பல் அறுவை சிகிச்சையும், இருதயப் பிரச்சனைகளும்
Page 1 of 1

பல் அறுவை சிகிச்சை செய்து
கொண்ட சில வாரங்களில் சிலருக்கு இருதயப் பிரச்சனைகள் அல்லது ஸ்ட்ரோக் என்ற
வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக லண்டன் ஈஸ்ட்மென் பல்மருத்துவ
நிறுவனத்தின் மருத்துவர் அயூட்டோ தெரிவித்துள்ளார்.
ஆனால்
இது ஒவ்வொரு பல் சிகிச்சையின் போதும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூற
முடியாது. ஆயினும் இதன் வாய்ப்புகளையும் நாம் ஆய்வு செய்யவேண்டும் என்று
அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால்
ஏன் பல் சிகிச்சையும் இருதய நோயும் தொடர்பு கொள்கின்றன என்பது தெரியவில்லை
என்று கூறும் இந்த மருத்துவர்கள், பல் அறுவைச் சிகிச்சையின் போது
நோயாளிகள் எந்தெந்த மருந்துகளை அதற்கு முன்னர் எடுத்து வருகின்றனர் என்கிற
விவரம் தெரிவதில்லை என்றும் இதனால் அவர்கள் சில மருந்துகளை எடுத்துக்
கொள்ளாமல் இருக்கும் போது இருதய பிரச்சனைகள் மற்றும் ஸ்ட்ரோக் வருவதற்கான
வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று கூறுகின்றனர்.
குறிப்பாக
அமெரிக்காவில் பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் ஒரு சிலருக்கு
அறுவை சிகிச்சை முடிந்து 3 அல்லது 4 வாரங்களில் மாரடைப்பு அல்லது ஸ்ட்ரோக்
ஏற்படுகிறது.
பல்
ஒன்றை எடுக்கும் சாதாரண அறுவை சிகிச்சைக்கும் இது பொருந்தும் ஏனெனில்
அறுவைசிகிச்சைக்குப் பிறகு பாக்டீரியா கிருமி பாதிப்புகளாலும் அழற்சி
முதலானவை ஏற்படுவதாலும் அழற்சியால் குருதிக் குழாய் சேதமடையவும் வாய்ப்பு
உள்ளது. மேலும் அழ்ற்சியினால் ஏற்படும் தழும்புகள் குருதிக்குழாய்களில்
தடைகளை ஏற்படுத்துகின்றன.
இருதய
சிகிச்சை நிபுணரான பிலெடெல்பியாவைச் சேர்ந்த டாக்டர் ஹோவர்ட் வெல்ட்ஸ்
இதனை ஒப்புக் கொள்கிறார். ஆனால் பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டாலே
இருதயப் பிரச்சனைகள், ஸ்ட்ரோக் வருகிறது என்று கூற இடமில்லை. ஆனால்
ஒன்றுக்கொன்று தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறதா என்பதைத்தான் நாங்கள் ஆய்வு
செய்து வருகிறோம் என்கிறார்.
சில
பல் சிகிச்சையின் போது ரத்தம் அதிகம் வருவதைத் தடுக்க நோயாளிகள் ஆஸ்பிரின்
எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆஸ்பிரின்
எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதால் கூட சிலருக்கு
மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்று கூறுகிறார் டாக்டர் வெல்ட்ஸ்.
இப்போதைக்கு
பல் அறுவை சிகிச்சைக்கும் இருதயப் பிரச்சனைகளுக்குமோ அல்லது வலிப்பு
வருவதற்கான சூழ்நிலைகளுக்குமோ தொடர்பு இருப்பதற்கான அத்தாட்சி
இல்லையென்றாலும் பல் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் தங்கள் இருதய
விவரங்களை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்வது நல்லது என்று பரிந்துரை
செய்கிறார் டாக்டர் வெல்ட்ஸ்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதயப் பிரச்சனைகள்!

» மூளைக்கட்டி அறிகுறிகளும் சிகிச்சையும்!
» பெண்களும் பாய்பிரண்ட் பிரச்சனைகளும்!
» ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் சிகிச்சையும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum