தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயுர்வேத மூலிகைகள்

Go down

ஆயுர்வேத மூலிகைகள் Empty ஆயுர்வேத மூலிகைகள்

Post  meenu Fri Mar 01, 2013 12:34 pm

சர்ம பாதிப்புகளான முகப்பரு, மற்றும் கருமை நிற திட்டுக்களுக்கு மருந்தாகும் மூலிகைகள் ஏற்கனவே “மாசு மருவில்லாத வதனத்திற்கு” மற்றும் “கருப்பும் சிவப்பும்” என்ற அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தவிர, சர்மத்திற்கு பயன் அளிக்கும், கார்போக அரிசி, வேம்பு, முல்தானி மட்டி இவைகளும் தனியே விவரிக்கப்பட்டிருக்கின்றன.
இப்போது மேலும் சில மூலிகைகளையும், முன்பே கொடுத்துள்ள சில மூலிகைகளின் தொகுப்பையும், சர்மத்திற்கு உகந்த சில பொருட்களை பார்ப்போம்.
மூலிகை
கற்றாழை – காயங்களை ஆற்றும். சர்ம சுருக்கங்களை போக்கும். ஈரப்பதத்தை காக்கும். கருவளையங்கள், களங்கங்களை போக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
சந்தனம்- குளிர்ச்சியூட்டும், முகப்பொலிவை கூட்டும். பருக்களை அகற்றும். ரத்தத்தை சுத்தம் செய்யும்.
செஞ் சந்தனம்- சர்ம நோய்களுக்கு நல்லது பருக்களை போக்கும், சர்மத்திற்கு குளிர்ச்சியூட்டும்.
மஞ்ஜிட்டி- சர்மம் பொலிவடைய, பருக்களை போக்க, முகச் சுருக்கங்களைப் போக்க.
வசம்பு- பருக்களை தடுக்க, வந்தால் போக்க.
தாருஹரித்ரா-மேனிக்கு பொலிவூட்டும்.
மஞ்சள்-கிருமிநாசினி. தினசரி உபயோகித்தால் முகம், மேனி, மாசு, மருக்கள், பருக்கள் தோன்றாது. முகம்பொலிவடையும்.
ஜாதிக்காய்-மேனி பொலிவடையும்.
சதகுப்பி- சர்மத்தை சுத்திகரிக்கும், பருக்களை தடுக்கும்.
இஞ்சி- ரத்தசுழற்சியை சீர் செய்யும்.
பூண்டு- உலர்ந்த சர்மத்திற்க்கு உகந்தது.
வேம்பு-பல சர்மநோய்களுக்கு மருந்து. கிருமிநாசினி. எக்ஸிமாக்கு மருந்து. தொடர்ந்து உபயோகித்தால் சர்மத்தை பாதுகாக்கும்.
லோத்ரா-குளுமையூட்டும். பருக்களை போக்கும்.
கோஷ்டம்- சர்மத்தை சுத்தப்படுத்தும். வலி நிவாரணி
மருதோன்றி- சர்ம நோய்களுக்கு மருந்து, எரிச்சலை தணிக்கும். பூஞ்சன தொற்றுகளை தடுக்கும்.
பிருங்கராஜ்- ஆன்டிசெப்டிக், வெண்குஷ்டத்திற்கு மருந்து.
நிலவேம்பு- சர்ம பாதிப்புகளுக்கும் மருந்து.
மருது- முகத்தை பருக்களிலிருந்து காக்கும்.
பன்னீர்- பருக்களால் வரும் எரிச்சலை குறைக்கும்.
கருவேலம்- இதன்பட்டை எக்சிமாவின் அரிப்பை குறைக்கும்
கொன்னை-தோலின் எரிச்சலை போக்க இதன் இலை சாறு பயன்படுகிறது. படர்தாமரை நோயின் அரிப்பை போக்கும்.
துளசி- படர்தாமரை அரிப்பை போக்கும். பொதுவாகவே சர்ம நோய்களுக்கு மருந்து.
காட்டு இலுப்பை- இதன் மரப்பட்டையை களிம்பாக்கி அரிப்பு இருக்கும் இடங்களில் தடவ நிவாரணம் கிடைக்கும். இலைகளில் மேல் நல்லெண்ணை தடவி பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்து கட்டலாம். 2 மணிக்கு ஒரு தடவை கட்டை மாற்றவும்.
பரசமரம்- இதன் விதைகளை அரைத்து எலுமிச்சை சாறுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ எரிச்சல் தரும் பருக்கள், கட்டிகள் குணமாகும். படர்தாமரை சொறி, சிரங்கு, எக்சிமா இவற்றின் அரிப்புகளும், நமைச்சலும் நீங்கும்.
அதிமதுரம்- இதை வெந்நீரிலிட்டு அரைத்து பாலுடன் சேர்த்தும் சேர்க்காமலும் முகத்தில் பூசவும். முகம் பிரகாசமாகும்.
நாவல்- இதன் விதைகளை தண்ணீரில் அரைத்து தடவலாம். இதில் உள்ள அமிலம் பருவிலுள்ள சீழை சமனப்படுத்தும்
பாதாம்- பாதாம் எண்ணை சர்மத்துக்கு போஷாக்கு அளிக்கும்
கற்பூரம்-குளிர்ச்சியூட்டும். பருக்களின் வலியை குறைக்கும்
பப்பாளி- ரத்தத்தை அதிகரிக்கும். ஜீரணத்தை ஊக்குவிக்கும். பருக்கள் மேல் தடவ, அவை குறையும்.
கடுகு- மிதமான மலமிளக்கி. ஜீரணத்திற்கு உதவுதால் மலச்சிக்கலால் பருக்கள் வருவதை தடுக்கும்
ஆரஞ்சு- ஆரஞ்சு தோலில் உள்ள எண்ணை, சீழ் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். அழற்சியை குறைக்கும். ஆரஞ்சு தோல்களை சேகரித்து உலர்த்தி பொடித்துக் கொள்ளவும். அரைத்து மாஸ்க்காகவும், டோனராகவும் உபயோகிக்கலாம். வெந்நீரில் தோல்களை இரவில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை முகம் கழுவ பயன்படுத்தலாம்
புதினா-குளிர்ச்சியை உண்டாக்கும். சர்ம அழற்சியை குறைக்கும்.
ஆயுர்வேத மருந்துகள்
கதிராரிஷ்டம்
ஸாரிபாத்யாஸவம்
மதுஸ்னுஹீ சூரணம்
மஞ்சிஷ்டாதிக்வாத சூரணம்
நிம்பாதி க்வாத சூரணம்
அமிர்தபல்லாதகம்
மஹாதிக்த க்ருதம்
ஹரித்ரா கண்டம் (ப்ருஹத்)
கந்தக ரசாயனம்
பல்லாத கவடீ
தேகுஸீம் ரசாயனம்
ஆரோக்கிய வர்த்தினி வடீ
சைகோர் குக்குல்
ப்ராவல் பிஸ்தி
வெளிப்பூச்சுக்கு மட்டும்
தினேசவல்யாதி தைலம்
தூர்வாதி தைலம்
கந்தக தைலம்
நால் பரமராதி தைலம்
ஜபாபத்தியாதி தைலம் (செம்பருத்தி)
அவல் குஜாதி லேபம்
குங்குமாதி லேபம்
ரஸோத்தமாதி லேபம்
ரஸ கற்பூரா தைலம்
சிந்தூராதி தைலம்
ஸீர தாரு லேபம்
துவரக லேபம்
குறிப்பு
மேற்கண்ட மருந்துகள் ஆயுர்வேத மருந்துகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேத வைத்தியரின் அனுமதி இன்றி நீங்களாகவே வாங்கி பயன்படுத்த வேண்டாம். காரணம் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன், குக்குலு, தேன் அல்லது பால் சேர்த்து உட்கொள்ள வேண்டும். வெளிப்பூச்சு மருந்துகளுக்கும், உள்ளுக்கு உட்கொள்ளும் மருந்துகளுக்கும் பத்தியமாக உண்பது அவசியமாகும். எனவே ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum