தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முற்பிறவி மனோவியாதியும், சிறப்பு ஹிப்னாடிக் சிகிச்சையும்

Go down

முற்பிறவி மனோவியாதியும், சிறப்பு ஹிப்னாடிக் சிகிச்சையும்  Empty முற்பிறவி மனோவியாதியும், சிறப்பு ஹிப்னாடிக் சிகிச்சையும்

Post  meenu Wed Feb 27, 2013 12:23 pm

மனோவியாதி என்பது பல்வேறு தருணங்க்ளில், பல காரணங்களினால் ஏற்படுகிறது. மனோவியாதியைப் பொருத்தவரை குணப்படுத்துவதற்கு மருந்து, மாத்திரையை விடவும் கவுன்சலிங் எனப்படும் நோயாளியுடன் அமர்ந்து பேசி அவர்களின் ஆழ்மனதில் என்ன சிந்தனை ஓட்டம் உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதே சிறந்ததாகும்.

அதுபோன்றதொரு சிகிச்சையே ஹிப்னாடிக் சிகிச்சை. இந்த சிகிச்சையுடன் தொடர்புடையது முற்பிறவி மருத்துவ சிகிச்சை எனலாம்.

முற்பிறவி மருத்துவ சிகிச்சை (Past Life Therapy) என்ற தலைப்பில் உளவியல் ஆராய்ச்சிகள் ரஷ்யாவிலும், ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

டாக்டர் வேதமாலிகா
webdunia photo FILE
ஹிப்னோதெரபி சிகிச்சை முறையில், மனவியாதிகள் மருந்தின்றி குணமாக்கப்படுகின்றன. இதனால் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் (side effects) தவிர்க்கப்படுகின்றன.

முற்பிறவியில் நிறைவேறாத நம் ஆசைகள், விட்டுப் பிரிந்து போன காதல் உறவுகள் இப்பிறவியில் நிறைவேறுவதாக அமெரிக்க மனநல மருத்துவர் டாக்டர் பிரெய்ன் கூறுகிறார்.

நாம் முற்பிறவியில் பாதியில் விட்டுப்போன கடமைகளை அறிந்து செயலாற்றவும், இந்த சிகிச்சை உதவுகிறது.

முற்பிறவிகளில் கற்ற கலைகள், கல்வியறிவும் கூட இப்பிறவியில் நம் ஆழ்மனதில் பதிந்துள்ளன. அதை அறிந்து செயல்படுவதால்தான் சிறிய வயதில் கூட பலரால் பெரிய சாதனைகளை புரிய முடிகிறது. அதற்கு இந்த ஹிப்னாடிக் சிகிச்சை உதவுகிறது.

செல் நினைவுத் திறன் (Cellular Memory):

நமது உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் ஆழ்மனதில் பதிந்துள்ள கடந்த கால நினைவுகள் நிறைந்துள்ளன. முந்தைய பிறவியில் நாம் அனுபவித்த இன்ப, துன்பங்கள், உடலில் ஏற்பட்ட வலிகள்-வேதனைகள் அனைத்துமே செல்களில் நிறைந்துள்ளன. அவற்றிற்கு ஏற்றபடிதான் நம் உடலும், உள்ளமும் இயங்குகிறது.

கடந்த கால நினைவலைகள் செல்களில் நீக்கமற நிறைந்திருப்பதால், நமது வாழ்வு பாதிக்க நேரிடுகிறது.

Past Life Theraphy - எனப்படும் மனநல மருத்துவ முறையில் இந்த மனபாதிப்புகளை கண்டறிந்து நீக்கி விட்டால், மனதும் உடலும் எந்த மருந்தும் இல்லாமல் பக்கவிளைவுகளின்றி நிரந்தர குணம் அடைய ஏதுவாகிறது.

மனம் அமைதியாகவும், தெளிவாகவும் இருந்தால், எத்தனையோ உண்மைகள் புரிகின்றன. ஆனால் மனக்குழப்பத்தின் போது ஆறாவது அறிவு செயல்படுவதில்லை. ஆழ்மனதுடன் தொடர்புடைய பிரச்சினை என்பதால், எந்த மருந்தும் குணப்படுத்துவதில்லை.

ஆழ்மனதை ஊடுருவிப் பார்த்து மன பாதிப்புக்கான காரணத்தை அறிந்து, அதற்குரிய சிகிச்சையை அளித்தால், எந்தவித நாட்பட்ட மன வியாதியும் குணமாகி விடுகிறது. இந்த அரிய சிகிச்சை முறைதான் ஹிப்னோதெரபி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum