தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கால் பாதுகாப்பு முறைகள்

Go down

கால் பாதுகாப்பு முறைகள் Empty கால் பாதுகாப்பு முறைகள்

Post  meenu Thu Feb 28, 2013 2:52 pm

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கண்டிப்பாக புகைபிடிப்பது, மதுப்பழக்கம், இவ்விரண்டையும் உடனடியாக நிறுத்த வேண்டும். பொதுவாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, அழுகல் வியாதி இந்த பழக்கங்களால் அதிக விரைவாக தாக்கும்.
ரத்த சர்க்கரை லெவலை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
தினமும் கால்களை, பாதங்களை நன்கு கவனிக்க வேண்டும். வெடிப்புகள், காயங்கள், கால் ஆணிகள், எந்த பாகமாவது கடினமாக கெட்டியாகி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும். காலில் சிறுபுண், ஆணிகள் போன்றவை இருந்தால் சுய சிகிச்சை செய்யாமல் உடனே டாக்டரை அணுகவும்.
காலில் உணர்ச்சிகளை சுயமாகவே பரிசோதித்துக் கொள்ள வழிகள் உள்ளன. உங்கள் டாக்டரை கேட்டு தெரிந்து கொள்ளவும்.
தேவையான பிஸியோதெரபி பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
நடப்பது நல்ல பயிற்சி, தினமும் 1 / 2 மணி அல்லது 1 மணி நேரம், நடக்க வேண்டும்.
கால்களுக்கென்றே சில உடற்பயிற்சிகள் உள்ளன. இவற்றை டாக்டரின் அறிவுரைப்படி செய்து வரவும். உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும், கால்களை நன்றாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் முயற்சியில் உறுதுணையாக இருக்க இதோ சில யோசனைகள்
கால்களைத் தினமும் இளஞ் சூடான வெந்நீரில் மென்மை யான சோப் ஒன்றின் உதவியால் கழுவுங்கள்.
தூய்மையான துவாலை ஒன்றினால் பாதத்தை, குறிப்பாக விரல் இடுக்குகளை ஈரமின்றித் துடையுங்கள். அழுத்தித் துடைக்காதீர்கள். இதனால் சருமத்தில் விரிவு ஏற்பட்டுத் தொல்லை உண்டாக்கலாம்.
கால் விரல்களைச் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிப் பிடித்து விடுங்கள். பாதக்கால்கள் மென்மையாக இருக்கும் படி இலேசாக எண்ணெய் பூசுங்கள்.
கால் நகங்கள் பொரு பொருவென்றும், எளிதில் உடையத் தக்கனவாகவும் இருந்தால் சிறிதளவு இளஞ்சூடான வெந்நீரில் 1 மேஜைக் கரண்டி போராக்ஸை (Borax) கரைய விட்டு அதில் கால்களை ஊற வைத்து கால்களை மென்மையாக்குங்கள்.
நகங்களை வெட்ட வேண்டியிருந்தால் ஒட்ட வெட்டாதீர்கள். சிறிதளவு விட்டு வெட்டுங்கள். தசைக்குள் இருக்கும் நகத்தையும், விரல் மூலைகளிலுள்ள நகத்தையும் வெட்டாதீர்கள்.
செருப்பு, போன்ற விஷயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவை மென்மையாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். புதிதாக அவைகளை வாங்கி அணிகின்ற போது கவனமாக இருக்க வேண்டும்.
கால் ஆணி அல்லது கரணை இருந்தால் அவற்றை வெட்ட முனையாதீர்கள். மருத்துவர் உதவியை நாடுங்கள்.
இறுக்கமான சாக்ஸ்களை அணியாதீர்கள்.
கால்களில் வலி இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்றி வெந்நீர் ஒத்தடம் தராதீர்கள்.
கால்களில் சிறிய, மிகச்சிறிய காயம், சிராய்ப்பு ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவியுங்கள்.
கால் பாதுகாப்புக்கு ஆயுர்வேத சிறப்பு சிகிச்சை
விஷ ரசாயன வடி என்ற சுத்திகரிப்பு முறையினால் உடலின் விஷங்கள் களையப்படுகின்றன.
பிறகு நோயாளிகளின் ரத்தத்தை சுத்தப்படுத்த மருந்துகள் தரப்படும் இதனால் கால்களுக்கு அதிக ரத்தம் பாய்கிறது. காயங்கள் ஆற விஷாங்ன வடி மாத்திரை மருந்தும் தரப்படுகிறது.
பஞ்ச வால்கல கஷாயத்தால் அழுகும் கால் பகுதி கழுவப்படும்.
மருந்தான சூரணத்தை தடவி கால்களை பேண்டேஜ் (Bandage) செய்யப்படும்.
இதனால் கால்களுக்கு உணர்வுகள் மெல்ல திரும்பி வரும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum