தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்கள் சோயா சாப்பிட்டால் பெண் தன்மை வருமா?

Go down

ஆண்கள் சோயா சாப்பிட்டால் பெண் தன்மை வருமா?  Empty ஆண்கள் சோயா சாப்பிட்டால் பெண் தன்மை வருமா?

Post  ishwarya Thu Feb 28, 2013 12:40 pm

கொழுப்பில்லாத, உன்னதமான புரதம், மூளைச்செயல்பாட்டைத் தூண்டுகிறது, புற்றுநோயைத் தடுக்கிறது என்றெல்லாம் கொண்டாடப்படும் சோயா, நமது அன்றாட உணவுகளில் இடம்பிடித்து விட்டது. சோயா பால், சோயா நூடூல்ஸ், சோயா உப்புமா, சோயா பிஸ்கட் என விதவிதமாக குவிகின்றன சோயா உணவுகள். இந்நிலையில், 'ஆண்கள் தொடர்ந்து சோயா சாப்பிட்டால் பாலியல் குறைபாடுகள் ஏற்படலாம்... ஆண் குழந்தைகளுக்கு பெண் தன்மை ஏற்படலாம்’ என்று எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் சென்னை டாக்டர் சி.வி.கிருஷ்ணன்.

65 வயது நிரம்பிய அனுபவசாலியான டாக்டர் சி.வி.கிருஷ்ணன், புகழ்பெற்ற சுரப்பியியல் நிபுணர். உலக மருத்துவ அமைப்புகளிலும் செயலாற்றியவர். உலகமே சிறந்த சத்துணவாகக் கருதும் சோயாவில் இப்படி ஒரு விபரீதமா என்றால் விழிகளைச் சுருக்கிக்கொண்டு விரிவாகப் பேசுகிறார் சி.வி.கிருஷ்ணன்.

‘‘சோயாவைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நமது உடலில் ஹார்மோன் செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ‘டெஸ்டோஸ்ட்ரோன்’ என்ற ஹார்மோன்தான் ஆண்தன்மையைத் தீர்மானிக்கிறது. ஆண்மை, செயல்பாடுகள், முடிவெடுத்தல், ஞாபகத்திறன், கற்பனை, பாலியல் செயல்பாடுகள் என ஆணுடலின் எல்லா இயக்கத்தையும் இதுதான் தீர்மானிக்கிறது.

ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் பெண் தன்மையைத் தீர்மானிக்கிறது. வேறுபட்ட உறுப்புகள், நாணம் உள்ளிட்ட உணர்வுகள் என பெண்மைக்குரிய அத்தனை இலக்கணங்களையும் எழுதுவது இந்த ஹார்மோன்தான்.

ஆணுக்குள் பெண் ஹார்மோனும், பெண்ணுக்குள் ஆணுக்குரிய ஹார்மோனும் மிகச் சிறிதளவு இருக்கின்றன. ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கு சரியான அளவில் ஹார்மோன் சுரப்பு அவசியம். அதிகமானால் பெண்களுக்கு தைராய்டு பிரச்னைகள், ஆஸ்துமா, அலர்ஜி, மார்புப்புற்றுநோய் ஏற்படலாம். ஆண்களுக்கு சிறுநீர்ப் பையின் வாய்ப்பகுதி வீங்கி அதனால் பல்வேறு விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் இயல்பாகவே குறைந்துவிடும். இதனால், எலும்புத் தேய்மானம், பருமன், தேவையில்லாத டென்ஷன், மனநெருக்கடி போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதேபோல ஆண்களுக்கும் மெனோபாஸ் பீரியட் உண்டு. தேவையில்லாத டென்ஷன், தேவையில்லாத சிந்தனை, மன உளைச்சல், பாலியலில் திருப்தியின்மை போன்றவை இதன் அறிகுறிகள். இந்நேரத்தில் ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்ட்ரோன்’ குறைந்துவிடும். இப்படிக் குறைவதை சிகிச்சை மூலம் எளிதாக சரிசெய்துவிட முடியும். காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதன்மூலமும் இழப்பைச் சரிசெய்யலாம்’’ என்கிற டாக்டர் கிருஷ்ணன், சோயாவைப் பற்றி சொல்லும் தகவல்கள் அதிர்ச்சி ரகம்!

‘‘சோயாவில் புரதத்தோடு சேர்ந்து இயற்கையான ஈஸ்ட்ரோஜனும் இருக்கிறது. மொனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் இழப்பு ஏற்படுவதால், அப்போது அவர்கள் சோயா சாப்பிடுவது நல்லது. ஆனால், பெண்களோ, ஆண்களோ... அன்றாடம் சோயாவை உணவில் சேர்த்துக்கொள்வது விபரீதத்தில்தான் முடியும். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக சோயா உணவுகள் கொடுக்கிறபோது, அவர்கள் உடலில் தேவைக்கு அதிகமாக ஈஸ்ட்ரோஜன் உருவாகிறது. இதனால் ‘டெஸ்டோஸ்ட்ரோன்’ சுரப்பில் சமநிலையின்மை ஏற்பட்டு, பெண்மைத்தன்மை உருவாக வாய்ப்புஉண்டு. மார்பு வளர்ச்சி, முடி வளராமை போன்ற விளைவுகள் ஏற்படலாம். செயல்பாடுகளில் நளினம் தோன்றலாம்...’’ என்கிறார் கிருஷ்ணன்.

இவரது கருத்தை இங்கிலாந்தின் ‘ஆக்ஸ்போர்டு ஜர்னல்’ ஆய்விதழும் சொல்கிறது. அதிகமாக சோயா உணவுகளைச் சாப்பிடும் ஆண்களுக்கு பாலியல் விருப்பம் வெகுவாகக் குறைந்துவிடுவதாகச் சொல்லும் அவ்விதழ், தொடர்ந்து சோயா சாப்பிடும் ஆண்களிடம் நடத்திய சோதனையில், அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.

‘‘நம் தட்பவெப்பத்துக்கும் வாழும் சூழ்நிலைக்கும் சோயா போன்ற உணவுகள் தேவையில்லை. நம்மூரில் கிடைக்கும் தானியங்களிலேயே எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத ஏராளமான புரதங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, நிலக்கடலை. சோயாவில் இருக்கிற புரதம் நிலக்கடையிலும் இருக்கிறது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களின் எதிர்காலத்தை சிதைத்துவிடக் கூடாது’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் கிருஷ்ணன்.

ஆனால், இந்தக் கருத்தை பொதுவாக ஊட்டச்சத்து நிபுணர்களும் வேறுசில மருத்துவர்களும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஒரு கிலோ சோயாவில் உள்ள புரதமானது, 5 லிட்டர் பால் அல்லது 1 கிலோ மாமிசம் அல்லது 24 முட்டைகளில் உள்ள புரதத்துக்குச் சமம்..’ என்கிறார்கள்.

“இது ஒரு இயற்கைப்பொருள் நேச்சுரல் ஈஸ்ட்ரோஜன் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. நம்மூரில் விளையும் உளுந்து, கொண்டைக்கடலையில் கூட ஈஸ்ட்ரோஜன் நிறைய இருக்கிறது. அதை சாப்பிடாமல் விட்டுவிட்டோமா?’’ என்று கேள்வி எழுப்புகிறார் டாக்டர் சிவராமன்.

இந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இருந்து டன் கணக்கில் சோயா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது. இதில் விபரீதம் என்னவென்றால், இந்நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தடையில்லை. இந்த எண்ணெய், மரபணு மாற்றப்பட்ட விதைகளில்தான் தயாராகிறது என்கிறார்கள். இதில் என்ன ஆபத்து ஒளிந்திருக்கிறதோ?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum