இருந்து ஏராளமான மக்கள் வெளியேறிவருவதாக மெத்சென் சான்ஸ் ஃபிராந்தியே கூறுகிறது.
மாலியின் கொன்னா என்ற ஊரில் பிரஞ்சு விமானங்கள் நடத்திய தக்குதலில் நிறைய பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக தமக்கு தகவல் வந்துள்ளதென அவ்வமைப்பு கூறுகிறது.
மக்கள் வெளியேறிய நிலையில் பல ஊர்கள் வெறிச்சோடிக் கிடப்பதாகவும், அண்டை நாடுகளில் சென்று தஞ்சம் அடையும் மாலி மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் மெத்சென் சான் ஃபிராந்தியே கூறுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாலியில் கிடால் நகருக்குள் நுழைந்த பிரெஞ்சுப் படைகள்

» ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது
» துப்பாக்கி Vs கள்ளத்துப்பாக்கி… சோதனை தீரவில்லே… தடை தொடர்கிறது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum