கான்சர் என்னும் புற்று நோய்க்கு தீர்வா ? நம்பவே முடியவில்லை !
Page 1 of 1

புற்று நோயைக் குணப்படுத்த முடியும் என்று நாம் அறிந்தது உண்டு. இதனைக் குணப்படுத்த பல வழிகளும் உண்டு. ஆனால் முற்றாகக் குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விடையமாக இருந்து வந்துள்ளது. அதாவது கதிரியக்கம் கொண்டு, கடுமையான மருந்துவகைகளைப் பாவித்துமே கான்சருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. முதலில் கான்சர் என்றால் என்ன என்று சற்றுப் பார்ப்போம். அதன் பின்னர் இந்த நூற்றாண்டில் தற்போது நிகழ்ந்துள்ள சாதனையைச் சொன்னால் புரியும். அதுவும் 7 வயதுச் சிறுமி மீது மருத்துவர்கள் தற்போது மேற்கொண்ட வித்தியாசமான இரு சிகிச்சை, 100 வீதம் வெற்றியளித்துள்ளது என்றால் பாருங்களேன்.
புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது. கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு உருவாகும் செல்களை அழிக்க, மருத்துவர்கள் பெரும்பாடுபடுகிறார்கள். இதற்காகவே பல வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் உள்ள சில வைத்திய நிபுணர்கள், எமது உடலில் உள்ள வெள்ளை அணுக்களை கான்சர் செல்லுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, வெற்றிபெற்றுள்ளார்கள். அதாவது T செல் என்று அழைக்கப்படும் ஒருவகை செல்லை வெளியே எடுத்து, அதனை மாற்றி அது கான்சர் செல்களை தேடிக் கண்டு பிடித்து அழிக்கும் ஆற்றலைக் கொடுக்கிறார்கள். பின்னர் அதனை உடலில் உள்ள இரத்தத்தில் ஏற்றினால் போதும். சுற்றி விட்ட பம்பரம்போல அது உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சென்று எங்கே எங்கே கான்சர் செல்கள் இருக்கிறதோ அதனை அழிக்கும். அதாவது கான்சர் செல்லை இந்த T செல்லுக்கு கண்டால் ஆகாது. அதுதான் மேட்டர். T செல்லானது கான்சர் செல்களை எப்போதும் ஒரு எதிரியாகவே பார்க்கும் வகையில், இவர்கள் ஜெனடிக் எஞ்சினியரிங் வேலை செய்துள்ளார்கள். இவ்வாறு கான்சரால் பாதிக்கப்பட்ட 7 வயதுக் குழந்தை ஒன்றுக்கு T செல்களை ஏற்றி, அக் குழந்தைக்கு இருந்த கான்சரை முற்றாகவே குணப்படுத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
தற்போது மேலதிகமாக 12 பேருக்கு, இதுபோன்று செய்துள்ளார்கள். அவர்கள் உடல் நிலை திடீரெனத் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். கான்சரில் பலவகையான கான்சர் இருக்கிறது. எனவே ஒவ்வொரு கான்சருக்கும், ஒவ்வொரு விதமான T செல்களை கண்டுபிடிக்கவேண்டி இருக்கும். அதுவும் விரைவில் வெளியில் வர இருக்கிறது. எனவே மனிதர்களை இவ்வளவு காலமாக அச்சுறுத்திவந்த கான்சர் என்னும் புற்றுநோய் இனி காணமல் போகலாம். மனித குலம் மன்ணில் நீண்ட காலம் வாழலாம். அதற்கான நம்பிக்கையும் வெளியாகியுள்ளது.
Share

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புற்று நோய்க்கு
» சோம்பல் புற்று நோய்க்கு வழி வகுக்கும்!

» விற்றமின் சி புற்று நோய்க்கு ஏற்றது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum