கூந்தல் வறட்சிக்கு என்ன காரணம்
Page 1 of 1
கூந்தல் வறட்சிக்கு என்ன காரணம்
முடி வளர்ச்சி
முடியானது ஒரு மாதத்தில் 1.25 செ.மீ. முதல் 0.5 அங்குலம் வரை (அதாவது வருடத்துக்கு 15 செ.மீ அல்லது 6 அங்குலம்) வளரும். வயதாக ஆக, இந்த வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு மாத வளர்ச்சியானது 0.25 செ.மீ. அல்லது 0.1 அங்குலம் வரை குறையக் கூடும். பொதுவாக வெயில் காலத்தில் முடி வளர்ச்சி அதிகமாகவும், குளிர் காலத்தில் குறைவாகவும் இருக்கும். பிறக்கும்போதே நம் மண்டையில் எத்தனை முடிகள் இருக்கப் போகின்றன என்பது தீர்மானிக்கப்பட்டு விடும். பிறகு அதை மாற்ற முடியாது. சராசரியாக ஒருவரது மண்டையில் 1 லட்சத்து 20 ஆயிரம் முடிகள் இருக்கும். அதில் தினமும் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது. அந்த இடத்தில் புதிய முடிகள் வளர்ந்து விடும். முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர வாய்ப்பில்லாத நிலையில்தான் வழுக்கை ஆரம்பமாகிறது. முடி வளர்ச்சியில் 3 நிலைகள் உள்ளன.
முதல் நிலையான ‘அனாஜ’ னில், முடியின் பல்பு பகுதியில் இருந்து புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும். அடுத்த நிலையான ‘கேடஜ’னில், வளர்ச்சி ஏதும் இருக்காது. முடி வளரவோ, உதிரவோ செய்யாமல் அப்படியே இருக்கும். மூன்றாவதான ‘டெலோஜெ’னில், புதிய முடிகள் வளர்ந்ததால் பழைய முடிகள் உதிர ஆரம்பிக்கும். இந்த மூன்றின் சுழற்சியும் பரம்பரைத் தன்மையைப் பொறுத்து ஒவ்வொவருக்கும் மாறுபடலாம்.
புரதச்சத்துக் குறைபாடு, அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பது, எண்ணெயே தடவாதது, கூந்தலை உலர்த்த ட்ரையர் உபயோகிப்பது, ஹார்மோன் சிதைவு என இதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வறட்சி நீக்கும் எண்ணெய்களை உபயோகிப்பதும், புரதமும், லினோலிக் அமிலமும் நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் பலன் தரும்.
பிரச்னைகளைப் பட்டியலிட்ட டாக்டர் ஞானசம்பந்தம், கூந்தல் ஆரோக்கியத்துக்கான பொதுவான ஆலோசனைகளை அறிவுறுத்துகிறார்.
* ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்குக் குளிப்பது நல்லது.
* சீப்பு, ஹேர் பிரஷ் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
* பால், முட்டை, மீன், கேரட், பீட்ரூட், கீரை, எள், பேரீச்சம்பழம், கேழ்வரகு போன்றவை முடியின் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள்.
* டென்ஷன் இல்லாத வாழ்க்கை முறைக்குப் பழகவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
» மூட்டு வலிக்கு என்ன காரணம்!
» உடல் எடை குறைய என்ன காரணம்?
» புறக் கர்ப்பம் ஏற்படக் காரணம் என்ன?
» உடல் எடை குறைய என்ன காரணம்?
» மூட்டு வலிக்கு என்ன காரணம்!
» உடல் எடை குறைய என்ன காரணம்?
» புறக் கர்ப்பம் ஏற்படக் காரணம் என்ன?
» உடல் எடை குறைய என்ன காரணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum