தேவைக்கு ஏற்ப மாறுங்கள்
Page 1 of 1
தேவைக்கு ஏற்ப மாறுங்கள்
காலத்துக்கு காலம் மனிதர்களது சிந்தனை மாறுபடுகிறது. இதன் காரணமாக அவர்களின் செயல்பாடுகளும் மாறி விடுகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு, திருமணம் செய்து கொண்ட போது ஒரு கணவரிடம் இருந்த பாலுறவு செயல்பாடுகள் பின்னர் மாறி இருப்பது இயல்பு. இதைப் புரிந்துக் கொள்ளாமல், இந்த மனிதருக்கு திடீரென்று என்ன வந்தது? இது வரை என்ன புடவை கட்டி இருக்கிறேன் என்று கூடக் கவனிக்காதவர், இப்போது கொசுவலை போன்ற நைட்டிகளை எல்லாம் வாங்கி வந்து போட்டுக் கொள்ளச் சொல்கிறாரே… என்று மனைவி நினைத்து, மறுக்க முயலலாம். நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் மனைவி முன்னிலும் அதிகமாக பாலுறவைக் கணவனிடத்தில் எதிர்பார்க்கலாம். ‘இந்த வயதில் இது என்ன பைத்தியக்காரத்தனம்’ என்று மனைவியின் எதிர்பார்ப்பைக் கணவன் சுலபமாக ஒதுக்கி விடலாம். ஆனால் இதனையே காரணமாக வைத்து வீட்டில் தொல்லைகள் தொடங்குவதற்கு இதை விட நல்ல வாய்ப்பு வேறு வேண்டுமா?
மற்றவர்களது மாறுகின்ற உணர்வுகளை, எதிர்பார்ப்புகளைச் சிலர் எளிதாகப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்கி விடுகின்றனர். மாறுதல் என்பது பாலுறவு சிறக்க மிக மிக அவசியம். இதனை இன்றைய நாட்களில் பலருக்கு எடுத்துச் சொல்லி அறிவுறுத்த வேண்டியுள்ளது. பாலுறவு ஒத்தியல்பு என்பதை மணவாழ்வின் தொடக்கத்திலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இடையிலும் ஏற்படுத்திக் கொள்ளலாம்… என்பதைத் தம்பதியர் புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே தம்பதிகளுக்கு: மாற்றங்களை வரவேற்கின்ற நல்லதொரு மனப் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
‘கணவன் மனைவி இரண்டு பேரும் தங்கள் நெஞ்சக் கனவுகளைப் பகிர்ந்துக் கொள்ளாமல், பாலுறவில் மன நிறைவு கொள்ள முயற்சிப்பது… கண்களை கட்டிக் கொண்டு கனி பறிக்க முயற்சிப்பது போன்றது’ என்கிறார் டாக்டர்.ஹெலன் எஸ்.கெப்லான் என்னும் பாலியல் மருத்துவர். ஒருவரது அறியாமை போலத்தான் பால் ஒத்தியல்வின்மை(Sexual incompatibility)க்கான முதல் காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
தம்பதியர் தங்களது உண்மையான உணர்வுகளை ஆசைகளை ஒருவருக்கு ஒருவர் தெரியப்படுத்திக் கொள்ள முன் வரும் போது நிறைவான பாலுறவை அடையத் தடையாக இருந்தத் தடைக் கற்கள் எல்லாம் உடைகின்றன. மாறுதல்கள் வரவேற்கப்பட வேண்டியவை என்று தம்பதியர் இருவரும் எண்ணிச் செயல்படத் தொடங்கும் போது அங்கே இனியதோர் புதுவாழ்வு தொடங்குகிறது.
தெளிவுபடுத்துங்கள்
பலரது பாலியல் குறைபாடுகள் தெளிவற்றதாகவும், தவறான பாலியல் அறிவினால் ஏற்பட்டதாகவும் உள்ளன என்று பாலியல் ஆலோசனை வழங்குபவர்கள் கூறுகின்றனர். பல நேரங்களில் பாலுறவு பற்றிய அறியாமையே தடையாக இருக்கிறது. தங்கள் பாலுறவில் மன நிறைவில்லை என்று கூறுகின்ற பலருக்குத் தங்களது தேவைகள் என்னன்ன என்பதே தெரியவில்லை.
பல நேரங்களில் தம்பதியர் தாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த பல செய்கைகளைத் தங்கள் கணவர் அல்லது மனைவி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். நடைமுறையில் இயலாத இந்த எதிர்பார்ப்புகளால் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்கிறார் Centre For Health Science தலைவரான டாக்டர் ஜோஷ¨வா கோல்டன்.
பல பெண்கள் தங்களுக்குப் பாலியல் வேட்கை ஏற்படும் எல்லா நேரங்களிலும் தங்கள் கணவருக்கும் வேட்கை எழ வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். அவ்வாறு நேராது போனால் பாலியல் ஒத்தியல்பு இல்லையென எண்ணுகின்றனர். இளமை கடந்து நடுவயதினை அடைகின்ற போது இவ்வகையான சிந்தனைக்கு இடமே இல்லை. மனம் ஒன்றி மணவாழ்க்கை நடத்துகின்ற தம்பதியர்கள் இடையே கூட இது நிகழ்வது இல்லை, ஆண்களின் பாலியல் ஆர்வம் சில வேளைகளில் மேலோங்கி இருக்கக் கூடும். சில வேளையில் பால் பொங்கும் போது தண்ணீர் தெளித்ததைப் போல அடங்கி விடவும் கூடும்.
பலரிடம் நிலவுகின்ற இன்னொரு தவறான கருத்து என்னவெனில்… உண்மையான ஆண் மகன் என்றால் அவன் எந்த நேரமும் உடலுறவுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதாகும். ‘இது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது’ என்று கூறும் டாக்டர் கோல்டன் ‘ஓர் இளைஞனுக்கு வேண்டுமானால் பாலுறவு பற்றிய வெறும் நினைப்பே எழுச்சியை உண்டாக்கக் கூடும். ஆனால், நடுவயது கடந்தோருக்கு இது சிறிது காலங்கடந்து தான் ஏற்படக்கூடும்’’ என்கிறார்.
குறை கூற வேண்டாம்
மணவாழ்வில் ஒத்தியல்பு இல்லாத தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் பழித்தும், இழிந்தும் குறை கூறிக் கொள்கிறார்கள் என்கிறார் டாக்டர் ஷிர்லி ஸஸ்மன். குறை கூறுவதும், ஓயாது நச்சுப்படுத்துவதும் நிலைமையை மேலும் மோசமாக்குமே தவிர மேம்படுத்தாது. எனவே குறை கூறுவதை நிறுத்தி விட்டு ஆழ்ந்த நட்பை ஏற்படுத்துவதற்கான ஆக்கப் பூர்வமான வழிகளைச் சிந்திக்க வேண்டும்.
காதலித்து மணந்தீர்களா?
எங்களிடையே பாலியல் ஒத்தியல்பு இல்லை என்று பறைசாற்றுகின்ற பல தம்பதியர்களோடு, பேசிப் பார்த்த போது அவர்களில் பலரும் ஆசை அல்லது காதலினால் ஒருவரை ஒருவர் மணந்தவர்களாக இல்லை. காதலைத் தவிர்த்த பிற காரணங்களுக்காக, அதாவது பணம், சொத்து, பாதுகாப்பு, பதவி, கௌரவம், குடும்பக் கட்டாயம் போன்றவற்றுக்காக மணந்தவர்களாகவே இருந்தனர். மணவாழ்க்கையின் நடுப்பகுதிக்கு வந்த பின்னரே தாங்கள் இருவருக்கும் ஒத்தியல்பு இல்லை என அவர்கள் உணரத் தொடங்குகின்றனர். என்றாலும், மணவாழ்க்கை எல்லோருக்கும் பொருத்தமானது என்பது தெரிவதில்லை. செக்ஸில் ஈடுபட முனையும் பெண்ணுக்கோ, அல்லது ஆணுக்கோ செக்ஸ் ஓர் அலர்ஜியாக இருக்கக் கூடாது. இன்னும் சிலர் பிற நடைமுறை வசதிகளுக்காகவும் தங்களை அறியாது பெற்று விட்ட குழந்தைகளுக்காகவும் தங்கள் மணவாழ்க்கை தொடர வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இது போன்ற தம்பதியர் வேற்றூர்கள், வேறு நாடுகள் சென்றும் சுற்றுலாத் தலங்களைக் கண்டும் தங்கள் இளமை உணர்வுகளைப் புதுப்பித்துக் கொண்டும், தாங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக ஏற்றுக் கொண்ட கணவர் அல்லது மனைவியை எல்லா விதத்திலும் மனதார ஏற்றுக் கொண்டும்… செயல்பட்டால் நாட்களை இனிமையாக நகர்த்தலாம்.
உடலைப் பேணுங்கள்
உடலைப் பேணிக் கவனிப்பது என்பது நம்மிடையே மிக அரிதாகக் காணப்படும் ஒரு பழக்கம். பாலியல் உணர்வு மிகுந்திருக்கும் நேரங்களில் கூடத் தன் கணவரது ஏடா கூடமான உடல் தோற்றம் காரணமாகக் கூட ஒரு மனைவி அவரைச் சேராது போகக் கூடும். அதே போன்று அவலட்சனமான உடல் தோற்றம் கொண்ட பெண்ணை அவளது கணவன் சேராமல் போவதிலும் வியப்பு ஏதும் இல்லை. பாலியல் ஒத்தியல்பு பற்றிப் பேசுகின்ற பலர் உடல் தோற்றத்தைக் கண்டு கொள்வதே இல்லை என்பது தான் நிஜம்.
தனது தோற்றம் பாதிக்கப்பட்டால், கணவன் பிற பெண்களின் தோற்றத்தால் கவரப்படக் கூடும் என்று அஞ்சி அந்த நிலைமை நேராமல் தடுக்க, தங்கள் உடலை ஆரோக்கியமுடன் பேணி பாதுகாக்கிற கலையில் ஒவ்வொரு தம்பதியரும் தேற வேண்டும்.
கசந்த உறவும் இனிக்கும்
இனிய மணவாழ்வுக்குத் தம்பதியரிடையே ஒருமித்த கருத்து ஒற்றுமை அவசியம் தேவையாகும். இதை இருவரும் கூடிக் கலந்து பேசினால் மட்டுமே ஏற்படுத்த முடியும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போனால் தான் கசந்த உறவும் இனிக்கும். பாலியல் ஒத்தியல்பு வேண்டுமென விரும்புகின்றவர் மற்றவர் வழியையும் பார்க்க வேண்டும். ஒன்று அவரை உங்கள் வழிக்குக் கொண்டு வர முயலுங்கள். முடியாவிட்டால் நீங்கள் அவர் வழிக்கு மாறிவிடுங்கள்.
பல நேரங்களில் பிரச்சனைகளுக்குப் பாலியல் காரணமாக இருப்பதில்லை. உங்களுக்குள் மறைந்திருக்கும் கோபமும், ஆத்திரமும், பொறாமையும், வன்மமும் கூட உங்கள் பாலியல் வாழ்வைப் பாதிக்கலாம்.
கணவன் மனைவி இருவரும் உங்களது மன வேறுபாடு எப்போது தொடங்கியது என்று சிந்தித்துப் பாருங்கள், உங்கள் மனைவி வேலைக்குப் போக ஆரம்பித்த நாளிலிருந்து தொடங்கிய சினம், ஊரிலிருக்கும் அவள் தாய் தந்தையருக்கு ஒவ்வொரு முறை அவள் பணம் அனுப்புகின்ற போது எழுகின்ற சீற்றம். உங்கள் கணவர் நைட் ஷிப்டுக்கு மாறியதிலிருந்து ஏற்பட்ட கசப்பு, ஊரிலிருந்து வந்து இருந்து கொண்டு ஒவ்வொன்றிலும் குறைகள் கண்டுபிடிக்கின்ற உங்கள் மாமியார், இவை ஏதாவது ஒன்று உங்கள் பாலியல் ஒத்தியல்பு இன்மைக்குக் காரணமாக இருக்கலாம். அது என்னவென்று கண்டறிந்து அதைத் தவிர்த்து உங்களை அமைதிப்படுத்திக்கொள்ள முயற்சியுங்கள்.
அவசரம் தேவையா?
ஆசையோடும், வேகத்தோடும் பாலுறவை அணுகுகின்ற பல தம்பதியர் அவசரத்தில் அள்ளித் தெளிக்கின்ற கோலத்தைப் போலவே முடித்துக் கொள்கின்றனர். அந்த முறையை மாற்றுங்கள். அவசரமின்றி முயற்சியுங்கள், உங்களுக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாள் தொடுதல் மட்டுமே, மறுநாள் தழுவுதல் மட்டுமே என்று திட்டமிடுங்கள், இனிமையின்றி இருந்த பாலுறவு இனிக்கும். நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பாலியலைப் பற்றி முழுமையாக அறிவு பெறாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது இப்படித் தான் என்று புரிந்து வைத்திருக்கும் போது, தனது அவசரத்தினை தவிர்க்கலாம்.
சில பெண்களுக்கு குழந்தை சிசேரியனில் பிறந்திருந்தால் செக்ஸில் நாட்டம் குறையலாம். செக்ஸை நினைத்தாலே கதிகலங்க வைக்கும் இருதய கோளாறுகள் போன்ற காரணங்களாலும் பயம் ஏற்படலாம். நம் இந்திய திருநாடு பண்பாட்டின் கலாசாரத்தின் மணிமகுடமாக விளங்குகிறது. இங்கு வளர்க்கப்பட்ட, வளர்கின்ற ஒவ்வொரு பெண்ணும், கட்டுக்கோப்பான மனநிலையுடன் இருப்பார்கள். இத்தகைய பெண்களின் பாலியல் அறிவு என்பதும் ஒரு வரைமுறைக்கு உட்பட்டதாகவே இருக்கும். இத்தகைய குணாம்சம் , மனநிலையும் பெற்ற பெண் திருமணத்துக்கு பின்னால் தனது கணவனுடன் கூடும் போது கணவன் பாலியல் செயல்பாட்டில் அத்து மீறலுடன் ஈடுபட்டாலோ, அல்லது இவரையும் ஈடுபட வைத்தாலோ, அப்பெண்ணுக்குள் தனது கணவனின் தவறான பிம்பம் பதிவாகலாம். அவனது அதிகப்படியான ஆர்வம் கூட அவருக்கு அத்து மீறலாக தென்படலாம். இதனால் கூட பயம் ஏற்படலாம்.
எச்சரிக்கை உணர்வு
தங்களுக்கு அதிக குழந்தை வேண்டாம் என்றோ, அல்லது குழந்தை பிறப்பை தற்காலிகமாக தள்ளிப்போடவோ எண்ணி கருத்தடை சாதனங்களுடன் பாலுறவில் ஈடுபடும் ஜோடிகளிடத்தில் கணவனுக்கோ, மனைவிக்கோ அதிருப்தி ஏற்பட்டு, தனது துணையின் எச்சரிக்கை உணர்வு பிடிக்காமையின் காரணமாக மனம் பாதிப்புற்று கூட பாலியல் உறவில் அலர்ஜி ஏற்படக் கூடும்.
பிறப்பிலேயே அல்லது பாலியல் உறுப்புகளில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக ஜோடிகளில் யாரோ ஒருவரால் பாலியல் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட முடியாமல் அதிருப்தியின் காரணமாக படுக்கையறை அலர்ஜி ஏற்படலாம். மேலும் பாலுறவின் போது பிறப்புறுப்பினில் எரிச்சல், கடுமையான வலி போன்றவையும் படுக்கையறை அலர்ஜிக்கு காரணமாகலாம். இது பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்குத் தான் ஏற்படும். சிலருக்கு உடல் உறவு சமயத்தில் வயிற்று வலி, தலைவலி போன்றவை கூட ஏற்படலாம்.
சில பெண்களுக்கு உடலுறவுக்கு முன்பாக பிறப்புறுப்பில் சுரக்கும் ஹார்மோன் சுரக்காமலே உடல் உறவில் ஈடுபட்டால் வலியும் எரிச்சலும் ஏற்படலாம்.
இன்றைய காலகட்டத்தில் அவசரம், பரபரப்பு, படபடப்பு, டென்ஷன் போன்ற சூழலில் வாழ வேண்டிய ஆணும் பெண்ணும் தங்களை தளர்த்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பதே பலருக்கும் தெரியாமல் உள்ளது. இன்று உலகம் முழுவதுமே நிறைய பேருக்கு இருக்கும் உடல் பிரச்சனை என்னவென்றால், ஹைபர் டென்ஷன் என்கிற பாதிப்பு தான்.
இந்த அவசரகதியிலான வாழ்க்கைக்கிடயிலும், நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் அதற்கு கைக்கொடுப்பது தான் நம்மை நாமே தளர்த்திக் கொள்ளுதல் அல்லது ரிலாக்ஷேசன்.
இன்னும் ஒரு விசயத்தையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மைச் சுற்றிலும் விஞ்ஞானம் வானளவிற்கு வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. போலவே நம்மைச் சுற்றிலும், இயற்கையாகவும், செயற்கையாகவும், ஏராளமான பொழுது போக்கு சாதனங்கள் நம்மை ரிலாக்ஸ் படுத்த கங்கணம் கட்டி நிற்கின்றன. ஆனாலும் அவற்றையும் வழக்கம் போல ஏறெடுத்து பார்ப்பதில்லை.
இப்படி வேண்டுமானால் சுருக்கமாக சொல்லலாம். நாம் வசித்துக் கொண்டிருக்கிறோம், வாழவில்லை. நம் முன்னோர்கள் எல்லாம் வாழ்ந்தார்கள். அதனால் அவர்களின் ஆயுள் நீண்டது. நாம் வாழவில்லை. வசித்துக் கொண்டிருப்பதனால் நம்மால் நோயில்லாமல் இருக்க முடிவதில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புதியவராய், வெற்றியாளராய் மாறுங்கள்
» நீங்கள் மாறுங்கள்... எல்லாம் மாறும்...!
» மாதங்களுக்கு ஏற்ப பலனும் பரிகாரமும்
» உங்கள் உயரத்திற்கு ஏற்ப உங்கள் நிறை இருக்கிறதா என அறிய.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum