எய்ட்ஸ் பாதுகாப்பு முறைகள்
Page 1 of 1
எய்ட்ஸ் பாதுகாப்பு முறைகள்
எய்ட்ஸ் ஒரு தொற்று நோய். அதனை பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
எய்ட்ஸ் நோயை வருமுன் காப்பதுதான் சிறந்தது. வந்த பின் அதனை பரவாமல் தடுப்பது கடமையாகிறது.
அதற்கான சில முறைகளை இங்கு தெளிவுபடுத்துகிறோம்.
ஒரே முறை பயன்படுத்தக் கூடிய ஊசியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக நரம்புகளில் செலுத்தும் ஊசியைப் பயன்படுத்தும் போது இதை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
அறுவை சிகிச்சையின் போதும் சுத்திகரிக்கப்பட்ட ஆயுதங்களையே பயன்படுத்த வேண்டும்.
கருவுற்ற பெண்கள், "தாய் சேய் தொற்றுத் தடுப்பு மையத்தை" அணுக வேண்டும். அங்கு பரிசோதனை செய்து கொண்டு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றி குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.
இரத்தம் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகளை அணுக வேண்டும். எச்ஐவி தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் கூடிய இரத்தத்தைப் பெறுவது அவசியமாகும்.
ஒருவருக்கு பால்வினை நோய் பாதித்திருந்தால், அவர் உடலுறவு கொள்ளும் போது அந்நோய் அதிகரித்து பல்வேறு மாற்றங்களை அடைந்து எச்ஐவி தொற்றாக மாறுகிறது.
எனவே பால்வினை நோய் உள்ளவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தகுந்த சிகிச்சையினை மேற்கொண்டு இந்நோயை குணப்படுத்த வேண்டும்.
பால்வினை நோய் தாக்கியவர்கள், ஆணுறைப் பயன்படுத்தாமல் உடலுறவுக் கொள்ளவேக் கூடாது.
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதால் எய்ட்ஸ் நோயில் இருந்து பெருமளவு நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கால் பாதுகாப்பு முறைகள்
» பனி கால பிரச்சனைக்கான பாதுகாப்பு முறைகள்!
» பனி கால பிரச்சனைக்கான பாதுகாப்பு முறைகள்!
» கண் பாதுகாப்பு
» பற்கள் பாதுகாப்பு
» பனி கால பிரச்சனைக்கான பாதுகாப்பு முறைகள்!
» பனி கால பிரச்சனைக்கான பாதுகாப்பு முறைகள்!
» கண் பாதுகாப்பு
» பற்கள் பாதுகாப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum