மூட்டு வலி ஆயுர்வேத மூலிகைகள்
Page 1 of 1
மூட்டு வலி ஆயுர்வேத மூலிகைகள்
ஆயுர்வேதமும் வாத நோய்களும்
ஆயுர்வேதத்தின் அடிப்படை மூன்று தோஷ தத்துவம். இந்த மூன்று தோஷங்கள் ஏறுமாறானால் நோய்கள் உண்டாகுகின்றன. ஆர்த்தரைடீஸ் ஆயுர்வேதத்தில் வாய்வு (வாத தோஷம்) அதிகமானால் ஏற்படும் கோளாறாக கருதப்படுகிறது. மேலும் சில காரணங்களாக ஆயுர்வேதம் சொல்வது – அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்வது, இரத்தப் போக்கு, அதிக பாலியல் உறவினால் ஏற்படும் இழப்பு, இரவு அதிக நேரம் கண் விழித்தல், இயற்கை வேகங்களை தடை செய்தல், கவலை, எலும்பு முறிவு, மழைக்கால குளிர்காற்று முதலியன. இந்த காரணங்களால் வாயு அதிகமாகி ஏற்படும் பிரச்சனைகளை ஆர்த்தரைடீஸ் என்று கூறலாம். இந்த காரணங்களுடன் அஜீர்ணமும் மலச்சிக்கலும் சேர்ந்து ‘ஆமா’ எனும் கழிவுப்பொருள் உடலை விட்டு நீக்க முடியாமல் போனால், அதன் விளைவுகளால் உண்டாகும் மூட்டு வலியை ஆயுர்வேதம் ‘ஆமவாதம்’ என்கிறது. ஆமவாதம் என்பது ருமாடிஸத்தை குறிக்கும்.
ஆயுர்வேதம் உடலின் மூட்டுக்கள் ‘கப’த்தின் இருப்பிடம் என்கிறது. இங்கு வாதத்தின் தன்மை அதிகரித்தால் கபத்தின் வழவழப்பு உண்டாக்கும் எண்ணை பசை குறைந்து தேய்மானம் ஏற்படும். கூடவே வலி ஏற்படும். சில சமயங்களில் “பித்தம்” அதிகமானால் ‘வாத ரக்தா’ ஏற்படும்.
ஆயுர்வேத சிகிச்சை முறை விரிவாக பல விதமாக செயல்படுகிறது. வெளிப்பூச்சு மருந்துகள், மசாஜ் இவற்றால் வலியை குறைத்து, மூட்டுக்கள் மீண்டும் இயங்குமாறு செய்யப்படும். பிறகு மலச்சிக்கலை போக்க தேவையான முறைகள் கையாளப்படும். உணவு முறைகள், உடல் பயிற்சிகள் (யோகா) மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களும் பரிந்துரைக்கப்படும். உள்ளுக்கு கொடுக்க, மகாராஜ குக்குலு போன்ற பல மருந்துகளும், மஹா நாராயண தைலம் போன்ற பல வெளிப்பூச்சு தைலங்களும் ஆயுர்வேதத்தில் இருக்கின்றன. அந்தந்த பிரக்ருதி, மூட்டு வியாதிகளுக்கு ஏற்றவாறு முழுமையான சிகிச்சையை ஆயுர்வேதம் தரும்.
சில ஆயுர்வேத மூலிகைகள்
1. சல்லாக்கி – நிரூபிக்கப்பட்ட, சகல மூட்டு வியாதிகளையும் கட்டுப்படுத்தும் மூலிகை மூட்டு வியாதிகளுக்கு தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வரும் மரப்பிசின் சல்லாக்கி. இந்த மரம் இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் தவிர எல்லா இடங்களிலும் பயிராகிறது. 15 மீட்டர் உயரம் வளரும். பல கிளைகள் உடையது. இதன் மரப்பட்டை பச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும். மெல்லியதாக இருக்கும். மரத்தின் எல்லா பாகங்களிலும் சிறிது நறுமணம் வீசும்.
இந்த மரத்தின் அடி மரப்பட்டையில் தான் மருத்துவ பிசின் கிடைக்கும். மரப்பட்டைகள் கீறி விடப்பட்டு 3 மாதம் வரை, பிசின் வடிய விடப்படும். பிறகு சேகரித்த பிசின் சுத்தகரிக்கப்படும். இந்த பிசினில் சில எண்ணைகள், டெரிபினாய்டு மற்றும் போஸ் வெல்லியா அமிலங்கள் உள்ளன. இந்த போஸ் வெல்லியா அமிலங்கள் மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகும்.
சல்லாக்கி மூட்டுவலிக்கு மாமருந்தாக உலகெங்கும் பிரசித்தமாகி விட்டது. இந்த பிசின், மருந்துகளை போல சிறப்பாக பணி ஆற்றுகிறது. மூட்டுக்களின் வீக்கம் அழற்ச்சியை உண்டாக்கும் என்சைமான 5 ஐ, சல்லாக்கி பிசின் கண்டிக்கிறது. ஜெர்மனியில் நடந்த ஆராய்ச்சிகளின் மூலம், ருமாடிஸ – ஆர்த்தரைட்டீஸ§க்கு சிறந்த மருந்தாகும் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சல்லாக்கி பிசின், அலோபதியில் மூட்டு வலிக்கு கொடுக்கும் என்ற மருந்தை விட சிறந்தது என்று தெரிவிக்கின்றன. இந்த மருந்தை விட செல்லாக்கி பிசின் வீரியமுள்ளது. ஆனால் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. மூட்டுகளுக்கு அதிக ரத்தம் பாயவும் உதவுகிறது. செல்லாக்கி, மஞ்சள், ஜிங் இவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் மேலும் நல்ல பலன் கிடைக்கும். முதுகு வலிக்கும் சல்லாக்கி நல்ல மருந்து. மஞ்சள், துத்தநாகம் இவற்றுடன் சேர்ந்து கொடுத்தால் இதன் சக்தி அதிகமாகிறது.
சல்லாக்கி உள்ளுக்கும் கொடுக்கலாம், வெளிப் பூச்சாகவும் தடவலாம். நரம்புத் தளர்ச்சிக்கும் நல்லது.
இதன் மரப்பிசின் தினமும் மூன்று முறை 150 மி.கி. அளவில் 2 – 3 மாதங்களுக்கு எடுத்துக் கொண்டால் பலன் தெரியும்.
2. நிர்க்குண்டி, வெண்நொச்சி – இந்த தாவரம் தென்னிந்தியாவில் அதிகம் காணப்படும். ருமாடிக் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ், சியாடிகா, முதுகு வலி, கழுத்து வலி, ஆடுகால் சதை வலி முதலியவற்றுக்கு மருந்தாகும். மூட்டுக்களில் ஏற்படும் அழற்சி, வீக்கங்களுக்கு, இதன் இலைகளின் சாறு பயனளிக்கிறது. இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால், வீக்கம், கீல் வாயு முதலியன தீரும்.
எலிகளை வைத்து செய்த ஆராய்ச்சிகளின் படி, வெண்நொச்சி, 4-6
நாட்களில் அழற்ச்சியை குறைக்கிறது. மூட்டு வீக்கங்களை, நாட்பட்டதாக இருந்தாலும் குறைக்க வல்லது. வாசனையுள்ள ‘டானிக்’. வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும்.
இதன் இலைகளுடன், புங்க இலைகளையும் எடுத்து ஒரு துணியில் பந்து போல் சுருட்டி, தண்ணீரில் இந்த துணிப்பந்தை போட்டு வேக வைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, இதமான சூட்டில் வலியிருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம்.
வெளிப்பூச்சாக இலைகளிலிருந்து செய்யப்பட்ட களிம்பு அல்லது தைலம் உபயோகப்படுத்தப்படுகிறது. உள்ளுக்கு இலையின் சாறு 15 – லிருந்து 20 மி.லி. வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை கொடுக்கலாம். வேர், விதை மற்றும் பட்டை பொடி செய்து பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பொடிகள் ஒரு தேக்கரண்டி அளவில் வெறும் வயிற்றில் தினமும் இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. கஷாய ரூபத்தில் இந்த மூலிகை 6 தேக்கரண்டி அளவில் தினமும் இரு வேளை கொடுக்கப்படுகிறது.
3. குக்குலு – முட்கள் உள்ள இளம் சிவப்பு நிறம் உள்ள பூக்களுடன் கூடிய செடி. அதர்வண வேதத்திலேயே புகழப்பட்ட மூலிகை. ஆயுர்வேதத்தில் தொன்று தொட்டு வாதநோய்களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. குக்குலு ஒரு மரப்பிசின் ஆகும். ஆமவாதம் மற்றும் கீழ்வாதம் இவற்றுக்கு ஸ்டீராய்டு போல செயல்படுகிறது. பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் இந்த மூலிகையுடன் பொடி செய்யப்பட்ட இஞ்சி, ஆமணக்கெண்ணெய் கலந்து உபயோகித்தால் மேலும் சிறந்த பலனளிக்கும். குக்குலுவை கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் – யோக ராஜ் குக்குலு, கைசோர் குக்குலு, சந்திர பிரபாவடீ, ஆரோக்கிய வர்த்தினி வடி,
குக்குலு மாத்திரை ரூபத்தில் தான், சாதாரணமாக கொடுக்கப்படுகிறது. அளவு ஒரு நாளைக்கு இரு மாத்திரைகள் வீதம் சூடான பாலுடன் கொடுக்கப்பட வேண்டும்.
4. அஸ்வகந்தா – அமுக்கிராக்கிழங்கு – ஆயுர்வேத மருத்துவர்களாலும் சித்த மருத்துவர்களாலும் (அமுக்கிரா) பெரிதும் பயன்படுத்தப்படும் மூலிகை என்றால் அது அஸ்வகந்தா எனும் அமுக்கிரா தான். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்ல அஸ்வகந்தா இந்தியாவெங்கும் பெரிதும் விளைவிக்கப்படுகின்றது. பல மருத்துவர்களால் பலவிதமான உபாதைகளுக்கும் உபயோகிக்கப்படுவதால் அதிசய மூலிகையாகவே விளங்குகின்றது. அஸ்வகந்தா பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மருத்துவத்திலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. அஸ்வகந்தா மூட்டுக்களின் வீக்கத்தை குறைக்கும். உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் செயல்பாடுகள் அலோபதி மருந்துகளான ஆஸ்பிரின் மற்றும் ஹைட்ரோகோர்டிசோன் ஸ்டீராய்டு போல் இருக்கும்.
அஸ்வகந்தா பொடியாகவோ அல்லது கஷாயமாகவோ
கொடுக்கப்படுகிறது. பொடி 5 கிராம் அளவில் தினம் இரு வேளை கொடுக்கப்படுகிறது. கஷாயம் 30 மி.லி. அளவில் தினமும் இரு வேளை கொடுக்கப்படுகிறது. அஸ்வகந்தாவை கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் – அஸ்வகந்தாரிஷ்டம், அஸ்வகந்தா சூரணம்
5. குஸ்தா – கோஷ்டம் – நாட்பட்ட மூட்டுவலிகளுக்கு ஏற்றது. டானிக். பசியை தூண்டும்.
6. எராண்டா – ஆமணக்கு – அனைவருக்கும் தெரிந்த மலமிளக்கி, பேதி மருந்து ஆமணக்கு எண்ணை. இது விளக்கெண்ணை என்றே கூறப்படுகிறது. ஆமணக்கெண்ணெய்யை சித்த வைத்தியத்தில் “வாத நாச தைலம்” வாத நோய்களுக்கு, அதுவும் மூட்டுவலிகளுக்கு ஆமணக்கெண்ணெய் வெளியே பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும், உள்ளுக்கு கொடுக்கவும் பயன்படுகிறது. ஆமணக்கு இலைகளை சிறிதாக நறுக்கி, ஆமணக்கு எண்ணையில் வதக்கி, சூட்டுடன் வலியுடன் கூடிய கீல் வாதங்களுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தடம் கொடுக்கலாம். தீராத மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு, மூட்டுவாதம், எலும்புத்தேய்வு, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு 2 லிருந்து 3 மி.லி. எண்ணையை தினசரி உள்ளுக்கு கொடுக்கலாம். மூட்டுவலிக்கான ஆயுர்வேத மருந்துகளில் – ‘எராண்டா பாக்’ மற்றும் லகு விஸ்கர்வ தைலம் போன்றவற்றில் ஆமணக்கு சேகரிக்கப்படுகிறது.
7. லசூனா – பூண்டு – இரண்டு அடி உயரம் வளரும் செடியிலிருந்து கிடைக்கும் பூண்டு, தொன்று தொற்று உணவிலும், மருத்துவத்திலும் பயன்படும் சிறந்த பொருள். ஆர்த்தரைடீஸ் வியாதிகளுக்கு, பரவலாக உபயோகப்படுகிறது பூண்டு. பாலுடன் சேர்த்து செய்யப்பட்ட பூண்டு கஷாயம் “ஸியாடிகா” வுக்கு நல்ல மருந்து. பூண்டின் சாறு முதுகு வலி, ஆஸ்டியோ – ஆர்த்தரைடீஸ் வியாதிகளுக்கு சிறந்த மருந்து. பூண்டு உடல் வாயுவை வெளியேற்றும். மூட்டு வியாதிகளுக்கு உள் மருந்தாகவும், இதன் எண்ணை வெளி மருந்தாகவும் பயன்படும்.
‘ப்ரீரேடிகல்ஸ்’ மூட்டுகளை பீடிக்கும். இதை பூண்டு தடுக்கிறது. உணவில் சேர்த்துக் கொண்டால் வாதத் தொல்லைகள் குறையும். வீரியமுள்ள பொருள் அதனால், கர்ப்பிணி பெண்கள் பூண்டை தவிர்க்கவும். இரத்தம் உறைவதை கரைக்கும் மருந்துகளை சாப்பிடுபவர்கள், பூண்டை தொடக்கூடாது.
8. க்ரித குமரி – கற்றாழை – கற்றாழை கலந்த மருந்துகள், கற்றாழை சாறு, இவை வெகுவாக மூட்டு அழற்சி, வீக்கங்களை குறைக்கும்.
9. அத்ரகா – இஞ்சி – வீக்கம், வலியை உண்டாக்கும் சில ரசாயன பொருட்களை, இஞ்சி அடக்குகிறது. இதனால் பல ஆயுர்வேத மருந்துகளில் இடம் பெறுகிறது.
இஞ்சி சாறு பாதாம் எண்ணெய்யுடன் சேர்த்து (சம அளவில்) ஐந்து நிமிடம் காய்ச்சப்பட வேண்டும். இதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். இஞ்சி களிம்பாகவும், சாறாகவும், பொடியாகவும் அரை தேக்கரண்டி அளவில் தினமும் மூன்று வேளை உட்கொள்ளலாம்.
10. ஹரித்ரர – மஞ்சள் – பல மகிமைகளுடைய மஞ்சள், வீக்கத்தையும், வலியையும் உண்டாக்கும். ஐ குறைத்து, வீக்கத்தை குறைக்கும். ஐ ஊக்குவிக்கிறது.
11. கர்ணஸ்போடா – முடக்கற்றான் – ஒரு என்சைமை தடை செய்து வலி ஏற்படாமல் பாதுகாக்கும். விவரங்கள் தனியே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
12. குடூச்சி – சீந்தில் – இதன் செயல்பாடுகள் ஆர்த்தரைடிஸ் பிரச்சனைகளுக்கு தரப்படும் அலோபதிக் மருந்துகளை போலவே இருக்கும். பக்க விளைவுகள் இல்லை. எனவே பல ஆயுர்வேத மருந்துகளில், குறிப்பாக ஆமவாத மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தவிர கவுட்டுக்கு இந்த மூலிகை உகந்தது. யூரிக் அமிலத்தை வெளியேற்றும். இதிலிருந்து கிடைக்கும் எண்ணையும் வலியை குறைக்கும்.
இதன் வேர்கள் பொதுவாக பொடி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இலைகளின் சாறுகளும் சரியான அளவில் கொடுக்கப்படுகின்றன. இதன் வேர் மற்றும் தண்டுகளின் கஷாயமும் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத தயாரிப்புகள் குடூச்சி தைலம், குடூச்சி யாடி – க்வாத்.
13. அஜ்மோடா – இதில் 23, வீக்கம், அழற்சியை குறைக்கும் ரசாயன பொருட்கள் உள்ளன. கவுட்டுக்கு ஏற்றது. யூரிக் அமில அளவுகளை குறைக்கும். ஆர்த்தரைடிஸை தடுக்க சில தாதுப்பொருட்களும் அடங்கியது. மூட்டுக்களுக்கு ரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது. இந்த மூலிகையை மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு இது ஒவ்வாமையை உண்டாக்கலாம்.
14. புனர்நவா – முக்கிரட்டை – இதன் வேர்கள் கீல் வாதத்தை கட்டுப்படுத்தும். இதைப் பற்றி ஒரு சித்தர் பாடல் “மூக்கிரட்டையினிலை முறையின் வாத நோயாக்கையிற் பெட்டியாவென் வடங்குமே” இந்தப் பாடலின் பொருள்:- மூக்கிரட்டை இலையை உணவு முறையாக அல்லது மருந்தாக உண்டு வர, உடலிலுள்ள வாத நோய்கள், பெட்டியில் பாம்பு அடங்குவது போல் அடங்கி விடும். இதன் வேர்கள், இலைகள், விதைகள் மூன்றும் மூட்டு மருந்தாக பயன்படுகின்றன. இதன் வேர்களிலிருந்த எடுக்கப்படும் எண்ணையுடன் “நொச்சி” மூலிகையையும் சேர்த்து மூட்டுக்களில் தடவ வலி குறையும். சூடு பற்று அல்லது ஒத்தடமும் கொடுக்கலாம். “புனர்நவா குக்குல்” என்னும் ஆயுர்வேத மருந்தில் இந்த மூக்கிரட்டை மூலிகையும், குக்குலும் சேர்ந்தது.
இரண்டு மீட்டர் உயரம் வளரும் இந்த மூலிகையிலிருந்து எடுக்கப்படும் சாறு (வேர், இலைகளிலிருந்து) வீக்கம், அழற்சிகளை குறைக்கும் ஆற்றல் உடையது
15. புஸ்ட்ரீனா – வாசனைப்புல் – கொத்து கொத்தாக 6 அடி உயரம் வளரும் வாசனைப்புல், கையில் வைத்து தேய்த்தால் நறுமணம் வீசும். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணையை, தேங்காய் எண்ணையுடன் (ஒன்றுக்கு இரண்டு பாகம் என்ற விகிதத்தில்) கலந்து, ஆர்த்தரைடீஸ், முதுகு வலி இவற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். நாட்பட்ட ஆர்த்தரைடீஸ§க்கு இந்த புல் – எண்ணையை அப்படியே தடவலாம்.
இந்த புல்லின் சாற்றையும் உள்ளுக்கு குடிக்கலாம். பச்சை சாறை 10 மி.லி. அளவில் தினமும் இரு வேளை அளவில் எடுத்துக் கொள்ளலாம். கஷாயமாக குடித்தால் 30 மி.லி. கொடுக்கலாம்.
16. கந்தபுரா – பொதுவாக இந்த மூலிகை செடி, அமெரிக்கா, கனடா தேசங்களில் பயிராகும். நேபால், இந்தியாவில் மலைப்பிரதேசங்களில் (நீலகிரி) வேறு ஒரு ரகமாக பயிராகிறது. இதில் 95% சலிசிலேட் உள்ளது. ஆஸ்பிரின் மாத்திரையை போல, இந்த மெதில் சலிசிலேட் வலியை குறைக்கும். எனவே ஆர்த்தரைடீஸ், சியாடிகா, தசை வலிகளுக்கு தைலம், நல்ல நிவாரணத்தை அளிக்கும். இந்த மூலிகை செடியின் இலைகளையும் பயன்படுத்தலாம்.
17. யஷ்டி – அதிமதுரம் – மருந்துகள் போல செயல்படும் அதிமதுரம் வேர், ஆமவாதம், ஆஸ்டியோ – ஆர்த்தரைடீஸ், கவுட் இவற்றின் வலியை குறைக்கிறது. பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் செயல்படுகிறது.
இதன் வேரை பொடித்து தினமும் இரு வேளை 1 அல்லது 2 கிராம்
அளவில் எடுத்துக் கொள்ளலாம். களிம்பாகவும் பயன்படுத்தலாம். ஆனால் அதிமதுரத்தை நெடுநாள் எடுத்துக் கொள்ளக் கூடாது. பல பக்க விளைவுகளை உண்டாக்கும்.
18. சரீபா (அ) அநந்தா – (நன்னாரி) இதன் வேர்களில் சிடோசிரால் என்ற பொருள் உள்ளது. ஆர்த்தரைடீஸ§க்கும் தவிர வியர்வை உண்டாக்கி, கழிவுப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேற உதவும். கோடையில் நன்னாரி சர்பத் உடல் சூட்டை தணிக்கும். இதன் களிம்பு மூட்டுவலி, வீக்கத்தில் தடவ பயன்படுகிறது. நன்னாரி வேர்கள் பிரசித்தி பெற்ற “பிண்ட தைலத்தில்” சேர்க்கப்படுகிறது.
19. மதூகா – (காட்டு இலுப்பை) – ஆஸ்டியோ -ஆர்த்தரைடீஸ் பாதிப்புக்கு காட்டு இலுப்பை நல்ல மருந்து. 20 மீட்டர் வரை வளரும் மரம். இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணை மூட்டுவலி வீக்கங்களுக்கு தடவலாம். இதன் மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயம் உள்ளுக்கு கொடுக்கலாம். இதை கஷாயமாக தயாரித்து தினம் 2 கப் பருகி வரலாம். இலைகளை களிம்பாக்கி, வலி இருக்கும் இடங்களில் தடவலாம். இது கலந்த ஆயுர்வேத தயாரிப்புகள் – குடஜரிஷ்டா, கனகாசவ்.
20. பாபுனா – இந்த மூலிகையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணை, ஆர்த்தரைடீஸ், கவுட் வலியை குறைக்கிறது. இதன் பூக்களை சுருக்கி ஈரமான ‘கட்டு’ போட ஸியாடிகா வலி குறையும்.
21. ஜாதிப்பலா – ஜாதிக்காய் – ஜாதிக்காய் மரம் 9 லிருந்து 12 மீட்டர் உயரம் வளரும். மரத்தின் காய் பழுத்து பின் சதைப்பற்றுள்ளதாக இருக்கும். இதன் கொட்டையின் ஒட்டின் மேல் சற்று சிவந்து, மெல்லிய தோல் போல் இடை விட்டு பகிர்ந்து இருப்பது ‘ஜாதிப்பத்திரி’ என்றும், ஓட்டினுள் உள்ள பருப்பு ‘ஜாதிக்காய்’ என்றும் கூறப்படும். கொட்டையின் மேல் உள்ள சதை, புளிப்பும் துவர்ப்பும் கூடிய ஜாதிக்காயின் மணத்தை பெற்றிருக்கும். ஜாதிக்காய் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் தைலத்தை, நல்லெண்ணையுடன் சேர்த்து தடவ ‘ஸியாடிகா’ வலி மறையும். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிக ரத்தம் பாய, இந்த எண்ணை உதவும். ஜாதிக்காயை நேரடியாக உண்ணக் கூடாது. பல தீவிர விளைவுகளை உண்டாக்கும், உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். வைத்தியரின் ஆலோசனை படி உபயோகிக்கவும்.
22. ப்ரசாரணி – இந்த கொடி தாவரம், மிதிக்கப்பட்டால் அல்லது இலைகளை நசுக்கினால் துர்நாற்றம் வரும். முதுகு வலி க்கு ஏற்ற மருந்து. இதர வாத நோய்களுக்கும் மருந்தாகும்.
23. மஞ்ஜிஸ்தா – (மஞ்ஜிட்டி) – இதன் வேர்கள் மிக நீளமாக இருக்கும். சில ஆய்வுகளின் படி வாத நோய்களில் இந்த மூலிகையின் செயல்பாடு, ஆர்த்தரைடீஸ§க்கு கொடுக்கப்படும் அலோபதி மருந்தான மருந்து போல் செயல்படும். உடலின் கழிவு; நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால் ஆமவாதத்திற்கும், கீல் வாதத்திற்கும் நல்லது. வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயம் 30 மி.லி. இரு வேளை தினமும் உட்கொள்ளலாம். மஞ்ஜிட்டி, “ஆயின்ட்மென்டாகவும்” தயாரிக்கப்படுகிறது. இதன் ஆயுர்வேத தயாரிப்புகள் – மகர மஞ்ஜிஷ்டாதிக்வாதி, மகாமஞ்ஜிஷ்டாரிஷ்டம்.
24. அரிஷ்டகா – (ரீதா) – இமயமலை பிரதேசங்களில் பயிராகும் இந்த சிறிய மரத்தின் இலைகளும், மரப் பட்டைகளும் வாத நோய்களுக்கு மருந்தாகின்றன. வலியை உண்டாக்கும் எனும் ஹார்மோன் போன்றவற்றை, இந்த தாவரத்தின் மரப்பட்டையில் உள்ள சலிசிலிக் அமிலம் குறைக்கிறது. “ஆஸ்பிரின்” போல் செயல்படும் இந்த மூலிகை, ஆஸ்பிரினை விட நிதானமாக செயல்பட்டாலும், ஆஸ்பிரின் பக்க விளைவுகள் இல்லை. மூலிகையின் பயனும் நீண்ட நேரம் நீடிக்கும். ஆமவாதத்திற்கும், ஆஸ்டியோ – ஆர்த்தரைடீஸ், ஸ்பான்டிலைடீஸ் மற்றும் கீல்வாதத்திற்கும் அருமையான மருந்து. இதன் பட்டை, 1 – 2 கிராம் எடுத்து 250 மி.லி. நீரிலிட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் 3 வேளை குடிக்கலாம்.
25. பலா – நிலதுத்தி – சிறிய செடியான இந்த மூலிகை இதர ஆயுர்வேத மருத்துவ மூலிகை, பொருட்களுடன் கலந்து உபயோகிக்கப்படுகிறது. பலாதி க்வாதி, பலாதிரிஷ்டா முதலிய ஆயுர்வேத தயாரிப்புகளில் சேர்க்கப்படும் நிலதுத்தி வலியை குறைக்கும். ஆமவாதம், சியாடிகா, ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் இவற்றுக்கு மருந்தாகும். இந்த மூலிகையை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். தவறான அளவுகள் பக்க விளைவை உண்டாக்கும்.
26. ரஸ்னா – இதன் வேர்கள் ஆமவாதம், ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் மருந்தாகும். எல்லா வித வாத நோய்களின் வலிக்கு இதன் தைலம் பயனாகிறது. இதனுடன் குக்குலு சேர்த்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்தான ‘ரஸ் நாதி க்வாத்’ எல்லா வித ஆர்த்தரைடீஸ் நோய்களுக்கும் உபயோகிக்கலாம். தவிர ரஸ்நாதி வடீ, ரஸ்நாதி சூரணம் என்ற மருந்துகள் வாத நோய்க்கு கொடுக்கப்படுகின்றன.
27. வாத நாராயணன் – இதன் இலைகள் வாதத்தை அடக்கும் குணமுடையவை. இலைகளை சிற்றாமணக்கு நெய் விட்டு வதக்கி வீக்கங்கள், கட்டிகள் இவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இந்த இலைகளின் சாறு, வாதநோய்களுக்கான தைலங்களில் சேர்க்கப்பட்டால், வாதநோய் எளிதில் போகும் என்பது சித்த, ஆயுர்வேத வைத்தியர்களின் அபிப்பிராயமாகும்.
28. அல்ஃபா ஃபா – தமிழ் நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிராகும் இந்த மூலிகையின் கஷாயத்தை (விதைகளிலிருந்து தயாரித்தது) தினம் 4-5 கப் ஒரு மாதம் வரை குடித்து வர, ஆர்த்தரைடீஸ் வியாதிகள் குறையும்.
29. அரத்தை – (பேரரத்தை, சிற்றரத்தை) இந்த இரு அரத்தைகளும் கிருமி நாசினிகள். சில வகை புரதங்களை ஊக்குவித்து குருத்தெலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
30. ஆடாதொடை (வசாகா) – ஆமவாத வலிக்கும், வீக்கத்திற்கும், ஆடாதொடை இலைகளை, கொதிக்க வைத்து, துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.
வாத நோய்க்கான இதர மூலிகைகள்
1. ஆமணக்கு வேருடன் துளசி இலைகளை சேர்த்து தயாரித்த கஷாயத்தை சிறிதளவு தேன் விட்டு பருகினால் வாத நோய்கள் தீரும்.
2. துளசி இலை சாற்றுடன், பசு நெய், மிளகுத்தூள் கலந்து உட்கொண்டால் வாத வீக்கம் குறையும்.
3. வேப்பிலை கஷாயத்தில் தேன் விட்டு குடித்தால் வாத ரக்த நோய் தணியும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆயுர்வேத மூலிகைகள்
» ஆயுர்வேத மூலிகைகள்
» ஆயுர்வேத மூலிகைகள், தைலங்கள்
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) - Health Tips in Tamil
» கற்ப மூலிகைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum