தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேன்சரை தரும் கலப்பட மிளகாய்த்தூள்

Go down

கேன்சரை தரும் கலப்பட மிளகாய்த்தூள்  Empty கேன்சரை தரும் கலப்பட மிளகாய்த்தூள்

Post  ishwarya Wed Feb 27, 2013 1:37 pm

அஞ்சறைப்பெட்டி’ சாமான்கள் எனப்படும் கடுகு, சீரகம், பூண்டு, வெந்தயம், மஞ்சள் உள்ளிட்ட 52 வகையான பொருட்கள் காலம்காலமாக இந்தியாவிலிருந்துதான் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. சர்வதேச மார்க்கெட்டில் இந்திய அயிட்டங்களுக்கு ஏக கிராக்கி. இந்திய மிளகாய் இருந்தால்தான் இத்தாலிய பீட்ஸா கூட ருசிக்கும். ரத்தச் சிவப்பில் இருக்கும் மிளகாய்த் தூளே தரம் ப்ளஸ் காரமானது என்பது மக்களின் நம்பிக்கை. அந்த நிறத்தை செயற்கையாகக் கொண்டு வரத்தான் கலக்கப்படுகிறது வேதிப் பொருளான ‘சூடான் - 1’. கடுகளவு தூளாக கல்லீரலில் நுழையும் இந்த வேதிப் பொருள், போகப்போகப் பூஞ்சை போல் வளர்ந்து நாளடைவில் கேன்சரில் கொண்டு போய் நிறுத்தும் என்பதுதான் இங்கு எச்சரிக்கைத் தகவல்!

இங்கிருந்து ஏற்றுமதியாகும் மசாலாக்கள் தரமானவைதானா என்று பரிசோதித்து சான்றளிக்க வேண்டியது ‘ஸ்பைசஸ் போர்டு’ எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தின் பொறுப்பு. சமீபத்தில் சென்னையிலிருந்து கனடாவுக்கு டன் கணக்கில் ஏற்றுமதிக்குத் தயாரான ஊறுகாய் மற்றும் மசாலாத் தூளை வழக்கம்போல சோதித்தார்கள். ஆய்வக சோதனை தந்த ரிசல்ட்தான், மேற்படி சூடான ‘சூடான் - 1’ விவகாரம்.

‘‘இந்தியாவுக்கே இந்தக் கலப்படம் ரொம்பப் புதுசு. முதல்ல எங்க கெமிஸ்ட்டுகளாலயே இதை ஈசியா கண்டுபிடிக்க முடியல. அடுத்தடுத்த பரிசோதனைகளுக்குப் பிறகுதான் உறுதிப்படுத்துனோம். உடனடியா மத்திய அரசுக்குத் தெரிவிச்சிட்டதால, அவங்களும் எல்லா மாநிலங்களுக்கும் எச்சரிக்கை பண்ணியிருக்காங்க’’ என்ற ஸ்பைசஸ் போர்டு துணை இயக்குனர் ராய் ஜோசப், இந்த நடவடிக்கையில் உடனிருந்த செக்ஷன் அதிகாரி தங்கவேலுவை நம்மிடம் அறிமுகப்படுத்தினார்.

‘‘இந்த ‘சூடான் - 1’ங்கறது மெழுகு, ஷூ பாலிஷ், இன்னும் சில வகை ஆயில்கள்ல கலருக்காக சேர்க்கப் படுற ஒரு பொருள். நாப்தால் வகையைச் சேர்ந்தது. தூள் வடிவத்துலதான் இருக்கும். உணவுப் பொருட்கள்ல இதைக் கலப்படம் பண்ற மோசடி முதல்ல ஐரோப்பிய நாடுகள்லதான் ஆரம்பிச்சிருக்கு. இந்த ‘சூடான் -1’ புற்றுநோய்க்குக் காரணமா இருக்குங்கறது ஆராய்ச்சிகள்ல நிரூபணமாகி இருக்கு. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள்ல இந்தக் கலப்படத்தைத் தடை பண்ணிட்டாங்க. வர்த்தக ரீதியா ஐரோப்பிய நாடுகளோட தொடர்பு வச்சிருக்கிற சிலர்தான், இந்த வேலையை இங்க ஆரம்பிச்சிருக்கணும். இந்தக் கலப்படத்தை நாங்க வெளிச்சம் போட்டுக் காட்டினப்புறம், மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பல இடங்கள்ல அதிரடி சோதனை நடத்தியிருக்கு. விளைச்சல்லயே தரக்குறைவானதுன்னு ஒதுக்கப்படற மிளகாயை அரைக்கும்போது, அது சிவப்பு கலர்ல வராது. ‘சூடான் - 1’ பவுடரைக் கரைச்சு, அந்த மிளகாய்த் தூள் மேல ஸ்பிரே பண்றாங்க. இப்படி செய்தபிறகு அது முதல்தர மிளகாய்த்தூள் மாதிரி ஆகிடுது. அதுல செய்யற அத்தனை உணவுப் பொருட்கள்லயும் இந்த கெமிக்கல் கலந்து உடம்புக்குள்ள போகுது. ரொம்ப ஆபத்தான விஷயம் இது!’’ என்கிற தங்கவேலு, அடுத்துச் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

‘‘ஏற்றுமதி ஆகிறதைத்தான் நாங்க தடுக்க முடியும். அதே கலப்பட வியாபாரிங்கதான் உள்நாட்டுலயும் மிளகாய்ப் பொருட்களை விக்கறாங்க. பெட்டிக்கடையில இருந்து புரொவிஷனல் ஸ்டோர் வரை பாக்கெட்கள்ல பளபளக்குற வத்தல்கள், மசாலா பவுடர்கள், பேஸ்ட்டுகள், ஊறுகாய் அயிட்டங்கள்ல இந்தக் கலப்படம் இருக்காதுங்கறதுக்கு எந்த உத்தரவாதமும் இல்ல. இதையெல்லாம் தமிழக அரசின் சுகாதாரத் துறைதான் தடுக்கணும். எங்க பங்குக்கு நாங்க எச்சரிக்கை தந்துட்டோம்!’’ என்று முடித்துக் கொண்டார் தங்கவேலு.

‘‘புற்றுநோய்க்குக் காரணமாகுதுன்னு தினம் தினம் ஒரு பொருள் மேல புகார் வந்துக்கிட்டே இருக்கு. சுமாரா 500 வேதிப்பொருள்கள் இப்ப அந்த லிஸ்ட்டுல இருக்கு. ‘சூடான் - 1’ங்கற பேரே நம்ம நாட்டுல இப்பதான் அறியப்படுது. அதனால ரிசர்ச் பண்ணித்தான் இதுபத்தி மேற்கொண்டு சொல்ல முடியும்’’ என்கிறார்கள் புற்றுநோய் மருத்துவர்கள்.

கலப்படம் செய்யும் வியாபாரிகள் மட்டும் ஃபாரின் மிளகாயையா பயன்படுத்தப் போகிறார்கள். இது அவர்களையும் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்வார்களா? - மதுரை வணிகர் சங்க பிரதிநிதி சுபாஷ் சந்திரபோஸிடம் பேசினோம்.

‘‘உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டம்னு 1956ம் வருஷம் கொண்டு வந்தாங்க. தொண்ணூறாம் வருஷம் அந்தச் சட்டமே தப்புன்னு உச்ச நீதிமன்றத்துல ஒரு நிறுவனம் தடை வாங்குச்சு. அதுவரைக்கும் அந்தச் சட்டத்தால அபராதம் கட்டின இந்திய வியாபாரிகளுக்கெல்லாம் போன பணம் போனதுதான். இப்ப ‘உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டம்’னு ஒண்ணு கொண்டு வரப்போறதா சொல்லிட்டிருக்காங்க. கலப் படம்ங்கிற வார்த்தைக்கே இங்க தெளிவான வரையறை இல்ல.

நிலத்துல விளையற எல்லாப் பொருளுமே மூணு ரகமாத்தான் கிடைக்குது. முதல் ரகம் மட்டும் ஓகே... மத்ததெல்லாம் கலப்படம்ங்கிற மாதிரிதான் இன்னிக்குச் சட்டம் சொல்லுது. மட்டமா விளைஞ்ச அந்தப் பொருட்களை வச்சுக்கிட்டு விவசாயியோ அல்லது வியாபாரியோதான் என்ன செய்யறது? அதையும் ரேட்டைக் குறைச்சு விக்கிறாங்க. அதனாலெல்லாம் பெரிய பாதிப்பு வரும்கிறதை ஏத்துக்க முடியாது. மத்தபடி கெமிக்கலை கலந்து மக்கள் உயிரோட விளையாடறவங்களை நாங்க வியாபாரிங்க லிஸ்ட்லயே வைக்கிறதில்ல. அப்படிப்பட்டவங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலாம். இதுல நாங்க தலையிட மாட்டோம்’’ என்றார் சுபாஷ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum