தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தையின்மைக்கு கேற்ற மருத்துவம்

Go down

குழந்தையின்மைக்கு கேற்ற மருத்துவம்  Empty குழந்தையின்மைக்கு கேற்ற மருத்துவம்

Post  ishwarya Thu Feb 28, 2013 1:23 pm

உங்கள் ஆரம்ப பள்ளி நண்பர்களை நினைவு இருக்கிறதா... அப்படிப்பட்ட யாரையாவது சமீபத்தில் சந்தித்ததுண்டா ...பிரிந்து போன, மறந்து போன உறவுகளை பார்க்க விருப்பமா...இந்த கேள்விகள் எல்லாம் ஃபேஸ்புக் காலகட்டத்தில் தேவையே இல்லை. நீங்கள் மறந்தாலும் ஃபேஸ்புக், உங்களை, உங்கள் உறவுகளை, நண்பர்களை மறக்கவே மறக்காது.

அவர்களின் பதிவுகளை எல்லாம், அவர்கள் அன்றாடம் சேர்த்த போட்டோக்களை எல்லாம் அப்படியே பாதுகாத்து வைக்கும். அட, இப்படி ஒரு அருமையான ஃபேஸ்புக், நம் வாழ்க்கையில் ஒருவராக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அங்குதான் சிக்கலே. நண்பனா, எதிரியா..

ஃபேஸ்புக் நண்பனாக இருப்பதும், எதிரியாக மாறுவதும் அதை பயன்படுத்தும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. யாருக்கும் தெரியாது என்று பகிர்ந்து கொண்ட தனிப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தால், அது ஒரு காலத்தில் நமக்கே எதிரியாக பூதம் போல கிளம்பும்.

ஆம், பத்தாண்டுக்கு முன் இளைஞராக இருந்தபோது, நண்பர்கள், தோழிகளுடன் பகிர்ந்து கொண்ட வார்த்தை பரிவர்த்தனைகள், போட்டோக்கள் எல்லாவற்றையும் அவரவர் வேண்டுமானால் மறந்து விடலாம். ஆனால், ஃபேஸ்புக் மறப்பதில்லை. சமீபத்தில் அது வெளியிட்ட ஒரு அறிவிப்பு, நேற்றைய இளைஞர்கள், அதாவது, இன்றைய நடுத்தர, திருமணமான, ஒரு சிறிய குடும்பத்து தலைவர்களை பயமுறுத்த ஆரம்பித்து விட்டது.

போட்டுக் கொடுக்கிறதா பிறந்த குழந்தை மட்டும்தான் இன்னும் ஃபேஸ்புக்கில் சேரவில்லை. மூன்றாவது படிக்கும் பிஞ்சுகள் கூட ஃபேஸ்புக்கில் பதிவு செய்து, நண்பர்களுடன் சேட்டிங் செய்வது நடக்கிறது. பிளஸ் 2 படிக்கும் போது, ஃபேஸ்புக்கை கரைத்து குடித்து விடுகின்றனர். அதில் தங்களின் தனிப்பட்ட அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது, போட்டோக்களை பகிர்ந்து கொள்வது எல்லாம் விளையாட்டாகவே நடக்கிறது.

கல்லூரி நாட்களிலும் இந்த பரிவர்த்தனைகள் பெரிதாக பிரச்னை தருவதில்லை. நண்பர்கள் மாறுகின்றனர். அனுபவங்கள் மாறுகின்றன. காதல் முதல் உலக விஷயங்கள் வரை அதில் அலசப்படுகின்றன. வேலைக்கு போன பின்னும் கூட, பலரும் ஃபேஸ்புக்கில்தான் காலையில் கண்விழிக்கின்றனர். அப்போதும் அவர்களுக்கு பிரச்னை தருவதில்லை. ஆனால், இப்போது நடுத்தர வயதை தாண்டிய, திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் பலருக்கும் பெரும் தலைவலியாகி வருகிறது ஃபேஸ்புக்.

நான் ஃபேஸ்புக்கில் இல்லை சமீபத்தில் ஃபேஸ்புக் நிர்வாகம், புதிய பகுதி பற்றிய ஒர் அறிவிப்பை வெளியிட்டது. டைம்லைன் என்ற பகுதிதான் அது. அதாவது, பழைய விஷயங்களை அறிந்து கொள்ளும் வசதி. ஒருவரின் பத்தாண்டுக்கு முந்தைய நண்பர்கள், தோழிகளுடன் பரிமாறிய அனுபவங்கள், போட்டோக்களை மீண்டும் பார்க்க முடியும். படிக்க முடியும்.

இது நல்லது தானே; பழைய நண்பர்களை தேடிப்பிடிக்கலாமே என்று தோன்றலாம். இந்த நல்ல நினைப்பில்தான் ஃபேஸ்புக்கும் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், திருமணத்துக்கு முன்பு அந்தரங்க விஷயங்களை, போட்டோக்களை எல்லாம் பகிர்ந்து கொண்ட சிலருக்கு இந்த வசதி பெரும் பூதமாக கிளம்பியுள்ளது. இதன் விளைவுதான், நான் ஃபேஸ்புக்கில் இல்லை என்று அறிவித்து, தங்களைப் பற்றிய விவரங்களை எல்லாம் அழிக்க டெலிட் பட்டனை அழுத்தி விடுகின்றனர்.

80 கோடியில் 4 கோடி ஃபேஸ்புக்கில் உறுப்பினராக உள்ளவர்களின் எண்ணிக்கை உலகம் தழுவிய நிலையில் 80 கோடி. அதில் நான்கு கோடி இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்களில் பலரும் ஐம்பது வயதை தாண்டியும் கூட, தொடர்ந்து தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பரிமாற்றம் செய்து கொண்டு வருகின்றனர்.

ஆனால், அவர்கள் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை. ஆரோக்கியமான விஷயங்கள், குடும்ப விசேஷ படங்களை, சுற்றுலா படங்களைதான் பகிர்ந்து கொள்கின்றனர். இப்படிப்பட்ட பரிவர்த்தனைகள் இருப்பதால், இவர்களின் உறவு, நட்பு வட்டம் இன்னும் அப்படியே உள்ளது. எந்தப் பிரச்னையும் அவர்கள் சந்தித்ததே இல்லை.

ஆனால், மற்ற சிலருக்கோ, திருமணத்துக்கு முன்பு, கல்லூரி நாட்களில் பழகிய விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டு, போட்டோக்களை பதிவு செய்ததன் விளைவு, இப்போது அவர்களை பயமுறுத்துகிறது. இவர்கள்தான் அவசர அவசரமாக தங்களை ஃபேஸ்புக்கில் இருந்து விலக்கி கொண்டு வருகின்றனர்.

ஆபத்து யாரிடம்

ஃபேஸ்புக் நல்லதா கெட்டதா என்று ஆராய்வதை விட, அதை பயன்படுத்துவோர் சரியான முறையில்தான் பயன்படுத்துகிறார்களா என அவர்களே ஆராய்ந்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. நேரில் பகிர்ந்து கொள்ள கூச்சப்படும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள, போட்டோக்களை பதிவு செய்ய ஃபேஸ்புக் அனுமதி அளிப்பது உண்மைதான். அதை தவறான வழியில் பயன்படுத்துவது, நாம்தான்.
இதை உணராமல் -

1. ஃபேஸ்புக் நல்லதல்ல; மனஅழுத்தத்தை தருகிறது.
2. ஃபேஸ்புக் அடிக்ட் ஆக்குகிறது; மணிக்கணக்கில் வீணாகிறது.
3. பழைய விஷயங்களை கிளறி தற்கொலைக்கு தூண்டுகிறது...
என்றெல்லாம் சொல்வது எப்படி சரியாகும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum