தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆன்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை

Go down

ஆன்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை  Empty ஆன்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை

Post  meenu Thu Feb 28, 2013 11:43 am

FILE
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

வாழ்க்கை முறைகள்

புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

மூலிகைகள்

அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum