தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண் விழி விறைப்பு நோய்

Go down

கண் விழி விறைப்பு நோய்  Empty கண் விழி விறைப்பு நோய்

Post  meenu Wed Feb 27, 2013 2:47 pm

குளுக்கோமா என்ற கண் விழி விறைப்பு நோய்தான் நம் நாட்டில் பார்வையிழப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

குளுக்கோமா என்றால் என்ன?

நம் கண்களின் அமைப்பிலேயே ப்ளம்பிங் போல் குழாய் அமைப்புகள் உள்ளன. இந்த குழாய் அமைப்பானது கண்களின் கருவிழிப்பகுதிகள் மற்றும் லென்ஸ் ஆகியவற்றிற்கு யளூரநடிரள என்ற திரவத்தை எடுத்துச் செல்கிறது. இந்த ப்ளம்பிங் அமைப்பில் கோளாறுகள் ஏற்பட்டால், அதாவது திரவம் வரும் வழியிலோ அல்லது வெளியேறும் வழியிலோ தடை ஏற்பட்டால் கண்ணிற்குள் திரவத்தின் அழுத்தம் அதிகமாகும். ஆனால் இந்த திரவத்திற்கும் கண்ணீருக்கும் சம்பந்தம் இல்லை.

திரவத்தின் உற்பத்திக்கும், அது வெளியேறும் அளவிற்கும் இடையே ஏற்படும் சமனமின்மையால் அழுத்தம் கூடுகிறது. இதனால் விழிகளுக்குப் பின் உள்ள டியீவiஉ நேசஎந பாதிப்படைகிறது.

குளுக்கோமா யாருக்கு ஏற்படும்?

* 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
* குளுக்கோமா நோயாளிகளின் ரத்த உறவினர்களுக்கு
* அதிகிட்டப்பார்வை உள்ள நபர்களுக்கு (myopes)
* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு

குளுக்கோமா ஏற்படக் காரணம் என்ன?

முதற்கட்ட குளுக்கோமா நோய் ஏற்பட அடையாளம் காணக்கூடிய காரணம் எதுவும் இல்லை. பெரும்பாலும் மரபுக் கூறுகளால் இது ஏற்படுகிறது. கண்ணின் அமைப்பே சிலருக்கு சில வகை குளுக்கோமா நோயை தோற்றுவிக்கலாம்.

குளுக்கோமா நோய்களில் பல வகைகள் உண்டு.

1. முதற்கட்ட திறந்த கோண குளுக்கோமா

கண் திரவம் பாயும் வடிகால் போன்ற அமைப்பின் கோணம் பழுதடையும்போது கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் அதிகரிக்கும்.

2. முதற்கட்ட கோண மூடுதல் குளுக்கோமா

திரவ வடிகால் கோணம் சில சமயங்களில் திடீரென தடைபடும். அதாவது வடிகாலின் வாய்ப்பகுதியில் ஒரு காகிதம் அடைப்பது போன்று ஏற்பட்டு திரவ வெளியேற்றத்தை தடுக்கும். இதனால் வேகமாக அழுத்தம் அதிகரித்து பார்வை மங்கல், கடும் வலி, குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி ஏற்படலாம். இந்த நிலை உடனடியாக கண் மருத்துவரை ஆலோசிக்க பரிந்துரை செய்கிறது. தவறினால் பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

குறை விறைப்பு குளுக்கோமா (Low Tention GLAUCOMA)

குளுக்கோமா வகையிலேயே இது ஒரு புதிரான தன்மை கொண்டது. கண்களில் உள்ள திரவத்தின் அழுத்தம் சாதாரணமாக இருக்கும் போது கூட optic nerve பழுதடையும் நிலை இது. பார்வை நரம்பிற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் இறுக்கமடைவதால் இவ்வகை குளுக்கோமா ஏற்படுவதாக சமீப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் கட்ட குளுக்கோமா

நீரிழிவு அல்லது எரிச்சல், வீக்கம், கண்புரை தீவிரமடைந்த நிலை, ஸ்டெராய்ட் உள்ளிட்ட மருந்துகள், கண்களில் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றால் திரவ வடிகால் கோணம் சேதமடையும்போது இந்த வகை குளுக்கோமா ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கும் போது குளுக்கோமாவுடன் சேர்த்து அடிப்படை பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிறவி அல்லது வளர்ச்சி நிலை குளுக்கோமா

குழந்தைகளையும், இளம் வயதினரையும் பாதிக்கும் மிகவும் அரிதான வகை குளுக்கோமா இதுவே. இதுவம்சாவழியாகவோ அல்லது குழந்தை கருப்பையில் வளரும்போது அதன் கண் திரவ வடிகால் பாதைகள் வளரும்போது தவறாகவோ அல்லது பூர்த்தியடையாத வளர்ச்சியாகவோ அமைந்தால் ஏற்படும். குழந்தைகளிடம் பெற்றோர்கள் கீழ்வரும் அறிகுறிகளை கவனிப்பது நல்லது. விழி பெரிதாகுதல், விழிவெண்படலத்தில் மறைப்பு, கண்ணீர் அதிகமாக வருதல், வெளிச்சத்தை குழந்தை தவிர்த்தல் ஆகிய அறிகுறிகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இத்தகைய நிலையில் குழந்தையை உடனே கண் மருத்துவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும், மறத்துப்போகும் மருந்து கொடுத்து மருத்துவர்கள் விரிவான பரிசோதனை மேற்கொள்வார்கள்.

நோயறிதல்

இந்நோய் அறிய 4 முக்கிய விஷயங்கள் கவனிக்கப்படும் கண் திரவ அழுத்தம், முன்பகுதியில் உள்ள அறையின் கோணம் optic nerve வடிவம் மற்றும் நிறம் மற்றும் பார்வைப்புலம் ஆகியவைகள் கவனிக்கப்படும். குளுக்கோமா பெரும்பாலும் கட்டுப்பாட்டில் வைக்கப்படலாமே தவிர முழு குணம் சாத்தியமில்லை. பார்வையை அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டிருப்பதன் மூலம் இந்நோய் ஏற்படுவதை தடுக்கலாம், இதனால் மருத்துவரின் ஆலோசனைகளை அடிக்கடி பெறும்போதும், மருத்துவ அறிவுரைகளை தவறாமல் கடைபிடிப்பவர்களும் இதிலிருந்து பெரும்பாலும் தப்பி விடுகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum