சுவாசத்தின் தேவை
Page 1 of 1
சுவாசத்தின் தேவை
சுவாசம் பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவிய ஒரு சக்தி. உலகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே தோன்றிய சுவாசம் எனும் மூச்சுக்காற்று, இன்று வரை மாறாதது. அழியாதது. பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று சீராக இயங்கும் போது இதர சக்திகளான நீரும், நெருப்பும் சரிவர இயங்கும். காற்றை வாதம் என்றால் நீரும் நெருப்பும் முறையே கபமும், பித்தமுமாகும். காற்று சீரற்று போனால் மற்ற இரண்டும் பாதிக்கப்படும்.
உலகின் உயிர்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை மூச்சு (சுவாசம்) விட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்பது கட்டாயம். சுவாசம் நின்றால் உயிர் பிரியும். மூச்சுக்காற்றை சீர் செய்து கட்டுப்படுத்த அற்புதமான ‘பிராணாயாமம்’ என்ற யோகக்கலையை உலகுக்கு அளித்தது நம் நாடு என்று நாம் பெருமைப்படலாம்.
சுவாசத்திற்கு பல பெயர்கள் உண்டு. அவை பிராணன், பிராண வாயு, ஜீவன், மூச்சு, வாசி, சரம், உயிர், உயிர் சக்தி, ஆவி முதலியனவாகும்.
உயிர் வாழ உடல் சக்தியை உண்டாக்க வேண்டும். சக்தியை உடல் உணவிலிருந்து பெறுகிறது. உணவின் அணுக்கூறுகளை “எரித்து” உடல் சக்தியை தயாரிக்கிறது. ‘எரிப்பதற்கு’ ஆக்சிஜன் (பிராண வாயு) தேவை. ஆக்சிஜன் ‘ஆக்ஸிகரணம்’ (Oxidation) முறையில் உணவை எரித்து அதனை கார்பன், ஹைட்ரஜனுடன் இணைந்து கரிய மில வாயுவையும் (Carbon – di – oxide) நீரையும் உண்டாக்குகிறது. ரத்தத்தின் வழியே பிராண வாயு (Oxygen) வை உட்கொள்வதும், கரியமில வாயுவை வெளியேற்றுவதையும் ஒரு தொடர்ச்சியான இன்றியமையாத பணியாக உடல் செய்து வர வேண்டும். சுவாச மண்டலத்தின் பணி இது தான்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுவாசத்தின் வாசம்! சுவாசத்தின் வாசம்!
» சுவாசத்தின் வாசம்! சுவாசத்தின் வாசம்!
» நகங்கள் மீது தேவை கவனம்
» மனிதனுக்கு இது தேவை!
» மனிதனுக்கு இது தேவை
» சுவாசத்தின் வாசம்! சுவாசத்தின் வாசம்!
» நகங்கள் மீது தேவை கவனம்
» மனிதனுக்கு இது தேவை!
» மனிதனுக்கு இது தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum