தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தோள்பட்டை வலிகளுக்கு ஒரு எளிய தீர்வு!

Go down

தோள்பட்டை வலிகளுக்கு ஒரு எளிய தீர்வு!  Empty தோள்பட்டை வலிகளுக்கு ஒரு எளிய தீர்வு!

Post  meenu Wed Feb 27, 2013 2:35 pm

மனிதனின் வலிமையைக் குறிப்பிடும் போது அவன் தோள் வலிமைமிக்கவன் என்கிறோம். மனிதனின் வலிமையின் அடையாளமாக இருப்பது தோள்கள். மனிதனால் அதிக எடை தாங்கும் பகுதி தோள்பட்டை தான் என்றால் மாற்றுக் கருத்து கிடையாது. எந்தச் சுமையையும் சுமக்கும் சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்....

மனிதனின் இயக்கமே தடைபட்டு விடும். ஏனென்றால் தோள்களின் இயக்கத்தில் முதலில் பாதிப்பது கைகள்தான்.

தோள்பட்டை வலிகள், எலும்பு முறிவு போன்றவை முன்பெல்லாம் கவலைக்கும் பீதிக்கும் உரியவையாக இருந்தன. இப்போது நவீன மருத்துவ முன்னேற்றத்தில் தோள்களின் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வுள்ள சிகிச்சை முறைகள் வந்து விட்டன என்கிறார் நந்தனம் அப்போலோ மருத்துவமனை டாக்டர் விஜய். சி. போஸ். தோள்பட்டை மூட்டு இணைப்பு சிகிச்சையில் நிபுணராக விளங்கும் இவரை சந்தித்த போது.

இந்த தோள்பட்டை பாதிப்புகள் குறிப்பிட்ட தொழில் செய்பவர்களுக்கு வருகிற நோயா?

இது ஒப்பிட்டுப் பார்த்தால் அதிகம் பெண்களுக்கு வரும். கைகளை உயரே தூக்கி இயங்கும் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள், டென்னிஸ் விளையாடுபவர்கள், பந்தை வேகமாக வீசி எறிகிறவர்கள் ஆகியோருக்கு வரக் கூடும். நம் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத் இருவரும் இவ்வாறு கீ ஹோல் சர்ஜரி செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோது கீ ஹோல் இங்கு பிரபலமாகவில்லை. எனவே வெளிநாட்டில் செய்து கொண்டார்கள். இப்போதெல்லாம் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

தோள்பட்டை வலி யாருக்கு வரும்? எப்போது வரும்?

இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதை மூன்று வகையாகப் பார்க்கலாம். முதலில் வயதானவர்களுக்கு வருவது. தோள்பட்டை தசைகள் இறுகிவிடும். கையை மேலே அசைக்கக் கூட முடியாது. அடுத்தது... இளைஞர்களுக்கு மூட்டு விலகி இந்த வலி ஏற்படுவது. மூன்றாவது ரகம் நடுத்தர வயதினருக்கு வருவது, இது மூட்டுவலியாக வரும்.

எதனால் இந்த வலி வருகிறது?

வயதானவர்களுக்கு வருவதில் 75% சர்க்கரை நோயினால் வருகிறது. சர்க்கரை நோயால் தசைகள் இறுகி தோள்பட்டை மூட்டுகள் இறுகப்பட்டு வலி உண்டாகும். இளைஞர்களுக்கு அடிபடுதல், கீழே விழுதல் போன்றவற்றாலும் சிலருக்கு தோள்பட்டையில் கால்சியம் அதிகமாகச் சேர்ந்து விடுவதாலும் இந்த வலி வருகிறது. பக்கவாதம் வந்தவர்களுக்கும் வரும்.

இந்த தோள்பட்டை வலிக்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வா?

அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று எந்த டாக்டரும் சொல்வது கிடையாது. முடிந்தவரை மருந்துகளால் குணப்படுத்தப் பார்ப்பார்கள். தோளில் சாதாரணமாகத் தோன்றும் வலிகளுக்கு மருந்துகள் உண்டு. ஆனால் மூட்டு எலும்புகள் உராய்தல், எலும்பு உடைந்து விடுதல், மூட்டுகள் இறுக்கமடைந்து விடுதல் போன்றவற்றுக்கு அறுவை சிகிச்சை கீ ஹோல் சிகிச்சை செய்யலாம்.

எலும்புகள் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால் மருந்து மாத்திரை மட்டுமே பயனளிக்காது. வாதம் வந்த கைகளை இயக்க முடியாதவர்களுக்கு அறுவை சிகிச்சைதான் பலனளிக்கும்.

தோள்பட்டை எலும்பு பிரச்சினைகளுக்கு என்ன மாதிரியான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன?

சிலருக்கு தோள்பட்டை எலும்பு மூட்டுகளுக்கிடையே உள்ள தசைகள் பலவீனமடைந்து இருக்கும். சிலருக்கு இவை கிழிந்து போயிருக்கும். இதனால் மூட்டு எலும்புகளுக்கிடையே உரிய இடைவெளி குறைந்து எலும்புகள் உரசி தாங்க முடியாத வலி ஏற்படும். கைகளை தூக்கவோ அசைக்கவோ முடியாது. இவர்களுக்கு முன்பிருந்த சிகிச்சை முறை அறுவை சிகிச்சையில் அறுத்து திறந்து எலும்புகளை இணைக்க இரும்பு பிளேட் போட வேண்டும். இதற்குப் பலமணி நேரமாகும். மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு மேல் தங்க வேண்டும்.

இப்போதுள்ள புதிய முறை?

இப்போது அதிநவீன முறை வந்துவிட்டது. கம்ப்யூட்டர் உதவியால் மிகத்துல்லியமாக பார்த்துக் கொண்டே செய்யப்படுகிறது. இப்போதைய சிகிச்சை முறைக்கு "கீ ஹோல் சர்ஜரி" முறை என்று பெயர். இதன் மூலம் அறுத்தெடுக்காமல் ரத்த சேதாரமில்லாமல், தையல் இல்லாமல் செய்யப்படுகிற சர்ஜரி இது. பேனா முனை போன்ற ஊசியை உட்செலுத்தி கம்ப்யூட்டர் உதவியால் பிரச்சினைக்குரிய பகுதியை ஆராய்ந்து செய்யப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் "கத்தியின்றி ரத்தமின்றி" நடக்கிற சர்ஜரி இது. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நடக்கும் இதைச் செய்து கொண்டவர்கள் காலையில் வந்து அன்று மாலையே வீடு திரும்பி விடலாம்.

தோள்பட்டையின் எல்லாப் பிரச்சினைக்கும் கீ ஹோல் சிகிச்சை தர முடியுமா?

தோள்பட்டை மூட்டு எலும்பு உராய்தல் சிலருக்கு வரும் ஒரு வகை பொதுவாக சுமை தூக்குவோர், எலும்பு பலவீனமுள்ளோர்க்கு தோள்பட்டை மூட்டுப் பிரச்சினை வரும். இவர்களுக்கு தோளில் மரத்துப்போக ஓர் ஊசி போடப்பட்டு பின்னர் சிறிய பேனாமுனை அளவுள்ள ஒரு கருவியை தோள்பட்டைக்குள் செலுத்தி கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டே பாதிப்பை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். சிலருக்கு தோள்பட்டையில் கால்சியம் அதிகம் சேரும். ஏனென்று காரணம் அறிய முடியாத பிரச்சினை. இந்த "கீ ஹோல்" மூலம் இந்தக் கால்சியத்தை எடுத்துவிட முடியும். எலும்புகள் நொறுங்கிவிட்டாலோ முழுதும் சேதமடைந்து விட்டாலோ "ரீ சர்பேசிங்" என்னும் முறையில் சரி செய்துவிட முடியும். இதன்படி பந்து கிண்ண மூட்டை அகற்றாமலும், அகற்றியும் மருத்துவமனையில் ஐந்தாறு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். இதற்கும் அதிநவீன "கீ ஹோல்ஸ்" சர்ஜரி மூலம் நவீன கருவிகளின் உதவிகளுடன் சரிப்படுத்தி முறிந்த எலும்புகளை இணைத்து விடலாம். எனவே இந்த "கீ ஹோல்" சர்ஜரி மருத்துவ உலகின் வரப்பிரசாதம் எனலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum