தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோர்வைத் தரும் உடல் பருமன்

Go down

சோர்வைத் தரும் உடல் பருமன் Empty சோர்வைத் தரும் உடல் பருமன்

Post  meenu Fri Mar 01, 2013 1:22 pm

அதிக உடல் பருமன் கேலிக்குரியது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். குறைந்தபட்சம் நமது இந்திய ஜனத்தொகையில் 5% மக்கள் மிக அதிக குண்டானவர்கள். அதிக பருமன் மன உடல் கோளாறு என்று இந்திய மருத்துவம் குறிப்பிடுகிறது.
அதிக பருமனைக் குறைக்க தற்போது பல முறைகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தெருவுக்கு தெரு உடல் எடையை குறைக்கும் நிலையங்கள் வந்து விட்டன. புதுப்புது ‘பத்திய’ உணவுமுறைகள், நூற்றுக்கணக்கான நூல்கள் உடல் பருமனைக் குறைக்கும் வழிகளைப் பற்றி, வெளிவந்திருக்கின்றன. இதனால் பயன் ஏற்பட்டுள்ளதா என்பது வேறு விஷயம்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) உடல் பருமனை (Obesity) அதிக அளவு – இயற்கைக்கு மாறாக – கொழுப்புச்சத்து உடலில் சேர்ந்து ஆரோக்கியத்திற்கு அபாயமான நிலை என விளக்குகின்றது. பழைய காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்காக சாப்பிட்டார்கள். இப்போது சாப்பிடுவதற்காக வாழ்கிறார்கள்.
உடல் பருமனால் அவதிப்படுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – உடல் பருமனை குறைக்கலாம். வாழ்நாள் முழுவதும் அவதிப்பட தேவையில்லை.
1. பண்டைக்கால இந்திய மருத்துவ நூல்கள் உடல் பருமன் ஏற்படுத்தும் பிரச்சனைகள் என கீழ்க்கண்ட ஏழு பிரச்சனைகளை குறிப்பிடுகின்றன. அவை
1. குறைந்த ஆயுள்
2. உடல் இயக்கம் மற்றும் உடலுறவு கொள்வது சிரமம்
3. களைப்பு
4. உடல் துர்நாற்றம்
5. அதிக வியர்வை
6. அதிக பசி
7. அடங்காத தாகம்
உடல் பருமனாக காரணங்கள்
1. ஸ்ட்ரெஸ் (Stress) – மன அழுத்தம் உங்களை அதிகம் சாப்பிட தூண்டும். கோபதாபங்கள், மனஅழுத்தம் போன்றவற்றால் உடலில் கோர்டி சால் (ஸ்டிராய்ட் ஹார்மோன்) இன்சுலின் ஹார்மோன்கள் சுரப்பது அதிகமாகும். இதனால் ‘உணவு வேட்கை’ அதுவும் இனிப்புகள், கொழுப்பு செறிந்த உணவுகளை உண்ணும் ‘ஆசை’ – ஏற்படுகிறது. அதிக கொழுப்பை உடல் சேமிக்கிறது. இதனால் கல்லீரல் வேலை அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடை செய்ய, உடனே கணையம் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக்கும்! எனவே உங்களின் பசி அடங்காமல் மறுபடியும் மறுபடியும் உணவு தேவைப்படும். மனச்சோர்வு (Depression) உடலை குண்டாக்கும்.
2. பாரம்பரியம்
3. உண்ணும் உணவிலுள்ள கலோரிகள், அதை ‘எரிப்பதை’ விட அதிகமாக இருத்தல்
4. கட்டுப்பாடின்றி உணவு உண்ணுதல் பசி இல்லாத போதும் சாப்பிடுவது
5. தைராயிடு கோளாறுகள், குஷிங்ஸின்ட்ரோம் (Cushing syndrome) போன்ற நோய்கள்
6. சில மருந்துகள்
காரணங்கள்
1. உடலுழைப்பு இன்மை
2. மதியம் தூங்குதல்
3. உணவு, தவறான வாழ்க்கை முறையால் ‘கப’ தோஷம் அதிகமாதல்
4. இனிப்பான உணவுகள்
உடல் பருமன் உண்டாக்கும் அபாயங்கள்
1. அதிக ரத்த அழுத்தம்
2. நீரிழிவு நோய்
3. இதயம் அதிக வேலை செய்ய நேர்வதால் இதய கோளாறுகள்
4. மூளைத்தாக்கு, பக்கவாதம்
5. ஆர்த்தரைடீஸ்
6. தூக்க நோய்கள்
7. மலட்டுத்தன்மை
8. மாதவிடாய் கோளாறுகள்
குண்டான பெண்கள், சாதாரண பெண்களை விட 4 மடங்கு அதிகமாக ஆர்த்தரைடீஸ் வியாதிக்கு ஆளாகின்றனர். மார்பு புற்றுநோய், இதய நோய்கள், பித்தப்பை வியாதிகள், மலட்டுத்தன்மை, சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் அதிகம் போதல் போன்ற பல கோளாறுகள் குண்டான பெண்மணிகளை தாக்கும். குண்டான பெண்கள், பருமனான ஆண்களை விட அதிகம் கேலி செய்யப்படுகின்றனர்- இதனால் குண்டான பெண்மணிகளின் மனநிலை பாதிக்கப்படும்.
உடல் இளைக்க உணவு முறை சிகிச்சை
உடல் இளைக்க பட்டினியிருக்கக் கூடாது. உண்ணும் உணவின் அளவு குறையாமல், எரிசக்தியை குறைக்க வேண்டும்! தீவிர உடற்பயிற்சிகள் தவிர, சிறிய அசைவுகள், குனிந்து நிமிர்ந்து வேலை செய்தல் போன்றவைகளும் உண்ட கலோரிகளை செலவழிக்க (எரிக்க) உதவும். உதாரணமாக 300 கலோரிகளை குறைத்து, இன்னொரு 200 கலோரிகளை ‘எரித்தால்’ ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 1/2 கிலோ எடை குறையும்.
நார்சத்து நிறைந்த உணவுகள் உண்ட நிறைவையும், குறைந்த கலோரியையும் தரும்.
ஒரு சாதாரண மனிதனுக்கு, தினம் அவருடைய ஒரு கிலோ உடல் எடைக்கு 33 கலோரிகள் தேவை. இந்த கணக்கில் நீங்கள் சாப்பிட வேண்டிய கலோரிகளை தெரிந்து கொள்ளலாம்.
காலை உணவு அவசியம்.
ஒரே தடவை அதிக உணவை உண்பதை விட, சிறு உணவாக (2 மணி நேரத்திற்கு ஒரு முறை) உண்ணவும்.
எடை இழப்பு நிதானமாக இருக்க வேண்டும். ஒரு வாரத்தில் 1/2 (அ) 3/4 கிலோ இளைத்தால் போதுமானது.
முழுதானியங்கள் நிறைந்த உணவு நல்லது. காலை உணவில் தானியங்களுடன், புரதம் நிறைந்த முட்டை அல்லது ஆடையில்லாத பாலில் செய்த ‘சீஸை’ சேர்த்துக் கொள்ளலாம்.
பாலை உபயோகிக்கையில் ஆடை அகற்றிய கொழுப்பு குறைவான பாலையே பயன்படுத்தவும்.
இனிப்புகள், வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வீட்டில், அலுவலகத்தில் சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். சுறுசுறுப்பாக நடக்கவும். லிப்டை பயன்படுத்தாமல், மாடிப்படிகளில் ஏறி இறங்கவும். உட்கார்ந்த நிலையில், நிற்கும் நிலையில் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
மென்பானங்களை (Soft drinks) குடிக்க வேண்டாம். அதற்கு பதில் வெறும் தண்ணீர் குடிப்பது நல்லது.
பசித்தால் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. எடை குறைய உதவும். ‘சூப்’ சாப்பிடுவதும் நல்லது. காய்கறி ஜுஸ், பழங்கள் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். பச்சைகாய்கறிகள், பாதாம் போன்ற கொட்டைகளை உண்ணலாம்.
அடிக்கடி உடலுறவு கொள்ளுதலும் உடற்பயிற்சி தான்.
ஸ்ட்ரெஸை (Stress) தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். யோகா, தியானம் தவிர சில உணவுகள் மனச்சோர்வை குறைக்க உதவும். ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ராலை குறைத்து மூளையை ஊக்குவிக்கும். மீன், பாதாம், வாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகளில் ஒமேகா – 3 அதிகம் உள்ளது. க்ரீன் – டீ தினம் 3 வேளை குடித்தால் 3 மாதங்களில் 5% எடை குறையும். உணவு வேட்கை ஏற்படும் காரணம் மூளை தான்! வயிறோ, ருசி அறியும் நாக்கோ அல்ல! எனவே மன அழுத்தத்தை குறைத்து மூளை அமைதியானால் உணவு ஆசையை கட்டுப்படுத்தலாம்.
நீங்கள் சரியாக தூங்குவது அவசியம். 7 லிருந்து 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூங்காவிட்டால் சந்தோஷத்தைத் தரும் செரோடோனின், டோபாமைன் ஆகியவை சுரக்காது. பின் மூளை என்ன செய்யும்? இவற்றுக்கு பதில் இனிப்பு உணவுகளை நாடும். இந்த பிரச்சனை வயதாக வயதாக அதிகரிக்கும். முதியோர்களின் பீனியல் சுரப்பி (Pineal gland), தூக்க ஹார்மோன் மெலாடோனினை குறைவாக சுரக்கும். இதனால் அதிக கார்போ-ஹைடிரேட் உண்ணும்’வெறி’ ஏற்படும். தூக்கமில்லாதவர்கள் இரவில் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று அலைவதற்கு இது தான் காரணம். எனவே தூக்கமின்மையை குணப்படுத்திக் கொள்ளுங்கள். இரவுத் தூக்கம் உடல் எடையை சரிவர வைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum