தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மென்மையான கை கால்களின் அழகுக்கு

Go down

 மென்மையான கை கால்களின் அழகுக்கு Empty மென்மையான கை கால்களின் அழகுக்கு

Post  ishwarya Sat Feb 23, 2013 12:17 pm

கடினமான பல வேலைகளை கைகளைக் கொண்டுதான் செய்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒரு நாளில் சில நிமிடங்களாவது கைகளை அக்கறை எடுத்துக் கவனிக்கிறோம்.

கைகளைப் பராமரிக்க:
வீட்டில் உபயோகப்படுத்தும் சாதாரண தேங்காய் எண்ணெய், அல்லது வெண்ணெய் போதும். இதை அவ்வப்போது தேய்த்து வந்தாலே, கைகளில் சுருக்கங்கள் வராது.
நிறைய பேருக்க கைகள் கடினமாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும். இதையும் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே சிகிச்சை செய்து தீர்வு காணலாம்.

கை மிருதுவாக:
கிளிசரின் & ஒரு டீஸ்பூன்
பன்னீர் & ஒரு டீஸ்பூன்
அரோமா எண்ணெய் & 2 சொட்டு கலந்து கைகளில் மசாஜ் செய்து அப்படியே விடலாம். வாசலினை அவ்வப்போது கைகளில் தடவி வரலாம்.

சொரசொரப்பான கைகளுக்கு:
லிக்யூட் சோப் & 2 ஸ்பூன்
நைசாக சலித்த மணல் & அரை டீஸ்பூன்
இவை கலந்து கைகளில் தேய்த்து, மசாஜ் செய்து கழுவலாம்.
அரை கப் தயிரை, 5 நிமிடங்கள் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

அதிகமாக வியர்க்கும் கைகளுக்கு:
ஓடிகொலோன் & 2 டீஸ்பூன்
லிக்யூட் பாரபின் & 1 டீஸ்பூன்
சேர்த்து கைகளில் தடவி, 10 நிமிடம் கழித்துக் கழுவினால் வியர்க்காது, கையும் மென்மையாகும்.
விரல்களின் பளபளப்பிற்கு
கை விரல்களை விளக்கெண்ணெயில் 10 நிமிடம் வைத்திருந்தால் விரல் பளபளப்பாகும்.
தேன் நிரம்பிய கிண்ணத்திலும் விரல்களை நனைக்கலாம்.
கைகளை இறுக்கமாக மூடிமூடித் திறக்கவும். இதை 10 நிமிடங்கள் செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து கை பளபளப்பாகும்.

நகங்கள் உடையாமலிருக்க:
ஒரு கப் ஆலிவ் எண்ணெயை, லேசாக சூடாக்கி கைகளை அதில் வைத்து, இரண்டு நிமிடம் நகங்களை மசாஜ் செய்து பஞ்சால் துடைக்கவும்.
முல்தானி மெட்டி & 2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு & 5 சொட்டுகள்
பன்னீர் & 2 டீஸ்பூன்
ஆரஞ்சுப் பழச்சாறு & 1 டீஸ்பூன்
கிளிசரின், தேன் & சில துளிகள்
இவை கலந்து பிரஷ்ஷால் கைகளில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி, குளிர்ந்த நீரில் கழுவவும்.

வெளுத்துப் போன நகங்களுக்கு:
சில துளிகள் எலுமிச்சம்பழச் சாறை, ஒரு பிரஷ்ஷில் நனைத்து விரல் நகங்களில் தடவி, சில நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.

நகச் சுத்திக்கு:
ஆன்ட்டி ஃபங்கஸ் ஆயின்மென்ட்டை இரு தினங்கள் போடவும்.

நீளமாக நகர் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு
வெதுவெதுப்பான நீரில் டெட்டால், ஷாம்பூ சிறிதளவு கலக்கவும். அத்துடன் சில துளி அரோமா எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் சேர்த்து, விரல்களை வைத்திருந்தால் நகம் சுத்தமாகி பளபளப்பாகும். சோர்வு நீங்கும்.

நகங்களில் கிருமிகள் வராதிருக்க:
இளஞ்சூடான நீரில் துளசி, புதினா சேர்த்து 10 நிமிடங்கள் விரல்களை வைத்திருக்கவும். இதனால் நகத்தில் கிருமிகள் ஒட்டாது.

கைகளின் பளபளப்பிற்கு மேலும் ஒரு டிப்ஸ்:
சந்தனத் தூள்
அரிசி மாவு
சோயா மாவு
கஸ்தூரி மஞ்சள் பூவிலிருந்து எடுக்கப்படும் பொடி
இவை ஒவ்வொன்றிலும் 2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு பன்னீர், அல்லது தாழம்பூ நீருடன் கலந்து கைகளுக்குப் போட்டால் சொரசொரப்பு போய் பளபளப்பு வரும்.

கால்களும், பாதங்களும்:
கால்களையும், பாதங்களையும் அக்கறையுடன் கவனிக்க வில்லையெனில் பித்தவெடிப்பு, கால்வலி, கால் ஆணி போன்ற தொந்தரவுகள் ஏற்படம். பாதங்களில் இறந்த செல்கள் அதிகமாக சேர்வதாலேயே இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.கால்கள் சுத்தமாக வாரம் இருமுறை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் டெட்டால் கலந்து, அதில் 10 நிமிடங்கள் கால்களை ஊற வைத்தால் சுத்தமாகும்.கால் முட்டியில் கறுப்பாக இருந்தால் எலுமிச்சம் பழத் தோலை எடுத்து தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால், சொரசொரப்பு போகும்.

பித்தவெடிப்பிற்கு:
வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியைத் தூங்குவதற்கு முன் பாதங்களில் தடவலாம்.
எலுமிச்சம்பழத் தோல் & 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் & 10 மி.லி.
இவை கலந்து பேஸ்ட்டாக்கி பித்த வெடிப்பால் தடவினால் வெடிப்புகள் நீங்கி விடும்.
கால்களை தண்ணீரில் நனைத்துவிட்டு பியூமிஸ் கல்லால் தேய்க்கலாம். அல்லது பாதப் பராமரிப்புக்கென்றே உள்ள ஃபுட் ஃபைலால் பாதங்களைத் தேய்த்தால், இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.ஆரஞ்சு பழத்தோலை கால்களின் அடிப்பாகத்தில் தேய்த்து பத்து நிமிடம் ஊறிய பிறகு கழுவினால் பித்த வெடிப்பு போகும்.ஒரு அகலமான பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கால்களை ஊற வைத்தால், கால் வலி போய்விடும்.

கால் ஆணிக்கு:
ஒரு டீஸ்பூன் எருக்க இலைச் சாறுடன் 5 சொட்டு டீ ட்ரீ ஆயில் கலந்து ஆணி உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

கால் வெடிப்பு நீங்க எண்ணெய்:
கிளிசரின் & 50 மி.லி.
கடுகு எண்ணெய் & 10 மி.லி.
எலுமிச்சை பழச்சாறு & 20 சொட்டுக்கள்
இவை சேர்த்துக் கலக்கவும். இதை இரு கால்களிலும் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி விடலாம். இதை ஒரு வாரத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாக
» கால்களின் ஆல்பம் !
» கால்களின் அழகு மீன்களுக்கு தெரியும்
» மென்மையான கைகள் வேண்டுமா!
» நடக்கும் கால்களின் விவரங்கள் நடப்பதற்கு நமது கால்கள் தயாரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum