தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எரிவாயு உற்பத்தி நிலைய உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்'

Go down

எரிவாயு உற்பத்தி நிலைய உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்' Empty எரிவாயு உற்பத்தி நிலைய உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்'

Post  meenu Fri Mar 01, 2013 4:52 pm

அல்ஜீரியாவின் சஹாரா பாலைவனப் பகுதியில் எரிவாயு உற்பத்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட பணயக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அல்ஜீரிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

குறைந்தபட்சம் 23 பணயக் கைதிகள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ஆனாலும் இறுதியான எண்ணிக்கை இன்னும் சில மணிநேரங்களில் வெளியிடப்படும் என்றும் அல்ஜீரிய தொடர்புத்துறை அமைச்சரான முஹமட் அல் சாயிட் கூறியுள்ளார்.

மேலும் சடலங்கள் மீட்கப்பட்டதாக அல்ஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அவை அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

அந்த எரிவாயு உற்பத்தி நிலையத்தில் இறந்தவர்கள் மற்றும் பொறிவெடிகள் ஆகியவற்றை படையினர் தேடிவருகிறார்கள்.

வெளிநாடுகளின் கருத்துக்கள்

அல்ஜீரியாவில் பயணக் கைதிகள் பிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பயங்கரவாதத்தை எதிர்த்து ஓய்வின்றி போராட வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது என பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் லொரொன் ஃபபியுஸ் தெரிவித்துள்ளார்.

அல்ஜீரிய அரசு இதனைக் கையாண்ட விதம் சரிதான் என்று வாதிட்ட பிரான்ஸ் அமைச்சர், தீவிரவாதிகளிடம் ஒருபோதும் இறங்கிவரவே கூடாது என்று தெரிவித்தார்.

வடக்கு ஆப்பிரிக்காவிலும் உலகின் வேறு பல இடங்களிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் நீடிக்கிறது என்பதை நினைவூட்டும் கசப்பான உண்மை அல்ஜீரியச் சம்பவம் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கூறினார்.

பத்து ஜப்பானியர்கள் உட்பட இந்த எரிவாயுத் தொழிற்சாலையில் பணியாற்றிய பல வெளிநாட்டினரின் கதி என்ன என்று இன்னும் தெரியவராமல் உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum