தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடக்கும் கால்களின் விவரங்கள் நடப்பதற்கு நமது கால்கள் தயாரா?

Go down

 நடக்கும் கால்களின் விவரங்கள் நடப்பதற்கு நமது கால்கள் தயாரா?   Empty நடக்கும் கால்களின் விவரங்கள் நடப்பதற்கு நமது கால்கள் தயாரா?

Post  ishwarya Thu Feb 28, 2013 2:45 pm

"வாக்கு மனம் ஒன்றுபட்ட வார்த்தை அல்லால் வெவ்வேறாய்ப் போக்குடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே... 378 தாயுமானவர்
காலங்காலமாக, தினமும் நடந்து பழகியவர்கள் கால்களைப் பற்றி அதிகம் சிரத்தை, கவனிப்பு மேற்கொள்ளத் தேவையில்லை. ஆனால், பிணிகள் தாக்கத்தால், நோய் குறைவதற்காக நடையைப் பயிற்சியாக மேற்கொள்பவர்கள் நமது கால்களின் வலிமை, அதன் சக்தி, நடக்கும் தன்மை அனைத்தையும் அறிய வேண்டும்.

ஆரம்ப நிலை பயிற்சியாளர்களுக்கும் கால்கள் கவனிப்பு, பராமரிப்பு அவசியம் தேவை தினமும் நடக்கத்தயாராகும் முன் கால்களை சிறப்பாகச் சரியாக கவனிக்க வேண்டும். நடையில் தொடை எலும்புகள், மூட்டுகள், கென்டைக்கால் எலும்புகள், பாத எலும்புகள் மிக முக்கியத்துவம் வகிக்கின்றன முழங்கால், மணிக்கட்டு, முழங்கைகளை கீழ்மூட்டுகள் (பிவீஸீரீமீ யிஷீவீஸீts) என்கிறோம் இவைகள் தாராளமாக அசையும் மூட்டுகள். இவ்வகை எலும்புகள் வலிமையும், வனப்பும், அதிக நடை அழுத்தத்தை (மினீஜீணீநீt லிஷீணீபீ) தாங்கும் வல்லமையும் பெற வேண்டும்.

பிட்யூட்டரி சுரப்பி, அதன் சுரப்பு நீரால் எலும்புகளின் வளர்ச்சி, வனப்பு, சக்தி மேம்படுத்த உதவிடுகிறது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்துகள் எலும்புகளின் வளர்ச்சி, உறுதிக்கும் துணை புரிகின்றன. கால்சியம் உடலில் தன்மயமாக விட்டமின் 'டி’ மிக அவசியம். கால்சியத்தை பலர் மாத்திரை வடிவில் செயற்கை முறையில், இரசாயன வடிவில் எடுக்கின்றனர் இது தவறான அணுகுமுறை. உணவின் மூலம் கிடைக்கும் கால்சியம், சூரிய ஒளி மூலம் கிடைக்கும் விட்டமின் 'டி’ மிக சிறப்பானது.

அதன் மூலம் இவைகளைப் பெறும் வழியை, உத்தியை அறிந்து கடைப்பிடிக்க வேண்டும். நமது கால்கள் தொடர்ந்து 300 மீட்டராவது சிரமமில்லாமல் இயல்பாக நடக்கும் வல்லமை இல்லாவிடில் நாம் உடனடியாக நல்ல மருத்துவரை அணுகிட வேண்டும். புதிதாக நடப்பவர்களுக்கு தொடை சதைகள் கூட பிதுங்கி உரசி புண்ணாகிவிடும். இரண்டு அசையும் எலும்புகளை இணைக்கும் இடத்தை மூட்டுகள் என்கிறோம். மூட்டுகள் இரு எலும்புத் தசை நார்கள் மூலம் உருவாகி இணைக்கப்படுகிறது.

இத்தசைநார்களின் உட்புறம் சினோவியல் மெம்பிரேன் உள்ளது நடக்கும் போது, குதிக்கும்போது, அசையும் போது ஏற்படும் அழுத்த, அதிர்வு உராய்வைத் தடுக்க எலும்புகளுக்கு இடையில் மெல்லி குருத்தெலும்பு (சிணீக்ஷீtவீறீமீரீமீ) உள்ளது சினோவியல் மெம்பிரேனில் சுரக்கும் திரவம் இவ்மெல்லிய குருத்தெலும்பிற்கு வழவழப்பு, வனப்பு, சக்தி, சத்துக்களை வழங்குகிறது. நமது உடலில் மொத்த 206 எலும்புகள் உள்ளது அவற்றில் 20% விழுக்காடு நீர் உள்ளது எலும்புகளுக்கு புரதம் மிக அவசியம்.

சிஷீறீறீமீரீமீஸீ என்ற பொருளால் எலும்பு உருவாகிறது புரதம் எலும்பை மிருதுவாக்கவும், கால்சியம், மனரல்ஸ் கடினத் தன்மைக்கும் உறுதிக்கும் பயன்படுகிறது நமது தினசரி கால்சியத் தேவை 1000 மி.கிராம் ஆகும். எலும்பின் உள்ளே உள்ள மஜ்ஜையில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன எலும்புகள் (கிறீளீணீறீவீஸீமீ) காரத்தன்மை உடையது. வாழ்வில் நாம் 1 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கிறோம்.

தினமும் 10000 பத்தாயிரம் நடைகளை (ஷிtமீஜீ) (அடிகளை) நமது கால்கள் எடுத்து, தூக்கி நடக்கிறது.
கால்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்க, நரம்பு முறுக்கு (க்ஷிமீக்ஷீவீநீஷீsமீஸ்மீவீஸீ) ஏற்படாமல் இருக்க நடைப்பயிற்சி, நடத்தல், நடை பயணம் மிக அவசியம்..

"நமது நடையை நாம் தடைசெய்தால்

நமது நோயை எந்த மருத்துவராலும் சீர் செய்ய முடியாது. இயலாது." கால் எலும்புகள் ஒரு காரின் எடையைக் கூடத் தாங்கும் வல்லமை பெற்றுள்ளது கால்சியம் நரம்புகளைத் தூண்டுதல், இரத்தம் உறைதல், தசை சுருங்குதல், இதயத்துடிப்பு பணிகளையும் கணிக்கிறது இரத்தத்தில் கால்சியம் 1 கிராம் அளவில் உள்ளது.
நமது எலும்புகள் சாகாவரம் பெற்றவை. அவ்வளவு எளிதில் சிதலமடையாது அதை பாதுகாக்க நடையால் இயலும்.
பெட்டிச் செய்தி:
உலாவுதல் வேறு, நடத்தல் வேறு, நடைப்பயிற்சி வேறு போட்டி நடைப்பயிற்சி வேறு நடத்தல் என்பது நாம் சாதாரண பணியில், வாழ்வில், இயங்குவதில், கடைக்குச் சென்று வருவது, விழாக்கள், விசேஷசங்கள், பேங்க் இவைகளுக்கு வண்டி, வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து நடப்பது பொழுதுபோக்காக இயற்கையை ரசித்துச் செல்லல் உலாவுதல். இவ்வகை நடையை தவிர நடைப்பயிற்சிக்காக நேரம் ஒதுக்கி காலையிலோ, மாலையிலோ 20 முதல் 30 நிமிடம் ஆரோக்கியத்தின் பொருட்டோ, பிணிகள் விலகும் பொருட்டோ, உடல் எடை, தொப்பை குறையும் பொருட்டோ நடப்பதை நடைப்பயிற்சி என்கிறோம். மிதமான நடைபோதுமானது போட்டி நடை என்பது அதிவேக நடை அல்லது மெது ஓட்டத்திற்கு சமமாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum