அலர்ஜி அலர்ஜி அலர்ஜி
Page 1 of 1
அலர்ஜி அலர்ஜி அலர்ஜி
உடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்களை உடல் எதிர்ப்பதின் வெளிப்பாடே ஒவ்வாமை எனப்படுகிறது.
மனித உடல் ஒரு திறமை மிக்க இயந்திரம். இந்த இயந்திரம் எதிர்ப்பாற்றல் என்னும் தற்காப்பை தன்னுள்ளே வைத்துள்ளது. ஒருவருக்கு ஒரு தடவை அம்மை போட்டினால், மறுமுறை வருவதில்லை. இது எவ்வாறு நடக்கிறது அம்மையை எதிர்க்கும் திறன் எனும் எதிர்ப்பாற்றலை உடல் பெற்று விடுவது தான் காரணம்.
ஒவ்வாமைக்கு காரணங்கள்
வீட்டுத் தூசி, ஓட்டை, மகரந்தப்பொடி, சிகைக்காய், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், முயல் போன்றவற்றின் முடிகள், பறவை இறகுகள், முதலியன
சில மருந்துகள் பெனிசிலின் போன்றவை குறிப்பாக ஸ்டிராய்டுகள், ஆன்டிபையாடிக் மருந்துகள்.
சருமத்தில் தடவப்படும் சில களிம்புகள், சாயப்பொடி, மருதாணி, சென்ட், நைலான் உடைகள், காலணிகள்.ஒவ்வாமையினால் முதலில் பாதிக்கப்படுவதும், அறிகுறிகளை
முதலில் வெளிப்படுத்துவதும் சருமம் தான்.
செம்மை படர்தல்
டெர்மடைடிஸ்
அரிப்பு தடிப்பு
கரைப்பான்
ஆயுர்வேதம் ஒவ்வொரு பருவ காலத்தின் முடிவில் உடலில் சேர்ந்த
நச்சுப்பொருட்களை நீக்க வேண்டும் என்கிறது. கப – பித்தங்களை சமனாக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலின் நாளங்கள் சுத்திகரிக்கப் பட்டுவிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தவிர பருவ கால மாற்றங்களால் ஏற்படும் ஒவ்வாமை வராமல் தடுக்கலாம்.
காய்கறி சாறுகள், வாழைப்பழம் இவற்றை உட்கொள்ளலாம். ஆனால் வாழைப்பழம் சிலருக்கு ஆகாது! அந்தந்த சீசனுக்கு ஏற்ப உணவு உட்கொள்வது நல்லது என்கிறது ஆயுர்வேதம். அலர்ஜிக்கு ஆயுர்வேதம், உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிப்பது சிறந்த சிகிச்சை என்று கருதுகிறது.
அலர்ஜி குழந்தைகளுக்கு பல சர்ம உபாதைகளை உண்டாக்கும்.
வேப்பிலை சிறந்த ரத்த சுத்தி மற்றும் உடலின் நச்சுப்பொருட்களை நீக்கும் மூலிகை. பழங்காலத்திலிருந்தே வேப்பிலையின் விஷமுறிக்கும் சக்தி தெரிந்திருந்தது. எக்ஸிமா, முகப்பரு, உணவு ஒவ்வாமை இவற்றுக்கெல்லாம் வேப்பிலை நல்ல மருந்து.
கற்றாழை உடலின் எதிர்ப்புச்சக்தியில் ஒரு அங்கமான ரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதர வெள்ளை அணுவான மானோசைட் டி – செல்கள், பாக்டீரியாவை ஒழிக்கும் மாக்ரேபேஜஸ் இவற்றையும் கற்றாழை ஊக்குவிக்கும்.
தோலில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும் அரிப்பு, தடிப்புகளுக்கு மணத்தக்காளி இலைகளின் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.
எல்லாவித அலர்ஜிகளுக்கு மஞ்சள் சேர்ந்த பல ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கின்றன. இவற்றால் அலர்ஜிகளை தவிர்க்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum