உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
Page 1 of 1
உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
கோவை ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தின் முதுகுதண்டு, முதுகு வளைவு, கால் உயரம் மற்றும் கால் வளைவு சீரமைப்பு நிபுணர் டாக்டர் ஈஸ்வர் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு;
சமீபத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போது கால் வளைந்திருந்தது. டாக்டரிடம் கேட்டபோது கால் வளரும் போது சரியாகி விடும் என்றார். இதற்கு தீர்வு உள்ளதா?
குழந்தை பிறந்தவுடன் கால் வளைந்திருப்பது மரபணு சார்ந்த பாதிப்பாக இருக்கலாம். அதே சமயம் ஒவ்வொரு காலிற்கும் வித்தியாசம் இருந்தால் அதை உடனே கவனிக்க வேண்டும். பாதம் உள்பக்கமாக வளைந்திருத்தால் வளைகால் பிரச்னையாக இருக்கலாம். இதுபோன்ற பிரச்னைக்கு பிறந்த மறுநாளே சிகிச்சை எடுத்து 6 மாதங்களுக்குள் சரி செய்து விடலாம். பின்பு 18 வயது வரை காலணி அணிந்து கவனித்து வரவேண்டும்.
வலது, இடது கால் இடையே 5 மி.மீட்டருக்கு குறைவான வித்தியாசம் இருந்தால் கூட பிரச்னை ஏற்படும் என்கிறார்கள். எனக்கு இயல்பாகவே கால் உயரம் வேறுபாடாக இருக்கிறது. எனக்கு 25 வயதாகி விட்டது. எதிர்காலத்தில் பாதிப்பு வருமா ?
2 செ.மீ. உயரம் வரை காலணி உபயோகித்து உயரத்தை சரி செய்யலாம். 4 செ.மீக்கு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் மூட்டு, இடுப்பு தேய்மானம் அடைவதற்கு வாய்ப்பிருக்கிறது.
நான் குள்ளமாக இருக்கிறேன். உடற்பயிற்சி மூலமாக சில செ.மீ உயரமாக முயற்சிக்கிறேன். கால்களுக்கு அதிக பயிற்சி தருகிறேன். இப்படி செய்தால் கால் வளைந்து விடுமா?
எந்த ஒரு உடற்பயிற்சியை செய்தாலும் டாக்டரிடமோ, பிஸியோதெரபிஸ்டிடமோ அல்லது உடற்பயிற்சி நிபுணர்களிடமோ ஆலோசனை பெற்று பின் அந்த உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. ஏனென்றால் ஒவ்வொன்றிற்கும் தனி உடற்பயிற்சி உள்ளது. நீங்களாக ஏதெனுமொரு உடற்பயிற்சியை தவறாக செய்யும் பட்சத்தில் மூட்டு, இடுப்பு தேய்மானம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் 18 வயது வரை உடற்பயிற்சி செய்தால் உயரமாவதற்கு வாய்ப்பிருக்கிறது. மிகவும் குள்ளமாக இருப்பவர்களுக்கு இலிசாரோ மூலம் கால் உயரத்தை சற்று உயர்த்த வாய்ப்பிருக்கிறது.
எனக்கு 50 வயது. கால் உயர வேறுபாடு இருக்கிறது. முதுகு வலிக்கிறது. வலி தாங்க முடியவில்லை, என்ன செய்வது ?
கால் உயர வேறுபாடு அதிகமாக இருந்தால் முதுகு மற்றும் இடுப்பு எலும்பு தேய்மானமடைய வாய்ப்பிருக்கிறது. அலட்சியமாக விட்டுவிட்டால் தேய்மானம் தீவிரமடைந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். சில சமயங்களில் ஸ்கோலியோசிஸ் எனப்படும் முதுகு வளைவு பிரச்னை கூட வந்துவிடலாம். எனவே அலட்சியமாக விட்டுவிடாமல் டாக்டரை அணுகவும். முதுகு வலி மற்றும் கால் உயரம் சீரமைப்புக்கு தனித்தனியாக சிகிச்சை எடுக்கவேண்டும்.
கால் சாய்வாக இருக்கிறது. நடக்கும் போது இது தெரிகிறது. இதை சரி செய்ய முடியுமா, என்னால் அதிக தொகை செலவிட முடியாது.
இலிசாரோ என்றால் என்ன?
இலிசாரோ என்பது ரஷ்ய டாக்டரால் கண்டுபிடிக்கப்பட்ட நவீன சிகிச்சை முறை. இந்த மருத்துவமுறையானது எலும்பு உடைந்து போதல், பிறவி ஊனம், கால் உயரம் சீரமைப்பு, கால் வளைவு மற்றும் கால் எலும்பில் சீழ் பிடித்து எலும்பு அரித்தல் போன்ற பிரச்னைகளை சரிசெய்ய பயன்படுகிறது. இதன் அமைப்பு காலிற்கு வெளியே கவசம் போன்றிருக்கும். அதில் உள்ள ஊசிபோன்ற இணைப்பு எலும்பினுள் பொருத்தப்பட்டிருக்கும். அறுவை சிகிச்சை செய்து எலும்பினுள் தகடு வைப்பதற்கு பதில் சிறிய பிளவு மட்டும் ஏற்படுத்த செய்யப்படும் நவீன சிகிச்சை முறையாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உயரமாக உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா?
» காது குடையும் பழக்கம் ஆபத்தானதா?
» நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு?
» குழந்தைகள் உயரமாக வளர
» நாய்க் கடி ஆபத்தானதா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum