தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இடுப்பில் சதை போட்டால்

Go down

இடுப்பில் சதை போட்டால்                Empty இடுப்பில் சதை போட்டால்

Post  ishwarya Wed Feb 27, 2013 12:37 pm

பெண்களுக்கு இடுப்பு சதை பெரும் பிரச்னையாக இருக்கிறது. சில பெண்களுக்கு உணவு பழக்க வழக்கத்தால், இளம் வயதிலேயே வயிற்றில் சதை விழுந்து, மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாவார்கள். சதைகள் தொங்கி இளமையிலேயே முதுமையானவர்கள்போல வாழ்கிறார்கள். இதற்கு காரணம், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யாததுதான்.

இத்தகைய பெண்கள் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்து வந்தால் உறுதியான உடம்புடன் கட்டழகை பெறலாம். இப்படி சதை தொங்கி, மடிப்பு மடிப்பு ஆக விழ கொழுப்பு கூடுவதுதான் காரணம். இத்தகைய வேண்டாத கொழுப்புகளை எல்லாம் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி கரைத்து விடும்.

இன்னும் சில பெண்கள் வயிற்றில் தொங்கும் வேண்டாத சதைகளையும், பருமனான உடம்பையும், பெருத்த வயிற்றையும் குறைக்க பெல்லிரோலர், வைபிரேட்டர் போன்ற கருவிகளில் முயற்சி செய்து, பணத்தை ப்யூட்டி பார்லர்களில் செலவு செய்வார்கள். அதன் பின்னரும் வயிறு சதை, குண்டான உடம்பு, பலூன் வயிறு குறையவில்லையே என்று அங்கலாய்ப்பார்கள்.

இவர்கள் லோ-இம்பாக்ட் ஏரோபிக்ஸ் என்கிற உடற்பயிற்சியை செய்து எளிதில் உடல் வளம் பெறலாம். பெண்கள் எடைப் பயிற்சி செய்யலாமா, செய்யக் கூடாதா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் உண்டு. பெண்கள் எடை பயிற்சியினை தவிர்ப்பது நல்லது. பெண்களின் உள் உறுப்புகளில் சில ஆணின் உள் உறுப்புகளில் இருந்து மாறுபட்டிருக்கிறது. பால் சுரப்பிகள், கருப்பைகள், எல்லாம் ஆணிலிருந்து மாறுபட்டிருப்பதால் பெண்கள் எடைப் பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.

பழமொழி படி நடங்க

இன்று விருந்து நாளை உபவாசம்
உபவாசம் என்றால் முழு பட்டினி இருப்பது அல்லது பழரசங்கள் மட்டும் உட்கொள்வதுதான். இன்று தடபுடல் விருந்து சாப்பிட்டீர்களானால், நாளை பட்டினி கிடக்கலாம். மறுநாளும் விருந்து, அடுத்த நாளும் விருந்து என்று போய் கொண்டிருந்தால், வயிறு உப்பிசம், செரியாமை, வயிற்றுப் புண் போன்ற நோய்களில் கொண்டு போய் விட்டுவிடும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum