தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாரடைப்பு மரணங்களில் இருந்து மீட்க புதிய சென்டர்

Go down

மாரடைப்பு மரணங்களில் இருந்து மீட்க புதிய சென்டர் Empty மாரடைப்பு மரணங்களில் இருந்து மீட்க புதிய சென்டர்

Post  meenu Fri Mar 01, 2013 1:52 pm

டென்மார்க்கில் வருடந்தோறும் 3.500 பேர் வேலையிடங்களிலும், வீதிகளிலும், வாகனங்களிலும் மாரடைப்பால் சரிகிறார்கள்.

இவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றாலும் பத்துக்கு ஒருவர் அங்கு பரிதாப மரணமடைகிறார்.

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு விசேட சுவாசக் கருவி பூட்டி 30 நாட்கள் வரை உயிரை தக்கவைத்தாலும் அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் பலருக்கு பூட்டப்பட்ட கருவிகள் கழற்றப்பட்டு உயிர் காற்றில் கலக்க விடப்படுகிறது.

இந்த நிலையில் ஏதாவது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி மாரடைப்பு மரணங்களை தடுக்கும் பணிகளை முடுக்கிவிட ஊயசுண்ட் பகுதியில் புதியதோர் மாடைப்பு தடுப்பு சென்டர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பை சந்திக்க முன்னர் செய்யக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன.. அது ஏன் ஏற்படுகிறது, அதை வரமுன் தடுக்க என்ன செய்வது போன்ற கேள்விகளுக்கு உரிய பதில்தேட இந்த ஆய்வு நிலையம் பாடுபடும்.

இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 1.2 மில்லியன் யூரோ நிதி வழங்கப்பட்டுள்ளது, இதன் ஆய்வுகள் தலைநகரத்திற்கும் விஸ்தரிக்கப்படவுள்ளன.

வருடந்தோறும் வீதி விபத்துக்களால் மரணிப்போர் தொகையைக் குறைக்க பல்வேறு சட்டங்களையும் போட்டு போலீசார் பாடுபடுவதைப் போல மாரடைப்பு மரணங்களை தடுக்கவும் பாடுபட வேண்டிய நிலை உள்ளது.

வீதி விபத்து மரணங்களைவிட மாரடைப்பு விபத்து பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது.

மேலும் பலர் தனிமையிலேயே வாழ்வதால் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தால் அவர்களை வைத்தியசாலை எடுத்துப்போக ஆளில்லாத அவலம் பேரவலமாக இருக்கிறது.

வீதியில் மாரடைப்பால் ஒருவர் விழுந்தால் அம்புலன்ஸ் வண்டிக்கு போன் செய்து, சகல தகவல்களையும் கொடுத்து, அவர்கள் சரியான இடத்தைப் புரிந்து ஸ்தலத்திற்கு வந்து சேர்வதற்குள் பக்கத்தில் நிற்பவருக்கு மாரடைப்பு வந்துவிடும் என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

இதில் ஒரு விரைவு மாற்றம் ஏற்படுத்த ஏதாவது செய்ய வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கார்போஹைட் வகை உணவினை உட்கொள்ளும் பெண்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம் – புதிய மருத்துவ ஆராய்ச்சி
» புளியங்கொட்டையில் இருந்து புதிய மருந்து
» இந்தியாவில் டையோரியா வியாதியில் இருந்து 1.5 லட்சம் குழந்தைகளை காக்க யுனிசெப் புதிய திட்டம்
» டியூசன் சென்டர் நடத்துவது எப்படி?
» அதிகாலையில் மாரடைப்பு ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum