தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சிக் கருவிகள் உதவுமா

Go down

உடற்பயிற்சிக் கருவிகள் உதவுமா   Empty உடற்பயிற்சிக் கருவிகள் உதவுமா

Post  ishwarya Wed Feb 27, 2013 2:10 pm

குண்டான நபர்களை அரிதாகப் பார்த்த காலம் மாறி, இன்று வீட்டுக்கொரு நபரை அப்படிப் பார்க்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரிடமும் பருமன்! பற பற லைஃப் ஸ்டைலில் ஜிம்முக்கு போக எத்தனை பேருக்கு நேரமிருக்கிறது? விளைவு? பத்தே நாள்களில் மாயம் செய்வதாக ஏமாற்றும் எடைக்குறைப்புக் கருவிகளை வாங்கி, வீட்டிலேயே பயிற்சி செய்கிற நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி நல்ல விஷயம்தான்! ஆனால் யார் வேண்டுமானாலும், எந்தக் கருவியில் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாமா?

ஹெல்த் ஃபிட்னஸ் ஆலோசகர் அதுல்யா என்ன சொல்கிறார்? ‘‘உடற்பயிற்சி நல்ல விஷயம்தான். ஆனா, யார் வேணா, எந்தப் பயிற்சியை வேணா செய்யக் கூடாது. எந்த நோய்களும் இல்லாத, ஒரே மாதிரியான ரெண்டு நபர்களுக்கே கூட, ஒரே பயிற்சிகளைப் பரிந்துரைக்க முடியாது. ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட உடலமைப்பு, எடை, உயரம், அவங்களோட உபாதைகள், வேறு பிரச்னைகள்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டுத்தான், அவங்களுக்கேத்த பயிற்சிகளைச் சொல்ல முடியும்.

ஜிம்ல சேர வர்றவங்களை முதல் நாளே எந்தப் பயிற்சியும் செய்ய அனுமதிக்க மாட்டோம். மேல சொன்ன விஷயங்களை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அடுத்து ‘டெக்ஸா’ன்னு ஒரு ஸ்கேன் எடுக்கச் சொல்வோம். அது மூலமா அவங்க உடம்புல உள்ள கொழுப்போட அளவு தெரியும். அவங்களுக்கான பயிற்சியைப் பரிந்துரைக்க, அந்தக் கொழுப்போட அளவைத் தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம்.

இன்னிக்கு நேரமில்லாத காரணத்தால, பலரும் வீட்லயே டிரெட்மில்லையோ, விளம்பரத்துல பார்க்கிற உடற்பயிற்சிக் கருவியையோ வாங்கி வச்சுக்கிட்டு முயற்சி பண்றாங்க. முதல் விஷயம் அதை முறைப்படி உபயோகிக்கத் தெரிஞ்சிருக்காது. எந்த வேகத்துல செய்யணும்னு தெரியாது.
ஆரம்ப ஜோர்லயும், ஆர்வக் கோளாறுலயும் முதல் 6-12 வாரங்கள்ல அவங்க ஒரு மாற்றத்தை உணர்வாங்க. 12 வாரங்களுக்குப் பிறகு அந்தக் கருவியை உபயோகிக்கிறதால தொடர்ந்து எந்த மாற்றமும் இருக் காது. கொஞ்ச நாள்லயே அந்தக் கருவி உபயோகமில்லாம, வீட்டு மூலைக்குப் போயிடும்.

எக்சர்சைஸ் பண்ற எல்லாரும் ஒரு விஷயத்தை கவனத்துல வச்சுக்கணும். நம்ம உடம்பு தசை மற்றும் கொழுப்போட கலவை. வாக்கிங், ஸ்விம்மிங், ஜாகிங் உள்ளிட்ட பயிற்சிகள் எல்லாமே தசை இழப்புக்குத்தான் காரணமாகுமே தவிர கொழுப்பைக் கரைக்காது. எடையைக் குறைக்கணும்னா, கொழுப்புதான் குறையணும். தசை இழப்பு தொடர்ந்தா, உடம்புதான் பலவீனமாகுமே தவிர, வேற பலன்கள் இருக்காது.

‘எங்களுக்கு வீட்ல பண்றதைத் தவிர வேற வழியே இல்லை’னு நினைக்கிறவங்க, முதல்ல ஒரு உடற்பயிற்சி ஆலோசகரை சந்திச்சு, ஆலோசனை கேட்டுக்கலாம். தசை இழப்பு ஏற்படாதபடி, அதே வேளை கொழுப்பும் குறையற மாதிரியான பயிற்சிகளையும், வீட்லயே உபயோகிக்கக்கூடிய உடற்பயிற்சிக் கருவிகளைப் பத்தியும் அவங்க சொல்ற ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கலாம். உடம்பு சரியில்லைன்னா, நாமே சுய மருத்துவம் பண்றது எவ்வளவு ஆபத்தானதோ, அதே மாதிரிதான், அடிப்படை விஷயங்கள் தெரியாம, நாமாகவே உடற்பயிற்சிகள் பண்றதும்...’’அலெர்ட் செய்கிறார் அதுல்யா!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum