ஜப்பானில் தற்கொலை, மன அழுத்தம் = 32 பில்லியன் இழப்பு
Page 1 of 1
ஜப்பானில் தற்கொலை, மன அழுத்தம் = 32 பில்லியன் இழப்பு
தற்கொலை செய்து கொள்பவர்களால் ஏற்படும் வருவாய் இழப்பு, மன அழுத்தம் காரணமாக ஆகும் மருத்துவ இழப்பீடு மற்றும் செலவுகள் ஆகியவற்றால் மட்டும் கடந்த ஆண்டு ஜப்பான் 32 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.
ஜப்பானில் கடந்த ஆண்டு மட்டும் 26,500 பேர் தற்கொலை செய்துகொண்டு மாண்டுள்ளனர். அவர்கள் மட்டும் உயிரோடு இருந்து ஒராண்டு காலத்திற்கு பணியாற்றியிருந்தால் அவர்களால் அந்நாட்டிற்கு 1.9 டிரில்லியன் யென் வருவாய் கிட்டியிருக்கும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர்களால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவு ஆகிய அனைத்தையும் கூட்டினால் கடந்த ஆண்டில் 2.68 டிரில்லியன் யென் (31.8 பில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஜப்பான் அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது.
12.7 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பான் நாட்டில்தான் உலகிலேயே அதிக அளவிற்கு தற்கொலைகளும் நடக்கின்றன. அமெரிக்காவிற்குப் பிறகு பெரிய பொருளாதார வளமிக்க நாடு (இப்போது அந்த இடத்தை சீனா கைப்பற்றியுள்ளது) என பெருமைக் கொண்ட ஜப்பானில் 2008ஆம் ஆண்டில் 32,845 பேர் தற்கொலை செய்துக் கொண்டு மாண்டுள்ளனர்.
30 ஆயிரம் பேருக்கு மேல் தற்கொலை செய்துக் கொண்டு மாள்வது அநநாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்கிறது!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை: நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» ஜப்பானில் எந்திரன்
» ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்...
» வாழைப்பழத்தை கண்டுக்காததால் இழப்பு எவ்வளவு என உங்களுக்கு தெரியுமா
» ஜப்பானில் சித்தார்த்- ஹன்ஷிகா ஜோடியின் ரொமான்ஸ்.
» ஜப்பானில் எந்திரன்
» ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்...
» வாழைப்பழத்தை கண்டுக்காததால் இழப்பு எவ்வளவு என உங்களுக்கு தெரியுமா
» ஜப்பானில் சித்தார்த்- ஹன்ஷிகா ஜோடியின் ரொமான்ஸ்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum