வருங்காலத்தை சரியாக நிர்ணயிப்போம்
Page 1 of 1
வருங்காலத்தை சரியாக நிர்ணயிப்போம்
அந்த காலத்தில் தாம்பத்யம் என்பது குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி என்று இருந்தது. தாம்பத்யம் என்பது ஒரு இருட்டறைக்குள் நிகழும் நிகழ்வாகவும் கருதப்பட்டது.
ஆனால் தற்போது பள்ளிப் பருவத்திலேயே தாம்பத்தியம் பற்றி பரவலாகப் பேசிக் கொள்ளும் அளவிற்கு தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விட்டன.
இன்றைய சமூகத்தினர் தாம்பத்தியம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய வயதிற்கு முன்கூட்டியே அறிந்து கொண்டு அதன் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.
அதீத ஆர்வமும், அதனை வெளிப்படுத்துவதற்கான வழியின்மையும் பல நேரங்களில் பிள்ளைகள் வழித்தவறி செல்ல வாய்ப்பாகிவிடுகிறது.
இதனால் தற்போது ஏற்பட்ட பெரும் பாதிப்புதான் ஓரினச் சேர்க்கை போன்றவையாகும். தங்களது நண்பர்களுடனும், தோழிகளுடனும் நட்பு ரீதியாகப் பழகும் பழக்கம், நாளடைவில் நான் இல்லாமல் நீ இல்லை, நீ இல்லாமல் நான் இல்லை என்ற அளவிற்குச் சென்று ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொண்டு அது ஓரினச் சேர்க்கை வரை சென்று விடுகிறது.
தாம்பத்யம் என்ற அன்பின் பரிமாற்றத்தை சில நண்பர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவும் ஆரம்பித்துவிடுகின்றனர். எனவே, இன்றைய இளைய சமுதாயம், வாழ்க்கையின் அடிப்படையை உணர்ந்து, அதற்கேற்ப தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வதுதான் சிறந்ததேத் தவிர, தங்களது போக்குக்கு ஏற்ப சமுதாயத்தை மாற்றிக் கொள்வது சிறந்த வழி அல்ல.
ஒரு சில நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் மருத்துவரை சந்தித்து, ஒருவரை வேறு பாலினமாக மாற்றும்படி கேட்டுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்து போன மருத்துவர், ஏன் என்று கேட்டதற்கு, நாங்கள் இருவரும் நெடுநாள் நண்பர்கள். எங்களால் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க முடியாது. எனவே, ஒருவரை மட்டும் வேறு பாலினமாக மாற்றிவிட்டால் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
உடனடியாக அவர்களுக்கு கவுன்சிலிங் தரப்பட்டு நல்ல முறையில் அறிவுரைக் கூறி அனுப்பி வைத்துள்ளனர் மருத்துவக் குழுவினர்.
இந்த உதாரணம் எதற்கு என்றால், வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு கண்ணீர் விடுவதுண்டு. சில தவறுகளை செய்யாமல் தப்பித்துவிட்டு சில ஆண்டுகள் கழித்து அந்த நிலையை நினைத்துப் பார்த்து நாமே சிரித்ததும் உண்டு.
கண்ணீர் விடுவதும், நினைத்துப் பார்த்து சிரிப்பதும் நம் கையில்தான் உள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிறுநீரகத்தை பாதுகாப்போம்
» ஈறுகளையும் சரியாக கவனியுங்கள்
» வாய் துர்நாற்றத்தைப் போக்க
» கண்களை பாதுகாப்போம்
» கண்களைப் பாதுகாப்போம்
» ஈறுகளையும் சரியாக கவனியுங்கள்
» வாய் துர்நாற்றத்தைப் போக்க
» கண்களை பாதுகாப்போம்
» கண்களைப் பாதுகாப்போம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum