நீரிழிவு நோயாளிகளுக்கு காய்ச்சல், வந்தால்
Page 1 of 1

சாதாரண ஜலதோஷம், ஃப்ளு ஜுரம், தொற்றுநோய்கள், நோயில்லாதவர்களுக்கு தரும் வேதனையை விட டயாபடீஸ் நோயாளிக்கு அதிகம்.
உடல் எதிர்ப்புச் சக்திகள், நோயை போராடுவதற்காக வெளியேற்றும் ஹார்மோன்கள், ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். அமெரிக்க நீரிழிவு நோயாளிகள் சங்கம் காய்ச்சல் தாக்கும் போது கீழ்க்கண்ட ஆலோசனை தருகிறது.
ரத்த சர்க்கரை அளவை கண்காணித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
ஒரு டைரியில் உங்கள் சர்க்கரை அளவு, கேடோன் அளவு, எப்போது பரிசோதனைகள்
செய்யப்பட்டன என்பதை எல்லாம் குறித்து வைக்கவும்.
வருமுன் காப்பது நல்லது. வேறு நோய்கள் (ஜுரம்) வந்தால் என்ன செய்வது என்று முன்பே உங்கள் டாக்டரிடம் கேட்டு தயாராக இருங்கள்.
ஜுரம் அல்லது அதிக உபாதைகள் நீடித்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது கடினமாகி விடும்.
இதர யோசனைகள்
அடிக்கடி திரவ பதார்த்தங்களை உட்கொள்ளுங்கள்
நீங்கள் மாத்திரைகள் மட்டும் சாப்பிட்டு வந்தால், நோயின் போது இன்சுலீன் ஊசி தேவைப்டலாம்.
நீரிழிவுக்கேற்ற பத்திய உணவை மேற்கொள்ள முடியாமல் போனால் எளிதில் ஜீரணமாகும் சூப், கஞ்சி இவற்றை உட்கொள்ளவும்.
நீரிழிவு – யுனானி மருத்துவம்
யுனானி மருத்துவர்கள் முழுமையான சிகிச்சை முறை நீரிழிவு நோய்க்கு தேவை என கருதுகின்றனர். பத்திய உணவு முறை, உடற்பயிற்சி இவற்றின் தேவையை யுனானி வைத்தியம் வலியுறுத்துகிறது. உடற்பயிற்சியால் உண்டாகும் வேர்வையில் சர்க்கரை வெளியேறும், அதனால் உடற்பயிற்சி தேவை என்கின்றனர் யுனானி மருத்துவர்கள்.
யுனானி வைத்தியம் சொல்வது – அதிக சர்க்கரை, இனிப்புகள், அரிசி, உருளைக் கிழங்கு போன்ற மாவுப்பொருட்களை தவிர்த்து, பாகல்காய், பீன்ஸ் இவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். கார்போ-ஹைடிரேட் இல்லாத உணவு, அதிக உடல் எடையை குறைக்க உதவும். இதனால் நீரிழிவு கட்டுப்படும்
யுனானி ஹகீம்கள் சில ப்ரத்யேக தைலங்களை சர்க்கரை வியாதிக்கு உபயோகிக்கின்றனர். இதனால் உடலின் ஹார்மோன்கள் சீராகி சமநிலையில் சுரக்கும். மிளகு, பெருஞ்சீரகம் போன்றவற்றால் தயாரிக்கப்படும் எண்ணைகள் கணையத்தை ஊக்குவிக்கின்றன. கேரட், யூகலிப்டஸ், வெந்தயம், எலுமிச்சை இவற்றிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணைகளால் செய்யப்படும், சிகிச்சை, இன்சுலீன் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்!
» நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து!
» நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்
» நீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று உணவு வகைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum