கணைய இன்சுலீனும் வளர்சிதை மாற்றமும்
Page 1 of 1
கணைய இன்சுலீனும் வளர்சிதை மாற்றமும்
டயாபடீஸ்ஸை பற்றி கூறுகையில் மெடபாலிசம் கோளாறு என்கிறோம். மெடபாலிசம் அதாவது வளர்சிதை மாற்றம் என்பது உடலில் வளர்ச்சிக்காக ஏற்படும் வேதியல், ரசாயன மாற்றங்கள் மற்றும் சீரண மண்டல செயல்பாடுகள், உணவு சத்துப் பொருளாக மாற்றுதல், உயிரணுக்கள் (Cells), திசுக்கள் உண்டாக இவற்றுக்கு தேவையான எரிபொருள்சக்தி போன்ற எல்லா வித செயல்பாடுகளையும் குறிக்கும் ஒரே வார்த்தை. நம் உணவு எவ்வாறு ஜீரணிக்கப்படுகிறது என்று முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.
நாம் பலவித உணவுகளை பலவித இடங்களில் உண்ணுகிறோம். நாம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டாலும் சரி, கையேந்தி பவன்களில் சாப்பிட்டாலும் சரி, இல்லை வீட்டில் சாப்பிட்டாலும் சரி, நம் உடல் நாம் சாப்பிடும் உணவை புரிந்து கொள்ளாது, அதற்கு தயிர் சாதமும் ஒன்று தான், மட்டன் பிரியாணியும் ஒன்று தான். அதற்கு தெரிந்ததெல்லாம், மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின்கள், தாதுப் பொருட்கள் இவை தான். வாயைத் தாண்டினால் ருசி தெரியாது.
நாம் உணவு உண்பது எதற்காக உடல் வளர்ச்சிக்காக, உடல் உறுப்புகள் சரிவர, சுறு சுறுப்பாக இயங்க, உடலை பாதுகாக்க, உடல் வலிமைக்காக, சுருக்கமாக சொன்னால் உயிருடன் வாழ உணவு தேவை. நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுப்பொருளை சர்க்கரையாகவும், புரதத்தை அமினோ அமிலமாகவும், கொழுப்பை, கொழுப்பு அமிலங்களாகவும் (Glycerol) கிளைசெராலாகவும் மாற்றப்படுகின்றன. இதற்கு வயிற்றில் உண்டாகும் ஜீரணத்திரவங்கள்(Gastric juices), கல்லீரலால் உண்டாகும் பித்த நீர்(Bile), கணையம் தயாரிக்கும் என்ஸைம்களும் உதவுகின்றன.
மாவுப்பொருட்கள் (Starch, Carbo – hydrates) மூன்று ரக சர்க்கரைகளாக மாற்றப்படுகின்றன. அவை. ஒற்றை சர்க்கரைகள், இரட்டை சர்க்கரைகள் மற்றும் கூட்டு சர்க்கரைகள்.
இந்த மாதிரி மாற்றப்பட்ட சர்க்கரை சக்தியை உடலெங்குமுள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு கொண்டு செல்வது ரத்தத்தின் கடமை. பொறுப்பாக இந்த சக்தியை ரத்தம் மாத்திரம் கொண்டு சென்றால் அதை செல்கள் ஏற்காது. ரத்தத்துடன் கூட, செல்களுக்கு அறிமுகமான ஒரு ஹார்மோன் உதவியாளர் தேவை. இந்த உதவியாளர் தான் இன்சுலின். செல்கள் ஏன் ரத்தத்தை மட்டும் அனுமதிப்பதில்லை.
உடல் செல்கள் மெம்ப்ரேன் (membrane) எனப்படும் சவ்வால் – சருகால் மூடப்பட்டவை இந்த மெம்பரேன்கள் வெறும் பை அல்ல. ரிசெப்டர்கள் (Receptors) எனும் புகு வாய்களை கொண்டவை. இவை பிற செல்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறமை வாய்ந்தவை. யாரை உள்ளே விடுவது யாரை உள்ளே விடக் கூடாது என்று தெரிந்தவை.
எதற்காக இந்த பாதுகாப்பு உடலின் ஒவ்வொரு அவயத்திலும் செல்கள் உள்ளன. இவை அந்தந்த அவயத்திற்கு ஏற்ப பிரத்யேகமானவை. இவை வேறு அவயங்களுக்கு சென்று விட்டால் குழப்பம் தான். உதாரணமாக தலை முடி செல் கண்ணுக்குள் புகுந்து விட்டால், கண்களிலிருந்து முடி வளரும்.
எனவே ரத்தம் தனியாக செல்களை அணுகி, க்ளுகோஸை தள்ளி விட முடியாது. கூடவே செல்லும் இன்சுலின் தான் திறவுகோல். சாவி பூட்டைத் திறப்பது போல், இன்சுலின் உடல் செல் receptor களுடன் ஒட்டி இணைந்து, “தாள் திறவாய்” என்று செல்லின் அனுமதியுடன் குளுகோஸை செல்லுக்குள் செலுத்த உதவும்.
எனவே தான் இன்சுலின் குறைந்தாலோ அல்லது நின்று விட்டாலோ ரத்தத்தில் சர்க்கரை தேங்கி விடும்.
இன்சுலினின் முக்கியத்துவம்
நாம் உண்ணுகின்ற மாவுப் பொருள்கள் (Carbohydrate) ஜீரண நீர்களால் குளு கோஸாக மாற்றப்பட்டு இரத்த ஓட்டத்தை அடைகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுகோஸின் அளவு உயருகிறது. இந்த குளுகோஸானது உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களுக்கும் கிடைப்பதற்கு இன்சுலின் வகை செய்கிறது. அத்துடன் நில்லாது செல்கள் குளுகோஸைக் கிரகித்துக் கொண்டு சக்தி பெற இன்சுலின் ஒரு ஊக்கியாக இருந்து உதவுகிறது.
இந்த மாற்றம் நிகழ்கின்ற போது தான் செல்களுக்கு வெப்பமும், சக்தியும் கிடைக்கிறது. தேவைக்கு அதிகமான குளுகோஸ் இரத்த ஒட்டத்தில் இருக்கின்ற போது இன்சுலினானது இந்த உபரி குளுகோஸை, கிளைக்கோஜனாக (Glycogen) மாற்றி கல்லீரல் மற்றும் தசைகளில் சேமித்து வைக்க உதவுகிறது. அத்துடனின்றி உடலில் தேவை ஏற்படுகின்ற போது தேவைக் கேற்றபடி கல்லீரல் கிளைக் கோஜனைக் குளுகோஸாக மாற்றி உடலினுள் அனுப்பி வைக்கிறது. இது மட்டுமின்றிப் புரதம் மற்றும் கொழுப்புப் பொருள்களின் வளர்சிதை (Metabolism) மாற்றங்களிலும் இன்சுலின் பெரும்பங்கு வகிக்கிறது. உடலினுள் கிரகிக்கப்பட்ட கொழுப்பினை உருமாற்றித் திரும்பவும் கொழுப்பாக்கி உடல் தசைகளில் சேமித்து வைக்க இன்சுலின் பெரிதும் உதவுகிறது. இந்தக் கொழுப்பு உடலினுள் கரைந்து விடாமல் இருக்கச் செய்வதும் இன்சுலினே. மேலும் புரதப் பொருள்கள் உடலினுள் சேர்வதற்கும், தினசரி உழைப்பில் ஏற்படுகின்ற புரத இழப்பை ஈடு செய்வதற்கும் இன்சுலின் உதவுகிறது. இவை மட்டுமின்றி இன்னும் சரியாக உறுதி செய்யப்படாத பற்பல நுண்ணிய செயல்களையும் இன்சுலின் செய்கிறது.
குறிப்பாகச் சொன்னால் இரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்தி சரியான அளவில் வைத்திருக்கும் பணியைச் செய்வது இன்சுலின் தான். அத்துடன் கல்லீரலிலிருந்து தசைகளுக்கும், திசுக்களுக்கும் குளுகோஸ் எடுத்துச் செல்லப்படுவதை கூட்டியும் குறைத்தும் இன்சுலின் கட்டுப்படுத்துகிறது.
இத்தகைய பெரும் பணியினை செய்கின்ற இன்சுலின் உடலில் போதிய அளவு சுரக்கப்படாமல் பற்றாக்குறை ஏற்படுகின்ற போது செல்கள் மற்றும் திசுக்களின் சர்க்கரையைப் பெற்றுப் பயன்படுத்தும் திறன் குறைகிறது. குளுகோஸ் செல்களை சென்றடைந்த போதும் செல்களால் கிரகிக்கப்பட்டு எரிக்கப்படாமல் போவதால் இந்த குளுகோஸ் திரும்பவும் இரத்தத்துடன் கலந்து இரத்தச் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடுகிறது. சாதாரணமாக சுமார் 100 மி.லி. இரத்தத்தில் 180 மி.கி. சர்க்கரை காணப்படும் போது உபரி சர்க்கரையானது சிறுநீரின் மூலமாக வெளியேற ஆரம்பிக்கிறது.
இவ்வாறு சிறுநீர் மூலமாக சர்க்கரை வெளியேறுவது தவிர்க்கப்படாமல் போகும் போது மேலும் மேலும் உடலிலுள்ள கொழுப்பு சிதை மாற்றம் அடைந்து குளுகோஸாக மாற்றப்பட்டு இரத்தத்தை வந்தடைகிறது. இதுவும் சரிவர எரிக்கப்பட்டு கிரகிக்கப்படாமையால் இரத்தச் சர்க்கரை மேலும் அதிகமாகிறது. கொழுப்பு சிதை மாற்றம் அடைகின்ற போது Ketone bodies என்னும் பொருள்கள் சிறுநீரில் காணப்பட ஆரம்பிக்கின்றன. இது அதிகரிக்கின்ற போது, உடலில் அமில காரவிகிதம் மாறுபட்டு மேலும் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து நீரிழிவு மயக்கம் (Coma) என்ற நிலை ஏற்படலாம். உடலின் உள்ள பல செல்களுக்கு ரத்தத்தின் மூலம் குளூக்கோஸ் சக்தியை சேர்ப்பது இன்சுலின். இதற்கு விதிவிலக்கு கொழுப்பு செல்களும், மத்திய நரம்பு மண்டல செல்களும்.
எனவே இன்சுலின் குறைபாடு அல்லது இன்சுலினின் புகு வாய்கள் (receptors) செயலற்று போவது, டயாபடீஸீக்கு முக்கிய காரணம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தோல் (Skin) மாற்றமும் - நோய்களும் - தீர்வுகளும்!
» பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை - ஷர்மா
» பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை - ஷர்மா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum