மூட்டு வலிக்கு என்ன காரணம்!
Page 1 of 1
மூட்டு வலிக்கு என்ன காரணம்!
கல்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, உடலில் தோன்றும் இரசாயன மாற்றங்கள், இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
அறிகுறிகள்:
~ மூட்டுகளில் வலி, வீக்கம் காணப்படும். மூட்டுகள் உஷ்ணமாக இருக்கும்.
~ உடல் அசதி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
~ மூட்டுகள் மட்டும் பாதிக்காமல் இதயம், நுரையீரல் போன்றவையும் பாதிக்கப்பட்டிருக்கும்.
~ நோயின் தன்மை தீவிரமடையும்போது உடலில் கழலைகள் போல தோன்றும். இந்நிலையில் தீவிர சிகிச்சை அவசியம்.
செய்ய வேண்டியவை:
~ நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். நிற்கும் பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.
~ குதிக்கால் உயர்ந்த காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
~ நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணிகளை மாற்ற வேண்டும்.
~ எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்பு தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம்.
~ வலியின் தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க வேண்டும்.
~ நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது வலியை நன்கு குறைக்கும்.
~ அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். கல்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது.
~ உடற்பயிற்சி தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.
~ வலியை மறப்பதற்கு மற்ற விடயங்களில் கவனத்தை திசைதிருப்ப வேண்டும். வலியைப் பற்றியே நினைக்கும் பொழுது நோயின் தீவிரம் அதிகமாகத் தெரியும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூட்டு வலிக்கு முடிவு
» மூட்டு வலிக்கு முட்டுக்கட்டை
» காதல் கொலைகள் காரணம் என்ன?
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
» உடல் எடை குறைய என்ன காரணம்?
» மூட்டு வலிக்கு முட்டுக்கட்டை
» காதல் கொலைகள் காரணம் என்ன?
» ஆண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?
» உடல் எடை குறைய என்ன காரணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum