நம்பவே முடியாத ‘வலி’கள்!
Page 1 of 1
நம்பவே முடியாத ‘வலி’கள்!
வலி இல்லாத மனிதர்கள்தான் யார்? தலை வலி, கால் வலி, முதுகுவலி, மூட்டுவலி என ஒவ்வொருவருக்கு ஒரு வலி! இந்த வலிகள் எல்லாம் சகஜமானவை. காரணங்களுடன் வருபவை. காரணமே தெரியாமல் வருகிற வினோத வலிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிக்னல் கோளாறுகளால் வரக்கூடிய அத்தகைய வினோத வலிகளைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.
‘‘வினோதமான வலிகள்ல முக்கியமானது ‘கற்பனைத் தோற்ற வலி’. 15 முதல் 30 சதவிகித மக்களுக்கு இந்த பாதிப்பு இருக்கு. ஏதோ ஒரு விபத்துல ஒருத்தர் தன் கை அல்லது கால் விரலை இழந்திடறார்னு வச்சுப்போம். இல்லாத அந்த விரலில் வலி இருக்கிறதா உணர்வதுதான் ‘கற்பனைத் தோற்ற வலி’.
இல்லாத உடல் உறுப்பு அல்லது துண்டிக்கப்பட்ட உடல் உறுப்புல வலியிருக்கிறதா சொல்றதால, அப்படிச் சொல்றவங்களை, மத்தவங்க நம்ப மாட்டாங்க. சாதாரண வலி நிவாரண மருந்து, மாத்திரைகளில் இவர்களுக்குக் குணம் கிடைக்காது. அடுத்தது ‘சி.ஆர்.பி.எஸ்’ (காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெயின் சின்ட்ரோம்)னு சொல்லப்படற வலி.
நரம்புகளில் அடிபடறதால வரக்கூடியது இது. ஏதோ விபத்துல, எலும்பு முறிஞ்சு, காயம் ஏற்பட்டிருக்கும். 6 மாதம் கழிச்சு, காயமெல்லாம் சரியான பிறகு வலி இருக்கிறதா சொல்றதால, இவங்களையும் வீட்டு உறுப்பினர்களும் நண்பர்களும் நம்பாம, மன நோயாளிகள் மாதிரியே பார்ப்பாங்க. ஆனா, இவங்களுக்கோ, தாங்க முடியாத தீவிர வலியும், கை, கால் வீக்கமும்கூட இருக்கும். சாதாரண வேலையைக்கூட செய்ய முடியாது.
லேசா துணி பட்டா கூட எரிச்சலை உணர்வாங்க. மூணாவதா, தழும்பு வலி. பாதிக்கப்பட்டவங்களுக்கு ஏதோ ஒரு அறுவை சிகிச்சை நடந்திருக்கும். குடல்வால், ஹெர்னியா, பித்தப்பைனு ஏதோ ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டு, அந்த இடத்துல தழும்புகள் உருவாகியிருக்கும். 6 மாதம் கழிச்சு, அந்தத் தழும்புகள்ல வலியை உணர்வாங்க. ஆபரேஷன் செய்ததுலதான் ஏதோ கோளாறு நடந்திருக்கணும்னு சந்தேகப்படறவங்க அதிகம்.
ஆனா, அது அப்படியில்லை. நரம்புகளில் சிக்னல் கோளாறு உண்டாவதால வரக்கூடியது. நோய் சரியானாலும், தழும்புகளில் வலி இருப்பதா சொல்றதால, இவங்களையும், மத்தவங்க நம்ப மாட்டாங்க. வலி நிவாரண சிகிச்சை மையங்களில்தான் இது போன்ற வினோத வலிகளைக் கண்டுபிடிக்கவும், சரியான சிகிச்சையளிக்கவும் முடியும்.
வலி நிர்வாக மருத்துவம்னு ஒரு புதிய துறை இருக்கிறதே மக்களுக்குத் தெரியறதில்லை. வலியிலேருந்து விடுபட, சுய மருத்துவம் செய்யறதோ, வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கறதோ ஆபத்தானது. இன்னிக்கு வலி நிர்வாக மருத்துவத்துல, அதிநவீன வலி நிவாரண சிகிச்சை முறைகள் மூலம், எப்படிப்பட்ட வலிகளுக்கும் குணம் உண்டு. சரியான நேரத்துல பரிசோதனையும், தாமதிக்காத சிகிச்சையும் நிச்சயம் பலனளிக்கும்.’’

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கான்சர் என்னும் புற்று நோய்க்கு தீர்வா ? நம்பவே முடியவில்லை !
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
» மறக்க முடியாத மனிதர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum