தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜப்பானில் எந்திரன்

Go down

ஜப்பானில் எந்திரன்                                 Empty ஜப்பானில் எந்திரன்

Post  ishwarya Mon Mar 11, 2013 1:18 pm


முத்து ஜப்பானில் ஓடிய போது அது ஏதோ லக் கில் ஓடியது என்றுதான் பலரும் நினைத்தனர். ரஜினியின் எதிரிகளுக்கு இது ரொம்பவே வசதியாக இருந்தது. ப்ளூக்ல அடிச்ச ஜாக்பாட் என்று திருப்திப்பட்டுக் கொண்டனர்.

ஆனால் இந்தமுறை அப்படியெல்லாம் இருந்துவிட முடியாது.

சென்ற மாதம் எந்திரன் ஜப்பானில் வெளியானது. பஞ்சத்துக்கு இரண்டு மூன்று தியேட்டர்களில் வெளியீடுவார்களே... அப்படியெல்லாம் இல்லை. மொத்தம் 1300 தியேட்டர்கள். எல்லா தியேட்டர்களிலும் திருவிழாக் கூட்டம். சும்மா வந்து கைத்தட்டிவிட்டுப் போனால் பரவாயில்லை. ரஜினியின் போஸ்டருடன் போஸ் கொடுத்து அதகளம் செய்கிறார்கள்.


படத்தில் வரும் இரும்பிலே ஒரு இருதயம்தான் இப்போதைக்கு ஜப்பானின் தேசியகீதம். அவர்களுக்கு படம் பிடிக்குமோ பிடிக்காதோ என்ற எண்ணத்தில் பல காட்சிகளை எடிட் செய்து இரண்டு மணிநேர படமாக ஓட்டினார்களாம். படம் நன்றாக பிக்கப்பாக மொத்தப் படத்தையும் சிங்கிள் கட் இல்லாமல் ஓட்டுகிறார்களாம்.

ரஜினி கொசு பிடிக்கிற காட்சிக்காக மட்டும் உலக அளவில் ஓட வேண்டிய படம் எந்திரன். ஜப்பான் அளவிலாவது ஓடுகிறதே என்று திருப்திப்பட்டுக் கொள்வோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum